search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ranya Rao"

    • நடிகை ரன்யா ராவ் ஐ.பி.எஸ். அதிகாரி ராமசந்திரா ராவ் என்பவரின் வளர்ப்பு மகள் ஆவார்.
    • என் கேரியரில் எந்த ஒரு கரும்புள்ளியும் கிடையாது.

    கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ் (வயது 32). இவர் கன்னடத்தில் மானிக்யா, பட்டாக்கி ஆகிய 2 படங்களில் நடித்துள்ளார். இதேபோல நடிகர் விக்ரம் பிரபுவுடன் வாகா என்ற தமிழ் படத்தில் நடித்து இருக்கிறார்.

    இவர் ஐ.பி.எஸ். அதிகாரி ராமசந்திரா ராவ் என்பவரின் வளர்ப்பு மகள் ஆவார். ராமசந்திரா ராவ் கடந்த 2013-ம் ஆண்டு முதல் கர்நாடக போலீஸ் வீட்டுவசதித்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வருகிறார். அவருடைய 2-வது மனைவியின், முதல் கணவரின் மகள் தான் நடிகை ரன்யா ராவ் ஆவார்.

    துபாயில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில், 15 கிலோ தங்கத்தை நடிகை ரன்யா ராவ் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை விமான நிலையத்தில் அதிகாரிகள் கைது செய்தனர்.

    இதற்கிடையில், ரன்யா ராவிடம் தங்கம் கடத்தல் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் பேரில், லாவல்லி ரோட்டில் உள்ள, அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

    சோதனையின்போது, 2 கிலோவுக்கும் மேல் விதவிதமான தங்க நகைகள் மற்றும் ரூ.2 கோடியே 67 லட்சம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக அவரது தந்தை கூறுகையில்,

    இதுபோன்ற ஒரு சம்பவம் ஊடகங்கள் மூலம் எனது கவனத்திற்கு வந்தபோது மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இந்த விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாது, மற்ற தந்தையை போலவே நானும் அதிர்ச்சியடைந்தேன். அவள் எங்களுடன் வாழவில்லை, அவள் கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்கிறாள். அவர்களுக்குள் ஏதாவது குடும்ப பிரச்சனை இருக்க வேண்டும்.

    ஆனால் சட்டம் தன் கடமையை செய்யும். என் கேரியரில் எந்த ஒரு கரும்புள்ளியும் கிடையாது. மேலும் எதுவும் கூற விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

    ×