என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ravishankar Prasad"
- நாடு பிரிவினை தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. சுரேஷ்குமார் கருத்து தெரிவித்தார்.
- பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய அவரது கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி:
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சுரேஷ்குமார் இடைக்கால பட்ஜெட் குறித்துப் பேசினார். அப்போது, ஒவ்வொரு முறையும் நமக்கு அநீதி இழைக்கப்படுகிறது. நமது பணம் நமக்கு வேண்டும். ஜி.எஸ்.டி., சுங்கம், நேரடி வரி என எல்லாவற்றில் இருந்தும் எங்களுக்கு வரவேண்டிய பங்கை நாங்கள் பெறவேண்டும். எங்களது வளர்ச்சிக்கு தேவையான நிதி வட இந்தியாவுக்கே வழங்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் நாம் இதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை எனில், இந்தி மொழி பேசும் பகுதியினர் நம் மீது திணித்துள்ள சூழ்நிலை காரணமாக தனிநாடு கோரிக்கையை முன்வைக்க நேரிடும் என தெரிவித்தார்.
அவரது கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நாட்டை பிளவுபடுத்தும் வகையில் யார் பேசினாலும் அதனைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அவர் எந்த கட்சியாக இருந்தாலும் சரி, காங்கிரசாக இருந்தாலும் சரி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாம் அனைவரும் ஒரே நாடாக இருக்கிறோம். அப்படியே இருப்போம் என உறுதியுடன் கூறுகிறேன் என்றார்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யின் கருத்து தொடர்பாக பா.ஜ.க.வின் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:
டி.கே.சுரேஷ்குமாருக்கு இனியும் எம்.பி.யாக நீடிக்க தகுதி கிடையாது.
ராகுல் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொள்ளும் போது அவரது கட்சி எம்.பி. நாடு பிரிவினைப் பற்றி பேசுகிறார்.
இந்த விவகாரத்தில் சோனியா மவுனமாக இருப்பது துரதிர்ஷ்டம்.
அரசியல் சாசனத்தை நாங்கள் மீறுவதாக தினமும் எங்களை குற்றம்சாட்டும் காங்கிரஸ் தலைவர்கள் தங்களது எம்.பி.யின் கருத்து குறித்து மவுனம் காக்கின்றனர்.
அரசியல் சாசனத்திற்கு எதிரான இந்த கருத்து குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் மவுனம் காக்கின்றனர் என கூறினார்.
மதுரை:
மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதல் காட்டு மிராண்டிதனமானது. வீரர்களின் தியாகம் போற்றப்பட வேண்டிய ஒன்று. பயங்கரவாதிகளை தூண்டிவிடுவதன் மூலம் பாகிஸ்தான் உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு தக்கபதிலடி கொடுக்கப்படும். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பா.ஜனதா கட்சி தலைவர்களின் நிகழ்ச்சிகள் இன்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கும் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம்.
தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முத்ரா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 17 கோடி பேருக்கு கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 7.5 லட்சம் பேருக்கு கடன் கொடுக்கப்பட்டு உள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தில் இந்தியாவில் 10 கோடி கழிவறைகள் கட்டப்பட்டு உள்ளது. இதில் 52 லட்சம் கழிவறைகள் தமிழகத்தில் கட்டப்பட்டுள்ளன.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா கட்சி இடம் பெறும் அணி வெற்றி கூட்டணியாக அமையும். அந்த வகையில் வலுவாக கூட்டணியை அமைப்போம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது விரைவில் கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #RavishankarPrasad
மக்களவையில் இன்று முத்தலாக் மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அதிமுக எம்பி அன்வர் ராஜா பேசியதாவது:-
முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் இந்த முத்தலாக் சட்டம் நேரடியாக தலையிடுகிறது. இந்திய அரசியலமைப்பு அளித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இந்த மசோதா உள்ளது. உணர்ச்சிகரமான விஷயத்தில் கண்மூடித்தனமாக மத்திய அரசு செயல்படுகிறது. முத்தலாக் பிரச்சனையில் கணவருக்கு 3 ஆண்டு சிறைதண்டனை விதிப்பது நியாயமற்றது. இஸ்லாமிய ஆண்களுக்கு எதிரான இந்த சட்டத்தை நான் எதிர்க்கிறேன்.
இவ்வாறு அன்வர் ராஜா பேசினார். இந்த விவாதத்தில் அன்வர் ராஜா தமிழில் பேசியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், 20 இஸ்லாமிய நாடுகளில் முத்தலாக் முறை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடுகளில் ஏன் அதை செய்ய முடியாது? என்று கேள்வி எழுப்பினார். இதை அரசியல் ரீதியாக பார்க்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். #TripleTalaqBill #AnwharRaajhaa
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்