search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Roads encroachment"

    • மதுரையில் சாலைகளை ஆக்கிரமித்து திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

    மதுரை

    மதுரை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடந்து முடிந்துள்ளன. மேலும் சில பணிகள் நடந்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் பல்வேறு புதிய பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

    பல்வேறு இடங்களில் சாலைகளை விரிவாக்கம் செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் முக்கிய சாலைகளில் நடுரோட்டை ஆக்கிரமித்து மாடுகள் சுற்றி திரிவது அதிகரித்துள்ளது.

    கே.கே.நகர், பைபாஸ்ரோடு, ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி ரோடு, நத்தம் பாலத்தின் கீழ் பகுதி, கோரிப்பாளையம், அண்ணா பஸ் நிலையம், காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கார்கள், இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் இந்த சாலைகளில் மாடுகள் நடுரோட்டை ஆக்கிரமித்து செல்வது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

    வாகன நெரிசலை கண்டு கொள்ளாமல் மாடுகள் மெதுவாக நடந்து செல்கின்றன. சில இடங்களில் மாடுகள் நடுரோட்டில் படுத்து கிடப்பதையும் காண முடிகிறது. மாடுகள் மீது மோதி விடாமல் இருப்ப தற்காக வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டியுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    சில நேரங்களில் வாகன ஓட்டிகளும், ேபாக்குவரத்து போலீசாரும் மாடுகளை துரத்தி விட்டு வாகனங்களை இயக்க வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்து பாதிப்பு பற்றி உணராமல் மாடுகளின் உரிமையாளர்கள் அவிழ்த்து விடுகின்றனர்.

    இது மாடுகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மாநகராட்சியில் இருந்து அவ்வப்போது மாடுகளை பிடித்து சென்று உரிமையாளர்களிடம் எச்சரித்து ஒப்படைக் கின்றனர். இருந்தபோதும் நடுரோட்டில் மாடுகள் திரிவது தொடர்கதையாக உள்ளது.

    வாகன நெரிசலை குறைக்க பல்வேறு நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் மாடுகள் சாலைகளில் சுற்றி திரியாமல் இருப்பதற்கு மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×