search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "roaming around"

    • யானை நடக்க முடியாமல் அங்கேயே முகாமிட்டுள்ளது.
    • வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் காரமடை வனச்ச ரகத்திற்குட்பட்ட பகு தியான ஆதிமாதையனூர் கிராமம் மலை அடிவார பகுதியாகும். இங்கு இரவு நேரத்தில் காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறி விளைநிலங்களுக்குள் புகுந்து தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் விளைநிலத்தில் நுழைந்த காட்டு யானை ஒன்று கடந்த 2 நாட்களாக அடிக்கடி நடமாடி வருகிறது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்து றையினருக்கு தகவல் அளித்த நிலையில் வனத்துறை யினர் வந்து யானையை விரட்ட முயன்றனர். அப்போது யானைக்கு வாயில் காயம் ஏற்பட்டிருப்பது. தெரியவந்தது.இதனால் யானை உணவு உட்கொள்ள முடியாமல் நேய்வாய் பட்டுள்ளது. பின்னர் யானையை வனத்து றையினர் அடர்ந்த வனப்ப குதிக்கு விரட்டி யடிக்க பட்டாசுகள் வெடித்து முயற்சி செய்தனர். இருப்பினும் அந்த யானை உடல் மிகவும் மெலிந்து காணப்படுவதால் யானை நடக்க முடியாமல் அங்கேயே முகாமிட்டுள்ளது.

    அதே சமயத்தில் அந்த யானை அருகில் உள்ள தக்காளி தோட்டத்தில் புகுந்து அதனை உட்கொன்ட போது யானையால் உட்கொள்ள முடியவில்லை. யானை வாயில் உணவு போட்டால் அது முழுவதுமாக வாயிவலியாகவே வெளியேறுகிறது. இதனால் வனத்துறையினர் தர்ப்பூசணி மற்றும் வாழைப்பழங்களில் மாத்திரைகளை வைத்து கொடுத்தனர் அதையும் யானை உட்கொள்ளவில்லை. இதனையடுத்து யானையை அருகில் உள்ள வனப்பகுதியினுள் விரட்ட வனத்துறையினர் முயன்றனர். இதனால் கோபமடைந்த யானை அங்கு இருந்து விவசாய தோட்டத்தின் வேலியை காளால் மிதித்து சேதப்படுத்தியது.

    மேலும் அங்கிருந்தவர்களையும் துரத்தியது. இதனால் அனைவரும் ஓடி சென்று தப்பினர். தற்போது வரை விவசாய தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானையை வனத்துறையினர் கண்காணித்து வரும் நிலையில் காயம் பட்ட யானைக்கு மயக்க ஊசி செலுத்தி கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்து வனத்திற்குள் விரட்ட அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×