என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Restoration meeting"
- 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மாகாளியம்மன் கோவில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
- கடந்த 2021 ம் ஆண்டு புனரமைக்க இந்து அறநிலையத்துறை அனுமதி அளித்தது.
பல்லடம் :
பல்லடம் என்.ஜி.ஆர்., ரோடு கடைவீதியில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மாகாளியம்மன் கோவில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோவில் என்பதால் கோவிலின் கட்டடங்கள் பல பகுதிகளில் சிதிலமடைந்து உள்ளது. கோவிலை இடித்துவிட்டு புதுப்பித்துக் கட்ட பலமுறை ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2021 ம் ஆண்டு புனரமைக்க இந்து அறநிலையத்துறை அனுமதி அளித்தது.
இந்தநிலையில் நேற்று கடைவீதி மாகாளியம்மன் கோவிலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கோவில் செயல் அலுவலர் ராமசாமி,சமூக ஆர்வலர்கள் அண்ணாதுரை, பாலசுப்பிரமணியம், ராம். கண்ணையன், விமல் பழனிச்சாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் இது குறித்து செயல் அலுவலர் ராமசாமி செய்தியாளரிடம் கூறியதாவது:- கோவில் கட்டுமான பணிக்கு கடந்த ஆண்டிலேயே அனுமதி கிடைத்து விட்டது. கோவிலுக்கு முன் உள்ள கடைகளில் வாடகைக்கு உள்ளவர்களை காலி செய்ய ஏற்கனவே நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் காலி செய்தவுடன் பாலாலயம் செய்து கோவில் திருப்பணிகள் தொடர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.