search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Republic Day Ceremony"

    • கள்ளக்குறிச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
    • 29 பேருக்கு முதல்வர் பதக்கத்தினை மாவட்ட கலெக்டர் அணிவித்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    நாடு முழுவதும் இன்று 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி கள்ளக்குறிச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி னார். மேலும் சமாதான வெண் புறாக்க ளையும், மூவர்ன நிறத்திலான பலூன்களையும் பறக்க விட்டார்,

    மேலும் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன் ராஜ் ஆகியோர் வெள்ளை நிற திறந்த வேனில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து காவல்து றையினர் ஆயுதப்படை ஆய்வாளர் இளையராஜா தலைமையிலும், முதல் படைக்கு ஆயுதப்படை உதவி ஆய்வாளர் முத்துசாமி, இரண்டாம் படைக்கு உதவி ஆய்வாளர் கீர்த்தனா, தீயணைப்புத்துறை யினர் நிலைய தலைமை அலுவலர் ராமச்சந்திரன், வனத்துறையினர் வனவன் முருகன், ஊர் காவல் படையினர் ஜான ரத்தினம், தேசிய மாணவர் படையினர் ரஞ்சித், ஜூனியர் பிரிவு கவிராஜ் ஆகியோர் தலைமையிலும் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

    மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினர் 34 பேர், தீயணைப்பு மீட்புபணிகள் துறை 12- பேர், வருவாய்த்துறை 8 பேர், ஊரக வளர்ச்சி துறை 9 பேர், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை 8 பேர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 191 பேருக்கு நற்சான்றுகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். மாவட்டத்தில் சிறப்பாக பணி ஆற்றிய காவல்து றையினர் 29 பேருக்கு முதல்வர் பதக்கத்தினை மாவட்ட கலெக்டர் அணிவித்தார். தொடர்ந்து 20 ஆண்டுகளாக மாசற்ற பணி நிறைவு செய்த ஈப்பு ஓட்டுநர்கள் 7 பேருக்கு 4 கிராம் தங்க பதக்கத்தை மாவட்ட கலெக்டர் வழங்கி னார்.

    இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன்,வேளாண் இணை இயக்குநர் வேல்விழி, மருத்தவக்கல்லூரி மருத்து வமனை கண்காணிப்பாளர் நேரு, மாவட்ட திட்ட இயக்குனர் மணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, நகராட்சி ஆணையர் குமரன் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பயனா ளிகள் பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • விருதுநகரில் குடியரசு தின விழாவில் 134 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கங்களை கலெக்டர் வழங்கினார்.
    • அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று குடியரசு தினவிழா நடைபெற்றது. கலெக்டர் மேகநாத ரெட்டி கலந்து கொண்டு காலை 8.15 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் நடைபெற்ற விழாவில் விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. பாண்டி உள்பட 134 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கத்தை கலெக்டர் வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய 247 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

    மாவட்ட திட்ட இயக்குநர் திலகவதி, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முருகேசன், வெங்கடேஸ்வரன், ராஜேஷ், அருப்புக்கோட்டை தாசில்தார் அறிவழகன், நகரசபை கமிஷனர் ஸ்டான்லி பாபு, மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றிவேல் உள்ளிட்டோர் நற்சான்றிதழ் பெற்றனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    முன்னதாக குடியரசு தின விழாவுக்கு வருகை தந்த கலெக்டரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள், மாவட்ட வருவாய் அதிகாரி ரவிகுமார், மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றிவேல் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் மொழிப் போர் தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபத்துக்கு சென்ற கலெக்டர் அங்கு அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    விருதுநகர் தேசபந்து திடலில் தியாகிகள் நினைவுத் தூணில் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தப்பட்டது. விருதுநகர் நகரசபை அலுவலகத்தில் நகரசபை தலைவர் மாதவன் தேசியக்கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதில் துணைத் தலைவர் தனலட்சுமி, நகரசபை கமிஷனர் ஸ்டான்லிபாபு, கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் தலைவர் சுமதி ராஜசேகர் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் தலைவர் வசந்தி மான்ராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

    ×