search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rail accident"

    • 2023- 24 நிதியாண்டில் மட்டும் நாடு முழுவதும் 40 ரெயில் விபத்துகள் நடந்துள்ளன
    • தகவல் அறியும் உரிமை [RTI] சட்டத்தின் கீழ் ரெயில்வே இந்த பதிலை வழங்கியுள்ளது.

    இந்தியாவில் ரெயில் விபத்துகளும் அதனால் ஏற்படும் மக்களின் உயிரிழப்புகளும் தொடர்கதையாக உள்ள நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ரெயில் விபத்துகளில் சுமார் 748 பேர் உயிரிழந்துள்ள அதிர்ச்சி தகவலை இந்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை [RTI] சட்டத்தின் கீழ் சமூக செயல்பாட்டாளர் ராஜு வலக்கலா என்பவர் கேட்டிருந்த கேள்விக்கு ரெயில்வே இந்த பதிலை வழங்கியுள்ளது.

    அதாவது, 2023- 24 நிதியாண்டில் மட்டும் நாடு முழுவதும் 40 ரெயில் விபத்துகள் நடந்துள்ளன. இதில் 318 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மொத்தமாக 10 ஆண்டுகளில் மொத்தமாக 748 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ரெயில்வேயின் பதில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    அதிகரிக்கும் விபத்துகளுக்கு ரெயில்வே பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதே காரணம் என்று ராஜு தெரிவிக்கிறார். இதற்கிடையே வந்தே பாரத் சொகுசு ரெயில்களை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தாமல் வெகு மக்கள் பயன்படுத்தும் ரெயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கருத்தையும் சமூக செயல்பாட்டாளர்கள் முன்வைக்கின்றனர்.

    • கன்னியாகுமரி-புனே ெரயில் மோதி இறந்து கிடந்தார்.
    • பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கோவை :

    போத்தனூர்- கோவை ரெயில்வே தண்டவாளம் இடையே நஞ்சுண்டாபுரம் அருகே 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கன்னியாகுமரி-புனே ெரயில் மோதி இறந்து கிடந்தார். இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுறை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் வாலிபரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரெயில் மோதி இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. அவர் தண்டவாளத்தை கடந்தபோது ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று போலீசார் 

    உத்தரப்பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் பலியானோர் குடும்பத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர். #UPTrainDerailed #TrainAccident #SoniaGandhi #RahulGandhi
    புதுடெல்லி:

    மேற்கு வங்காள மாநிலம் மால்டா நகரில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் வழியாக டெல்லிக்கு ‘நியூ பராக்கா எக்ஸ்பிரஸ்’ ரெயில் நேற்று இரவு புறப்பட்டது. இன்று காலை உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் ஹர்சந்த்பூர் ரெயில்நிலையம் அருகே வேகமாக சென்று கொண்டிருந்த போது திடீரென ரெயில் தடம் புரண்டது.

    என்ஜின் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த 9 பெட்டிகளும் ஒன்றுடன் ஒன்று மோதி தடம் புரண்டு கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 7 பயணிகள் பலத்த அடிபட்டு இறந்தனர். மேலும் 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

    ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரெயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.



    இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

    உ.பி.யில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

    இதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில், உ.பி. ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகளில் மாநில அரசு விரைந்து ஈடுபட்டிருக்கும் என நம்புகிறேன். காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். #UPTrainDerailed #TrainAccident #SoniaGandhi #RahulGandhi
    சென்னை பரங்கிமலை ரெயில் விபத்தில் பலியான நால்வரின் குடும்பத்துக்கு நிவாரணமாக தலா ரூ.8 லட்சம் வழங்க ரெயில்வே தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. #Railway
    சென்னை:

    சென்னை பரங்கிமலை ரெயில் நிலைய நடைமேடையில் உள்ள தடுப்புச்சுவர் இடித்து மின்சார ரெயிலின் படியில் பயணம் செய்த 4 பேர் பலியாகினர். பிளாட்பாரம் மாற்றி ரெயில் இயக்கப்பட்டதும், கூட்ட நெரிசலும் முக்கிய காரணமாக கூறப்பட்டது.

    இந்நிலையில், இந்த விபத்து வழக்கை சென்னை ரெயில்வே தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரித்து நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளது. பலியான நால்வரின் குடும்பத்துக்கு ரூ.8 லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 5 பேருக்கு ரூ.2 லட்சமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
    காலா இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றுவிட்டு ஊருக்கு திரும்பியபோது ரெயில் விபத்தில் சிக்கி கால்களை இழந்த மதுரையை சேர்ந்த ரசிகருக்கு ரஜினிகாந்த் உதவி வழங்கினார்.
    சென்னை:

    மதுரை மாவட்டம் திருநகரை சேர்ந்தவர் காசி விஸ்வநாதன் (வயது 33). ரஜினிகாந்த் ரசிகரான இவர் மதுரையில் இருந்து காலா இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க சென்னை வந்திருந்தார்.

    இசை வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு, சென்னையில் இருந்து மதுரைக்கு ரெயிலில் சென்றுகொண்டிருந்தார். சென்னையை அடுத்த செங்கல்பட்டு அருகே ரெயில் சென்றபோது படிக்கட்டில் இருந்து காசி விஸ்வநாதன் தவறி கீழே விழுந்தார்.

    இதில் அவருடைய ஒரு கால் துண்டானது. படுகாயம் அடைந்த காசி விஸ்வநாதன் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அவருடைய இன்னொரு காலும் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது.

    இந்த விஷயம் ரஜினிகாந்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை அறிந்து மிகவும் வருந்திய ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகரை தன் சார்பில் காசி விஸ்வநாதனை சந்திக்க அனுப்பி வைத்தார். அவருடன் தென் சென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இணைச் செயலாளர் ராமதாசும் சென்றார்.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காசி விஸ்வநாதனை சந்தித்து வி.எம்.சுதாகர் நலம் விசாரித்தார். மேலும் சிகிச்சை அளிக் கும் டாக்டர்களிடம் காசி விஸ்வநாதன் உடல் நலம் பற்றி கேட்டறிந்தார். காசி விஸ்வநாதனின் பெற்றோர், மனைவியிடம் ரஜினிகாந்த் சார்பில் நிதி உதவி வழங்கினார்.

    காசி விஸ்வநாதன் மற்றும் அவருடைய குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக ரஜினிகாந்த் சார்பில் வி.எம்.சுதாகர் வாக்குறுதி அளித்தார். #tamilnews
    ×