என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rajiv Gandhi Govt Hospital"
- ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு பகுஜன் சமாஜ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
- போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து விட்டு ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள வீட்டின் முன் வைத்து நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு பகுஜன் சமாஜ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அவர்கள் முழக்கமிட்டனர். மேலும் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பொதுவான இடம் கோரி ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட வெளியே செல்ல முயன்ற ஆதரவாளர்களை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை உடைத்து விட்டு ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ராஜீவ் காந்தி மருத்துவமனை வழியாக பயணிக்கும் பொதுமக்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள வீட்டின் முன் வைத்து நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனை முன்பு ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் குவிந்து வருவதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, ராஜீவ் காந்தி மருத்துவமனை வழியாக பயணிக்கும் பொதுமக்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
- மருத்துவ திரவ ஆக்ஸிஜன் இணைப்புகள், தீயணைப்பு உபகரணங்கள் போன்ற பிற வசதிகளுடன் கட்டடம் கட்டப்பட்டு உள்ளது.
- விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் நரம்பியல் துறைக்கான அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்று மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டசபையில் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பினை விரைந்து செயல்படுத்திடும் பொருட்டு 65 கோடி ரூபாய் அனுமதித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
நரம்பியல் துறைக்கென்று புதிதாக உருவாக்கப்படும் இந்தக் கட்டடம் ஏறத்தாழ 1 லட்சத்து 12 ஆயிரத்து சதுர அடியில் நான்கு தளங்களுடன் 220 படுக்கை வசதிகளோடு பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.
கட்டிடத்தின் அனைத்துத் தளங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிடம், பொது கழிப்பிடம், 4 மின்தூக்கிகள், 2 படிக்கட்டுகள், சாய்வுதளம், மருத்துவ திரவ ஆக்ஸிஜன் இணைப்புகள், தீயணைப்பு உபகரணங்கள் போன்ற பிற வசதிகளுடன் இந்தக் கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. விரைவில் இது மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் 12 மணி வரையில், மக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
- சேவையை பெறுவதற்கு http://teleconsultation.s10safecare.com இணைப்பினை உபயோகிக்கலாம்.
சென்னை:
நவீன தொலைதொடர்பு தொழில்நுட்ப வளர்ச்சி காலகட்டத்தில் தொலை மருத்துவம் என்பது தொலைதொடர்பு இணைப்புகள் மூலம் இத்தகைய மக்களுக்கு வீட்டில் இருந்தபடியே சிறப்பு மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவதற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.
இது சுகாதார சேவைகளை பயனாளிகள் வீட்டிற்கே எடுத்துச் செல்லும் உன்னதமான முறையாகும்.
கொரோனா பேரிடர் காலத்தில், தொலை மருத்துவத்தின் மகத்துவத்தை இந்த உலகம் அறிந்தது. சிறப்பு மருத்துவ ஆலோசனை தேவைப்படும் கிராமப்புற மற்றும் நகர்புற பகுதிகளில் இருக்கும் வயதானவர்கள் மற்றும் பயணம் செய்ய இயலாதவர்களுக்கு தொலை மருத்துவம் சிறந்த பரிசாக அமைகிறது.
இதை கருத்தில் கொண்டு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொலை மருத்துவம் எனப்படும் இணைய வழி மருத்துவ ஆலோசனை சேவை மக்களுக்காக சமீபத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் 12 மணி வரையில், மக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், குழந்தை நல மருத்துவம், முதியோர் நல மருத்துவம் மற்றும் தோல் நோய் மருத்துவம் ஆகிய துறைகளை சார்ந்த சிறப்பு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கி வருகிறார்கள்.
18 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகள் இந்த சேவையை பெறுவதற்கு http://teleconsultation.s10safecare.com இணைப்பினை உபயோகிக்கலாம் என்று டீன் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.
- கொரோனா வார்டில் இருந்த நோயாளிகளை தீயணைப்பு வீரர்களும், ஆஸ்பத்திரி ஊழியர்களும் சேர்ந்து பத்திரமாக மீட்டனர்.
- கொரோனா வார்டில் இருந்த 5 நோயாளிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு வேறு வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
சென்னை:
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தற்போதும் கொரோனா வார்டு செயல்பட்டு வருகிறது. இங்கு குறைந்த அளவிலான நோயாளிகளே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ வேகமாக பரவியது. இதனால் நோயாளிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
கொரோனா வார்டில் இருந்த நோயாளிகளை தீயணைப்பு வீரர்களும், ஆஸ்பத்திரி ஊழியர்களும் சேர்ந்து பத்திரமாக மீட்டனர்.
கொரோனா வார்டில் இருந்த 5 நோயாளிகளும் பத்திரமாக மீட்கப்பட்டு வேறு வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் பெரிய அளவில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மின்கசிவு ஏற்பட்டது எப்படி? என்பது பற்றி ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மீண்டும் தீ விபத்து ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்