என் மலர்
நீங்கள் தேடியது "Research in schools"
- 2-ம் கட்டமாக 5 மண்டலங்களுக்கு ஆய்வுக்கூட்டம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
- பள்ளிகளில் இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்களால் ஆய்வு நடத்தப்பட உள்ளது.
சேலம்:
பள்ளிக்கல்வித்துறையில் கற்றல், கற்பித்தல் பணிகளை மேம்படுத்தும்விதமாக, மண்டல வாரியாக ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்ேபாது, 2-ம் கட்டமாக 5 மண்டலங்களுக்கு ஆய்வுக்கூட்டம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் 2, 3-ந்தேதி செங்கல்பட்டு, 10, 11-ந்தேதி கடலூர், 16, 17-ந்தேதி திருச்சி, 23, 24-ந்தேதி விருதுநகர், செப்டம்பர் மாதம் 1, 2-ந்தேதிகளில் தருமபுரியில் மண்டல ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது.
தருமபுரி மண்டல ஆய்வின்போது, சேலம் நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்களால் ஆய்வு நடத்தப்பட உள்ளது.






