search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rehana Fathima"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குழந்தைகளை வைத்து தன் அரைநிர்வாண உடலில் ஓவியம் வரைந்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார்
    • மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையமும் கையில் எடுத்து வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது

    கேரளாவின் சமூக ஆர்வலரான ரெஹானா பாத்திமா அரைநிர்வாண படத்தை வெளியிட்டிருந்தார். அத்துடன் அரைநிர்வாணமாக இருக்கும் தனது உடலில் அவருடைய மைனர் குழந்தை ஓவியம் தீட்டுவது போன்ற வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.

    இது கேரளாவில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை எழுப்பியது. இதனால் அவர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. வழக்குகளை ரத்து செய்யும்படி ரெஹானா விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ரெஹானா கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

    இதனால் அவர் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அதில் அரசியல் தொடர்பான கருத்துக்களை வெளிப்படுத்தவே அவ்வாறு செய்யப்பட்டது. ஆண்கள் மேலாடை இல்லாமல் தோன்றுவது ஆபாசம் இல்லை எனக் கருதப்படும்போது, பெண்களுக்கு மட்டும் கட்டுப்பாடு என்பது என்ன நியாயம். சட்டம் என்பது எல்லா பாலினத்தினருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனுமீதான விசாரணையின்போதுதான் கேரள மாநில உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கேரள மாநில உயர்நீதிமன்ற நீதிபதி கவுசர் எடப்பாகத் இந்த வழக்கு தொடர்பாக பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது -

    1. ரெஹானா தனது உடலை படம் வரைய மட்டுமே பயன்படுத்தியுள்ளார்.

    2. ஒரு தாயின் மேல் அரைநிர்வாணத்தில், அந்த தாயின் குழந்தைகள் படம் வரைவதை உண்மையான அல்லது உருவகப்படுத்தப்பட்ட பாலியல் செயலாக வகைப்படுத்த முடியாது அல்லது பாலியல் திருப்திக்காகவோ அல்லது பாலியல் நோக்கத்திற்காகவோ அதைச் செய்ததாகக் கூற முடியாது.

    3. குற்றம் விளைவிக்கக் கூடியது இல்லாத ஒரு கலை வெளிப்பாட்டை, உண்மையான அல்லது உருவகப்படுத்தப்பட்ட பாலியல் செயலில் ஒரு குழந்தையைப் பயன்படுத்துவதாகக் கூறுவது கடுமையானது

    4. குழந்தைகளை ஆபாசப் படங்களுக்கு பயன்படுத்தியதாகக் காட்ட அதில் எதுவும் இல்லை.

    5. வீடியோவில் பாலுறவு பற்றி குறிப்பு ஏதும் இல்லை.

    6. ஒரு ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, ஒரு நபரின் நிர்வாண மேல் உடலில் ஓவியம் வரைவது வெளிப்படையான பாலியல் செயல் என்று கூற முடியாது.

    அரசு தரப்பு வக்கீல் குறுக்கிட்டு, அந்த வீடியோவில் பாத்திமா தனது மேல் உடலை அம்பலப்படுத்தியதாகவும், அது ஆபாசமாகவும் அநாகரீகமாகவும் இருந்ததாக குறிப்பிட்டார்.

    7. அதற்கு நீதிபதி நிர்வாணம் மற்றும் ஆபாசம் இரண்டு ஒரே பொருள் உடையதாக எப்போதும் இருந்ததில்லை என்றார்.

    8. அடிப்படையில் நிர்வாணத்தை ஆபாசமான அல்லது அநாகரீகமான அல்லது ஒழுக்கக்கேடானதாக வகைப்படுத்துவது தவறு.

    9. ஆண்கள் மேலாடை இல்லாமல் இருப்பது ஆபாசம், அநாகரீகம் என்று பார்ப்பது இல்லை. பாலுறவு ரீதியாகவும் பார்ப்பதில்லை. ஆனால், பெண்களுக்கு அவ்வாறு பார்ப்பதில்லை.

    10. ஒவ்வொரு தனிநபரும் அவனது/அவள் உடலின் சுயாட்சிக்கு உரிமையுடையவர். ஆனால் பெண்களுக்கு இது அவ்வப்போது மறுக்கப்படுவதை நாம் பார்க்க முடிகிறது. இந்த விசயத்தில் பெண்கள் ஆடை கட்டுப்பாடு என்ற வகையில் துன்புறுத்தப்படுகிறார்கள்.

    11. நிர்வாணத்தை செக்ஸ் உடன் இணைக்கக் கூடாது. பெண்கள் அரைநிர்வாணத்தை இயல்பாகவே பாலுறவு ரீதியில் என்று எண்ணக் கூடாது. மேலும், ஒரு பெண்ணின் நிர்வாண உடலை சித்தரிப்பதை ஆபாசமானதாகவோ, அநாகரீகமாகவோ அல்லது வெளிப்படையான பாலியல் ரீதியாகவோ குறிப்பிட முடியாது.

    12. ஒழுக்கமும் குற்றமும் இணைந்தவை அல்ல. தார்மீக ரீதியாக தவறாகக் கருதப்படுவது சட்டப்பூர்வமாக தவறாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • ரெகானா பாத்திமா சமூக வலைதளத்தில் மாட்டுகறி சமைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதற்கு அப்போது பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
    • எர்ணாகுளம் தெற்கு போலீஸ் நிலையத்தில் வக்கீல் ராஜிஸ் ராமச்சந்திரன் என்பவர் புகார் அளித்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ரெகானா பாத்திமா.

    சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என கோர்ட்டு அனுமதி வழங்கிய போது அதை எதிர்த்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.

    அப்போது பெண் சமூக ஆர்வலர்கள் பலரும் கோவிலுக்கு செல்ல முயன்றனர். இதில் கேரளாவை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் ரெகானா பாத்திமாவும் இந்த சர்ச்சையில் சிக்கினார்.

    அதன்பின்பு அவர் சமூக வலைதளத்தில் மாட்டுகறி சமைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதற்கு அப்போது பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக எர்ணாகுளம் தெற்கு போலீஸ் நிலையத்தில் வக்கீல் ராஜிஸ் ராமச்சந்திரன் என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரை விசாரித்த போலீசார் ரெகானா பாத்திமா மீது வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ரெகானா பாத்திமா கேரள ஐகோர்ட்டில் மனு செய்தார். அதில் தன்மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த மனு கேரள ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரெகானா பாத்திமா மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது. மேலும் இதுதொடர்பாக கேரள அரசுக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டது.

    சபரிமலை விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரெஹனாவிடம் ஜெயிலில் போலீசார் 2 மணி நேரம் விசாரணை நடத்த அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #Sabarimala #RehanaFathima
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாடல் அழகியும், பி.எஸ்.என்.எல். ஊழியருமான ரெஹனா பாத்திமா போலீஸ் பாதுகாப்புடன் செல்ல முயன்றார்.

    பக்தர்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து அவர், ஐயப்பனை தரிசிக்காமல் திரும்பினார். அதன் பிறகு சபரிமலை குறித்து பல்வேறு கருத்துக்களை சமூக வலை தளங்களில் பதிவிட்டார்.

    மேலும் ரெஹனா பாத்திமா ஆபாச உடையுடன் இருக்கும் படங்களும் வெளியாகின. இது குறித்து ராதாகிருஷ்ணன் மேனன் என்பவர் பத்தினம் திட்டா போலீசில் புகார் செய்தார்.

    புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 27-ந்தேதி ரெஹனா பாத்திமாவை கைது செய்தனர். பின்னர் அவர், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    ரெஹனா பாத்திமா கைதானதும் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் அவரை பணியில் இருந்து சஸ்பெண்டு செய்தது.

    இதற்கிடையே ஜெயிலில் இருந்த ரெஹனா பாத்திமாவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை நீதிபதி ஏற்க மறுத்தார். அதே நேரம் இந்த வழக்கு தொடர்பாக போலீசார் ஜெயிலுக்கு சென்று ரெஹனா பாத்திமாவிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தலாம் என்று அனுமதி வழங்கினார்.  #Sabarimala #RehanaFathima


    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முயன்று பரபரப்பை ஏற்படுத்திய மாடல் அழகி ரெஹானா பாத்திமாவை இன்று போலீசார் கைது செய்தனர். #SabarimalaTemple #Rehna #Rehnaarrested
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து அங்கு சென்ற சில பெண்களில் மாடல் அழகி ரெஹானா பாத்திமாவும் ஒருவர்.

    இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவர் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்கான எந்த விரதமும் மேற்கொள்ளாமல் நெய் தேங்காய், அரிசிக்கு பதிலாக ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் பழங்களை இருமுடியாக கட்டிக்கொண்டு கடந்த மாதம் 19-ம் தேதி ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்றார்.

