என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Revenue officials"
- சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் பெற விரும்பும் மனுதாரரின் விருப்பம் பாராட்டத்தக்கது.
- எதிர்கால சந்ததியினர் இட ஒதுக்கீடு சலுகைகளை பெறுவதில் இது பாதிப்பு ஏற்படுத்தும் என்றார் நீதிபதி.
சென்னை:
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் வழங்க திருப்பத்தூர் மாவட்ட வருவாய்த்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை மட்டுமே வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்க அதிகாரம் உள்ளது. சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கிட எந்த உத்தரவும் இல்லாத நிலையில் சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் வழங்க உத்தரவிட முடியாது எனக்கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
பள்ளி மாணவர் சேர்க்கை உள்ளிட்ட படிவங்களில் சாதி, மதம் குறித்த கேள்விகள் அடங்கியுள்ள பகுதியை பூர்த்திசெய்ய விரும்பாதவர்களுக்கு அனுமதி வழங்கி அரசாணை உள்ளது. எனவே சாதி, மதத்தைக் குறிப்பிட விரும்பவில்லை என்றால் அந்தப் பகுதியை விட்டுவிடலாம் என மனுதாரருக்கு அறிவுறுத்தினார்.
மேலும் சாதி, மதம் அற்றவர் என்று சான்றிதழ் பெற விரும்பும் மனுதாரரின் விருப்பம் பாராட்டத்தக்கது என்றாலும்கூட, இதுபோன்ற சான்றிதழ் பெறும்போது ஏற்படக்கூடிய பின்விளைவுகளையும் கவனிக்க வேண்டும். அப்படி சான்றிதழ் வழங்கினால் எதிர்கால சந்ததியினர் இட ஒதுக்கீடு சலுகைகளைப் பெறுவதில் பாதிப்பு ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தை தாக்கிய கஜாபுயல் மிகப் பெரிய அளவில் பொருட் சேதத்தை ஏற்படுத்தியது. மேலும் உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் செரின்ராஜ் (வயது 32). இவர் துபாயில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நீலிமா (22), மகன் மாதவ் (2) ஆகியோருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். கஜாபுயல் குறித்த தகவல் அறிந்தவுடன் காரில் குடும்பத்துடன் ஊருக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். கல்லறை மேடு பகுதியில் சூறைக்காற்றில் சாய்ந்த மரம் கார் மீது முறிந்து விழுந்தது. இதில் காரில் வந்த 3 பேரும் படுகாயமடைந்து நீலிமா காருக்குள்ளேயே உயிரிழந்தார். மற்ற 2 பேரும் கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (65). இவர் நேற்று தனது வீட்டில் இருந்தபோது அருகில் இருந்த மரம் முறிந்து வீட்டு சுவரில் சாய்ந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வருவாய் அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #GajaCyclone
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்