search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pushpalatha School"

    • பாளை புஷ்பலதா பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் பள்ளியின் 10-வது விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது.
    • மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு சர்வதேசப் பள்ளியின் கொடியை ஏற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    பாளை புஷ்பலதா பிரிட்டிஷ் இன்டர்நேஷனல் பள்ளி யின் 10-வது விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பட்டாலியன் பாபி ஜோசப் கலந்து கொண்டார்.

    இவ்விழா பள்ளியின் இயக்குனர் டாக்டர்.மரகதவல்லி மற்றும் பள்ளியின் தாளாளர் புஷ்பலதா பூர்ணன் முன்னி லையில் நடை பெற்றது.

    சிறப்பு விருந்தினர் தம் உரையில் மாணவர்கள் குழு விளையாட்டுகள் அல்லது தனி விளையாட்டுகள் மூல மாக தங்கள் விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு சர்வதேசப் பள்ளியின் கொடியை ஏற்றி வைத்து விழாவினை தொடங்கி வைத்தார்.

    கராத்தே, டைஸ், டான் கிராம், ட்ரான்ஸ்பர்மேஷன், இண்டர்செக்ஷன், சர்கிள்ஸ் ஆகிய விளையாட்டு நிகழ்வுகள் அனைத்தும் கணிதத்தை மைய்யப்படுத்தியதாக அமைந்திருந்தது. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் விளையாட்டுத்திறமைகளை வெளிப்படுத்தினர்.

    புஷ்பலதா பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் பெற் றோர்கள் கலந்து கொண்ட னர். பின்னர் பரிசளிப்பு விழா நடை பெற்றது. விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் காட்வின்.எஸ்.லாமுவேல் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • 3 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திறமை தின விழா நடந்தது.
    • ஆடல், பாடல், நாடகம், மவுன மொழி, நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

    நெல்லை:

    பாளை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் 3 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திறமை தின விழா நடந்தது.

    நெல்லை அரசு மருத்துவ கல்லூரி புற்றுநோயியல் மருத்துவர் பிரபுராஜ், அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை எலும்பியல் மருத்துவர் பிரான்சிஸ் ராய் மற்றும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருந்தியல் மருத்துவர் எழில் ரம்யா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

    3-ம் வகுப்பு மாண வர்கள் `பொம்மைகளின் உலகம்' என்ற தலைப்பிலும், 4- ம் வகுப்பு மாணவர்கள் `தாமிரபரணியின் வழித்தடங்கள்' என்ற தலைப்பிலும், 5-ம் வகுப்பு மாணவர்கள் `நாகரீகம்' என்ற தலைப்பிலும் ஆடல், பாடல், நாடகம், மவுன மொழி, நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.

    பல்வேறு நாட்டின் பொம்மைகள், தரணி பாயும் நெல்லையின் சிறப்புகள் மற்றும் பல்வேறு நாட்டின் நாகரீக வளர்ச்சிகளை காட்சிப்படுத்திய விதம் பார்வையாளர்களின் கண்ணையும், கருத்தையும் கவரும் விதமாக அமைந்தது. பள்ளி தாளாளர் புஷ்பலதா பூரணன், பள்ளி முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன், நிர்வாக இயக்குநர் டாக்டர் மரகதவல்லி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

    • பாளை புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் பன்முக சிந்தனையினை மாணவர்களிடையே உருவாக்கும் பொருட்டு சிந்தனை திறன் போட்டி நடைபெற்றது.
    • பள்ளி மாணவர் களுக்கிடையே விளம்பரப் படுத்துதல், வினாடி வினா, நிறுவன வரைபடம் வரைதல், படக்கதை, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி போன்ற பல போட்டிகள் நடைபெற்றன.

    நெல்லை:

    பாளை புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் பன்முக சிந்தனையினை மாணவர்களிடையே உருவாக்கும் பொருட்டு சிந்தனை திறன் போட்டி நடைபெற்றது.

    போட்டியில் நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங் களை சேர்ந்தப் பள்ளிகள் கலந்து கொண்டன. 170-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    தலைமை விருந்தி னர்களாக எழுத்தாளர், சாணக்கிய பொது தலைமைக் கழகத்தின் இயக்குநர், ராதாகிருஷ்ணன் பிள்ளை, ஓய்வு பெற்ற டி.ஜி.பி.சிவநந்தன் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    பள்ளி மாணவர் களுக்கிடையே விளம்பரப் படுத்துதல், வினாடி வினா, நிறுவன வரைபடம் வரைதல், படக்கதை, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி போன்ற பல போட்டிகள் நடைபெற்றன.

    புஷ்பலதா பள்ளியின் பொருளியல், வணிகவியல் மற்றும் ஊடகப்பிரிவு மாணவர்கள் தங்களது பாடப்பிரிவு சார்ந்த விளக்கங்களையும், தலைப்புகளையும் விளக்கும் பொருட்டு விளக்கப் படங்களையும், மாதிரி வடிவங்களையும் கண்காட்சிகளாகக் காட்சிப்படுத்தினர்.

    இப்போட்டியில் அதிகப் புள்ளிகளைப் பெற்ற தூத்துக்குடி அழகர் பப்ளிக் பள்ளி ஒட்டுமொத்த கேடயத்தினைப் பெற்று முதல் இடத்தையும், சக்தி விநாயகர் பள்ளி 2-ம் இடத்தையும் பெற்றனர்.

