search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RCBvRR"

    • ராஜஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை பெங்களூரு அணி ரத்து செய்தது.
    • விராட் கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். தொடரில் எலிமினேட்டர் சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதற்கான பயிற்சி ஆட்டம் அகமதாபாத் குஜராத் கல்லூரி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.

    இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 4 பேரை குஜராத் போலீசார் கைதுசெய்தனர். அவர்களது இடங்களை சோதனை செய்தபின் ஆயுதங்கள், சந்தேகத்திற்கு இடமான வீடியோக்கள், குறுஞ்செய்திகளை போலீசார் மீட்டதாகக் கூறப்படுகிறது.

    இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக ஆர்சிபி அணியின் பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. மேலும் விராட் கோலியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியது.

    இந்நிலையில், ராஜஸ்தான் - பெங்களூரு போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏதும் இல்லை என குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

    மேலும், "குஜராத் கல்லூரி மைதானத்தில் மதியம் 2-5 மணிவரை பயிற்சி செய்ய பெங்களூரு அணி திட்டமிட்டிருந்தது. ஆனால் கோடைக்காலம் என்பதால் மாலை 6.30 மணிவரை வெளிச்சம் இருக்கும் என்பதால் பயிற்சியை 3-6 மணிக்கு மேற்கொள்ளலாம் என்று அணி நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால் வெப்ப அலை காரணமாகவே பெங்களூரு அணியின் பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது

    அதே சமயம் குஜராத் கல்லூரி மைதானத்தில் மதியம் 3.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ராஜஸ்தான் அணி பயிற்சியில் ஈடுபட்டது" என்று குஜராத் கிரிக்கெட் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

    • பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இதனால் பயிற்சி ஆட்டத்தை ஆர்சிபி ரத்து செய்தது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். தொடரில் எலிமினேட்டர் சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதற்கான பயிற்சி ஆட்டம் அகமதாபாத் குஜராத் கல்லூரி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.

    ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை பெங்களூரு அணி நேற்று ரத்து செய்தது. மேலும், செய்தியாளர் சந்திப்பையும் ரத்து செய்துள்ளது.

    கடந்த திங்கட்கிழமை இரவு அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 4 பேரை குஜராத் போலீசார் கைதுசெய்தனர். அவர்களது இடங்களை சோதனை செய்தபின் ஆயுதங்கள், சந்தேகத்திற்கு இடமான வீடியோக்கள், குறுஞ்செய்திகளை போலீசார் மீட்டதாகக் கூறப்படுகிறது.

    இதையடுத்து, ஆர்சிபி அணியின் பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.

    விராட் கோலி அகமதாபாத்திற்கு வந்த பிறகு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதைப் பற்றி அறிந்தார். அவர் ஒரு தேசிய பொக்கிஷம், அவருடைய பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை என போலீசார் தெரிவித்தனர். அகமதாபாத்தில் உள்ள இரு அணி விடுதிகளுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

    • முதலில் ஆடிய பெங்களூரு 189 ரன்கள் குவித்தது.
    • அடுத்து விளையாடிய ராஜஸ்தான் 182 ரன்கள் எடுத்தது.

    பெங்களூரு:

    10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    பெங்களூருவில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 32-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் 44 பந்தில் 4 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 77 ரன்கள் எடுத்து வெளியேறினார். டூ பிளசிஸ் 39 பந்தில் 2 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 62 ரன்கள் எடுத்தார்.

    ராஜஸ்தான் அணி சார்பில் போல்ட், சந்தீப் சர்மா 2 விக்கெட், அஷ்வின், சஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் டக் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய தேவ்தத் படிக்கல், ஜெயிஸ்வாலுடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய படிக்கல் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 98 ரன்களை சேர்த்தது.

    அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜெயிஸ்வால் 47 ரன்னில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 22 ரன்னில் அவுட்டானார். ஹெட்மயர் 3 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், ராஜஸ்தான் அணி 182 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பெங்களூரு அணி பரபரப்பான ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 4-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    • முதலில் ஆடிய பெங்களூரு 189 ரன்கள் குவித்தது.
    • டூ பிளசிஸ், மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி அரை சதமடித்தனர்.

    பெங்களூரு:

    10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    பெங்களூருவில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் விராட் கோலி டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஷாபாஸ் அகமது 2 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய மேக்ஸ்வெல் டூ பிளசிசுடன் இணைந்து அதிரடியாக ஆடினார். இருவரும் பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.

    3வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்த நிலையில் டூ பிளசிஸ் ஆட்டமிழந்தார். அவர் 39 பந்தில் 2 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 62 ரன்கள் எடுத்தார்.

    அவரை தொடர்ந்து ருத்ர தாண்டவமாடிய மேக்ஸ்வெல் 44 பந்தில் 4 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 77 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    லாம்ரோர் 8 ரன்னில் அவுட்டானார். பிரபு தேசாய் டக் அவுட்டானார்.

    இறுதியில், பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்தது.

    ராஜஸ்தான் அணி சார்பில் போல்ட், சந்தீப் சர்மா 2 விக்கெட், அஷ்வின், சஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்குகிறது.

    ×