search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Regulation Hall"

    • சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் 2 ஆயிரத்து 745 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.64 ஆயிரத்து 101-க்கு விற்பனை நடைபெற்றது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 6 ஆயிரத்து 627 தேங்காய்களை விற்ப–னைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 77 காசுக்கும், அதிகபட்ச விலையாக 26 ரூபாய் 27 காசுக்கும், சராசரி விலையாக 24 ரூபாய் 55 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 2 ஆயிரத்து 745 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.64 ஆயிரத்து 101-க்கு விற்பனை நடைபெற்றது.

    • கவுந்தப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் உள்ள கருப்பு மற்றும் வெள்ளை ரக தேங்காய்கள் என தரம் பிரித்து ஏல விற்பனைக்கு கொண்டு வந்து பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

    கவுந்தப்பாடி:

    கவுந்தப்பாடி ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனை கூடத்தில் கடந்த பல ஆண்டுகளாக கவுந்தப்பாடி மற்றும் ஓடத்துறை, அய்யம்பாளையம், பெருந்தலையூர், பொன்னாட்சி புதூர், குட்டியபாளையம், சலங்க பாளையம், வேலம்பாளையம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் கரும்பு சக்கரை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

    இந்த விற்பனை கூடத்து க்கு கொண்டு வரப்படும் சர்க்கரை மூட்டைகள் குறிப்பாக பழனி பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் பஞ்சாமிர்த பிரசாதத்திற்கு அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் வருகிற 26-ந் தேதி முதல் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் விடப்படும் என ஈரோடு விற்பனை குழு செயலாளர் சாவித்திரி, கவுந்தப்பாடி விற்பனை கூட கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் உள்ள கருப்பு மற்றும் வெள்ளை ரக தேங்காய்கள் என தரம் பிரித்து ஏல விற்பனைக்கு கொண்டு வந்து பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • விவசாயிகள் 901 பேர் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • சராசரி விலையாக ரூ.11,550-க்கும் விற்பனையானது.

    மூலனூர் :

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 901 பேர் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.

    வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.12,269-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.9,550-க்கும், சராசரி விலையாக ரூ.11,550-க்கும் விற்பனையானது. பருத்தியின் மொத்த அளவு 9169 மூட்டைகள், குவிண்டால் 2976.84, மதிப்பு ரூ.3 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 869 ஆகும். இந்த மறைமுக ஏலத்தில் 21 வியாபாரிகள் பங்கேற்றனர் என திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.

    ×