    பரிசுகளை தலைமை விருந்தினர்கள் வழங்கி மாணவர்களைப் பாராட்டினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளைப் பள்ளியின் தாளாளர் புஷ்பலதா பூரணன் செய்திருந்தார்.

    • புஷ்பலதா பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பள்ளியின் தாளாளர் புஷ்பலதா பூரணன் கதை பாடல்கள் அடங்கிய புத்தகத்தை மழலையர்களுக்கு வழங்கினார்.

    நெல்லை:

    பாளை புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் மழலையர்களை பள்ளியில் சேர்க்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. மழலை குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்காக ஏராளமான பெற்றோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    ஆசிரியர் உதவியுடன் குழந்தைகள் தங்களது பெற்றோர், தாத்தா பாட்டிகள் மடியில் அமர்ந்து அரிசியில் ஓம் மற்றும் அ என்ற எழுத்தை எழுதித் தங்கள் கல்வியைத் தொடங்கினர்.

    மழலையர்களை ஊக்கு விக்கும் வகையில் பள்ளியின் தாளாளர் புஷ்பலதா பூரணன் கதை பாடல்கள் அடங்கிய புத்தகத்தை மழலையர்களுக்கு வழங்கினார்.

    தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மழலை யர்களுக்கு விளையாட்டுகள், குழந்தை பாடல்கள் போன்றவற்றை கற்றுக் கொடுத்தனர். மழலை யர்களும் இதில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

    • பாளை புஷ்பலதா வித்தியா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது
    • ஏற்பாடுகளை புஷ்பலதா கல்வி குழும தாளாளர் புஷ்பலதா பூரணன் செய்திருந்தார்.

    நெல்லை:

    பாளை புஷ்பலதா வித்தியா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் துர்க்கை, சரஸ்வதி, லெட்சுமி, விநாயகர், மூம்மூர்த்திகள் உள்ளிட்ட வேடங்கள் அணிந்து பள்ளி வளாகத்தில் வைக்கபட்டிருந்த கொழுவின் அருகே காட்சிக்கொடுத்தனர். இதில் பள்ளிஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை புஷ்பலதா கல்வி குழும தாளாளர் புஷ்பலதா பூரணன் செய்திருந்தார்.

    • புஷ்பலதா பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் 95 பேரும், இயற்பியலில் 69 பேரும், வேதியியலில் 57 பேரும், உயிரியலில் 50 பேரும், கணித பாடத்தில் 29 பேரும் ஏ1 கிரேடு எடுத்து உள்ளனர்.
    • கணினி அறிவியலில் 21 பேரும் பொருளாதாரத்தில் 11 பேரும் கணக்குப்பதிவியலில் 9 பேரும், வணிக ஆய்வுகள் பாடத்தில் 3 பேர், தகவல் நடைமுறைகள் 3 பேரும், பயன்பாட்டு கணிதத்தில் ஒரு மாணவரும் ஏ1 கிரேடு எடுத்து உள்ளனர்.

    நெல்லை:

    பாளை புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) 2022-ம் ஆண்டு நடத்திய பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஹரி சபாபதி என்ற மாணவன் 500-க்கு 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    மேலும் இவர் இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஹர்ஷன் என்ற மாணவன் 492 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

    இவர் இயற்பியல் பாடப்பிரிவில் 100 மதிப்பெண் பெற்றுள்ளார். மாணவி ராஜ நிவிஷா 488 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடம் பிடித்தார். இந்த தேர்வில் இயற்பியல் பாடத்தில் 4 மாணவர்களும், வேதியியலில் 2 மாணவர்களும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    இப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் 95 பேரும், இயற்பியலில் 69 பேரும், வேதியியலில் 57 பேரும், உயிரியலில் 50 பேரும், கணித பாடத்தில் 29 பேரும் கணினி அறிவியலில் 21 பேரும் பொருளாதாரத்தில் 11 பேரும் கணக்குப்பதிவியலில் 9 பேரும், வணிக ஆய்வுகள் பாடத்தில் 3 பேர், தகவல் நடைமுறைகள் 3 பேரும், பயன்பாட்டு கணிதத்தில் ஒரு மாணவரும் ஏ1 கிரேடு எடுத்து உள்ளனர்.

    சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் புஷ்பலதா பூரணன் , முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

    • உலக மிதிவண்டி நாளை முன்னிட்டு 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
    • மிதிவண்டி உடல் நலத்திற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் மிதிவண்டி பயன்தரும் முறை குறித்து விளக்கி கூறினர்.

    நெல்லை:

    பாளை புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் உலக மிதிவண்டி நாளை முன்னிட்டு 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

    பள்ளி முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன் தலைமை தாங்கினார். மிதிவண்டி கழகத்தின் தலைவர் டாக்டர் அருள்விஜயகுமார், மிதிவண்டி கழகத்தின் தலைமை அதிகாரி ஹரிபிரதான், ரெனியல் மற்றும் சுல்தான் ஹமீது சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    அவர்கள் பேசும் போது, உலக மிதிவண்டி தினம் கொண்டாடப்படுவதற்கு காரணமாக விளங்கும் மிதிவண்டியின் அசல் தன்மை, பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மை குறித்தும், மிதிவண்டியின் முக்கியத்துவம் பயிற்சி செய்யும் முறை குறித்தும் உரையாற்றினர். மேலும் மிதிவண்டி உடல் நலத்திற்கும், சுற்றுசுழல் பாதுகாப்பிற்கும் மிதிவண்டி பயன்தரும் முறை குறித்து கூறினர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் புஷ்பலதா பூரணன் செய்திருந்தார். இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    ×