என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rocketry The Nambi Effect"
- நடிகர் மாதவன் இயக்கி நடித்த திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'.
- இப்படத்தில் ஷாருக்கான் மற்றும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர்.
பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் மாதவன் நடித்திருந்தார்.
இப்படம் கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை ஈட்டியது. மேலும், இந்த படத்தில் ஷாருக்கான் மற்றும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆனதையடுத்து படத்தில் பணியாற்றியவர்களுக்கு விலையுயர்ந்த வாட்ச் ஒன்றை மாதவன் பரிசாக வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'.
- இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் ஷாருக்கான் ஆகியோர் கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக மாதவன் முன்பே அறிவித்திருந்தார். ராக்கெட்ரி படம் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாதவன் பேசியது சர்ச்சைக்குள்ளானது. அதன்பின் அதுகுறித்து விளக்கம் அளித்து மாதவன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா ராக்கெட்ரி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் வீடியோவை மாதவன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் விஞ்ஞானி நம்பி நாராயணனிடம், மாதவன் சூர்யாவை தன்னுடைய நெருங்கிய நண்பர் என்று அறிமுகப்படுத்திவைக்கிறார். நம்பி நாராயணன், தான் சூர்யா மற்றும் அவரின் தந்தை சிவகுமாரின் ரசிகன் என்று கூறுகிறார். இது வீடியோ குறித்து பதிவிட்டுள்ள மாதவன் நம்பி நாராயணன் சார் சூர்யா மற்றும் அவரது தந்தையின் படங்களின் தீவிர ரசிகர். என் சகோதரர் சூர்யாவால் மட்டுமே என்னை மிகவும் நன்றாக உணர முடியும் என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நம்பி நாராயணன் சார் சூர்யா மற்றும் அவரது தந்தையின் படங்களின் தீவிர ரசிகர்.@Suriya_offl . Only my bro can make me feel sooo good .❤️❤️🚀🚀🙏🙏 https://t.co/2DXe62TelR
— Ranganathan Madhavan (@ActorMadhavan) June 28, 2022
- மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் சிறப்பு காட்சி டெல்லியில் திரையிடப்பட்டது.
- விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு இந்தப் படம் சமர்ப்பிக்கப்படுகிறது.
மூத்த விஞ்ஞானியும், இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையப் பொறியியல் வல்லுநருமான நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள , ராக்கெட்ரி: தி நம்பி விளைவு திரைப்படத்தை இயக்கியுள்ள நடிகர் மாதவன், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில், ராக்கெட்ரி: தி நம்பி விளைவு திரைப்படத்தின் சிறப்பு காட்சி டெல்லியில் உள்ள சிரி ஃபோர்ட் அரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை செயலர் அபூர்வ சந்திரா, சிபிஐ முன்னாள் இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன், முன்னாள் ஐஜி பி.எம்.நாயர், மூத்த அதிகாரிகள் மற்றும் ராக்கெட்ரி திரைப்படக் குழுவினர் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மாதவன், விண்வெளி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் ