search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சமூக ஆர்வலர் ரெகானா பாத்திமா மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு
    X

    சமூக ஆர்வலர் ரெகானா பாத்திமா மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு

    • ரெகானா பாத்திமா சமூக வலைதளத்தில் மாட்டுகறி சமைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதற்கு அப்போது பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
    • எர்ணாகுளம் தெற்கு போலீஸ் நிலையத்தில் வக்கீல் ராஜிஸ் ராமச்சந்திரன் என்பவர் புகார் அளித்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ரெகானா பாத்திமா.

    சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என கோர்ட்டு அனுமதி வழங்கிய போது அதை எதிர்த்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.

    அப்போது பெண் சமூக ஆர்வலர்கள் பலரும் கோவிலுக்கு செல்ல முயன்றனர். இதில் கேரளாவை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் ரெகானா பாத்திமாவும் இந்த சர்ச்சையில் சிக்கினார்.

    அதன்பின்பு அவர் சமூக வலைதளத்தில் மாட்டுகறி சமைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதற்கு அப்போது பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக எர்ணாகுளம் தெற்கு போலீஸ் நிலையத்தில் வக்கீல் ராஜிஸ் ராமச்சந்திரன் என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரை விசாரித்த போலீசார் ரெகானா பாத்திமா மீது வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ரெகானா பாத்திமா கேரள ஐகோர்ட்டில் மனு செய்தார். அதில் தன்மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த மனு கேரள ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரெகானா பாத்திமா மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது. மேலும் இதுதொடர்பாக கேரள அரசுக்கு நோட்டீசு அனுப்பவும் உத்தரவிட்டது.

    Next Story
    ×