    கேரள மந்திரியின் உத்தரவையடுத்து அவரை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இந்த சம்பவத்தின் மூலம் தொடர்ந்து செய்திகளில் விவாதப்பொருளாக ஆகிப்போன ரெஹானா மற்றும் அவரது குடும்பத்தினரை கேரள மாநில முஸ்லிம் ஜமாஅத் தள்ளிவைத்துள்ளது.



    இதற்கிடையில், ரெஹானா மீது இந்திய கிரிமினல் சட்டம் 295A-வின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யலாம் என கருதிய ரெஹானா முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கேரள ஐகோர்ட் கடந்த 16-ம் தேதி தள்ளுபடி செய்து விட்டது.

    இந்நிலையில்,கொச்சி மாவட்டம், பலரிவோட்டத்தில் இன்று பிற்பகல் ஒருமணியளவில் ரெஹானாவை போலீசார் கைது செய்தனர்.

    மத உணர்வுகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் ரெஹானா பதிவிட்டிருந்ததாக சபரிமலை ஆச்சார சம்ரக்‌ஷனா சமிதி அமைப்பின் செயலாளர் பத்மகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் இந்திய கிரிமினல் சட்டம் 153A-வின் கீழ் கடந்த 20-ம் தேதி வழக்குப்பதிவு செய்திருந்த போலீசார் அவரை இன்று கைது செய்துள்ளதாக தெரிகிறது. #SabarimalaTemple #Rehna #Rehnaarrested
    சபரிமலைக்குள் நுழைய முயன்று பரபரப்பை ஏற்படுத்திய மாடல் அழகி ரெஹானா பாத்திமாவின் முன்ஜாமின் மனுவை கேரள ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #SabarimalaTemple #Rehna
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து அங்கு சென்ற சில பெண்களில் மாடல் அழகி ரெஹானா பாத்திமாவும் ஒருவர்.

    இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவர் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்கான எந்த விரதமும் மேற்கொள்ளாமல் நெய் தேங்காய், அரிசிக்கு பதிலாக ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் பழங்களை இருமுடியாக கட்டிக்கொண்டு கடந்த 19-ம் தேதி ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்றார்.



    கேரள மந்திரியின் உத்தரவையடுத்து அவரை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இந்த சம்பவத்தின் மூலம் தொடர்ந்து செய்திகளில் விவாதப்பொருளாக ஆகிப்போன ரெஹானா மற்றும் அவரது குடும்பத்தினரை கேரள மாநில முஸ்லிம் ஜமாஅத் தள்ளிவைத்துள்ளது.

    இதற்கிடையில், ரெஹானா மீது இந்திய கிரிமினல் சட்டம் 295A-வின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யலாம் என கருதிய ரெஹானா முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கேரள ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்து விட்டது. #SabarimalaTemple #Rehna
    பாரம்பரிய நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து சபரிமலைக்கு சென்ற பெண்ணின் வீட்டை சிலர் அடித்து நொறுக்கினர். #Sabarimala #SabarimalaProtests
    கொச்சி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும்  தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்து அமைப்புகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன.  

    இது ஒருபுறமிருக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததால் கோவிலுக்கு செல்வதற்கான முயற்சியில் சில பெண்கள் இறங்கினர். அவர்களுடன் சமூக ஆர்வலர்கள், பெண்ணியவாதிகள், செய்தியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் அங்கு செல்வதற்கு ஆர்வம் காட்டினர். ஐப்பசி மாத பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டதும் இந்த பெண்கள் கோவிலுக்கு வரத் தொடங்கினர். ஆனால் அவர்களை சபரிமலைப் பாதைகளில் போராட்டக் குழுவினர் தடுத்து நிறுத்தினர்.



    இந்த எதிர்ப்புக்கும் மத்தியில் ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையளர் கவிதா மற்றும் கேரளாவைச் சேர்ந்த பெண்ணியவாதி ரெகானா பாத்திமா ஆகியோர் இன்று போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலைக்கு சென்றனர். ஆனால் சன்னிதான வாசலை நெருங்கியபோது, பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    அதேசமயம், சபரிமலை கோவிலுக்கு போலீஸ் பாதுகாப்புடன் ரெகானா பாத்திமா புறப்பட்டுச் சென்ற தகவல் மாநிலம் முழுவதும் பரவிய நிலையில், கொச்சியில் உள்ள அவரது வீட்டை இன்று அடையாளம் தெரியாத நபர்கள் அடித்து நொறுக்கினர். வீட்டின் கதவு, ஜன்னல்கள் உடைக்கப்பட்டு பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  #Sabarimala #SabarimalaProtests

    ×