search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rasipuram accident"

    • பணியை முடித்துவிட்டு நேற்று இரவு 10 மணி அளவில் மொபட்டில் அமுதா வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
    • பொன்குறிச்சி நோக்கி வந்த ஈச்சர் லாரி திடீரென பெண் போலீஸ் ஏட்டு ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆயில்பட்டியை சேர்ந்தவர் செல்வம் எலக்ட்ரீசியன். இவரது மனைவி அமுதா (47) இவர் நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு கவியரசன் (21), சோலைஅரசு (19) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    அமுதா திருச்செங்கோடு அருகே உள்ள எளையாம்பாளையம் விவேகானந்தா கல்லூரி வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

    பணியை முடித்துவிட்டு நேற்று இரவு 10 மணி அளவில் மொபட்டில் அமுதா வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அவர் ராசிபுரம் அருகே உள்ள குமாரபாளையம் என்ற பகுதியில் ஒரு பேக்கரி அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே பொன்குறிச்சி நோக்கி வந்த ஈச்சர் லாரி திடீரென பெண் போலீஸ் ஏட்டு ஓட்டி வந்த மொபட் மீது மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த பெண் போலீஸ் ஏட்டு அமுதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தெரியவந்ததும் சம்பவ இடத்திற்கு புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் அமுதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ராசிபுரம் போலீஸ் டி.எஸ்.பி. விஜயகுமார் உள்பட போலீசார் அமுதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அமுதாவின் உறவினர்கள் நூற்றுக்கணக்கான பேர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர்.

    விபத்தில் பலியான அமுதா தடகளப் போட்டியில் பல பரிசுகளை வென்று குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முனியப்பன் கோவில் அருகே இருந்த வளைவில் சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
    • விபத்து குறித்து ராசிபுரம் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மேட்டுக்காடு அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (24), கூலி தொழிலாளி. இவரது உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (21). இவர்கள் 2 பேரும் நேற்று முத்துக்காளிப்பட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு கறி விருந்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    பின்னர் கறி விருந்தை முடித்துக் கொண்டு அவர்கள் 2 பேரும் மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இரவு 9.30 மணியளவில் அவர்கள் ராசிபுரம்-ஆண்டகளூர் கேட் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் அருகே இருந்த வளைவில் சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் அவர்களது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.

    இதில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திலேயே சுரேஷ் பலியானார். பிரபாகரன் காயத்துடன் உயிருக்கு போராடினார். இதுபற்றி தெரியவந்ததும் ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் பலியானார்.

    இதையடுத்து விபத்தில் பலியான சுரேஷ், பிரபாகரன் ஆகியோர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ராசிபுரம் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராசிபுரத்தில் தனியார் பஸ் வளைவில் திரும்பியபோது பேத்தி கண் முன்பு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட தாத்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    ராசிபுரம்:

    சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். வியாபாரி. இவரது மகள் பிரின்சிகேரன். இவர் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பிரின்சிகேரனின் மார்க்சீட் வாங்குவதற்காக அவரது தாத்தா அருள்ஜோசப் (72) மற்றும் மாணவி பிரின்சிகேரன் ஆகியோர் நேற்று இரவு தனியார் பஸ் மூலம் ராசிபுரத்திற்கு புறப்பட்டு வந்தனர்.

    அவர்கள் இன்று காலை சேலம் பஸ் நிலையத்தில் இருந்து ராசிபுரத்திற்கு தனியார் பஸ்சில் ஏறி வந்தனர். அவர்கள் ராசிபுரம் டவுன் சேலம் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது அருள்ஜோசப் பஸ்சில் இருந்து இறங்குவதற்காக நின்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வளைவில் திரும்பியபோது பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்ட அருள்ஜோசப் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×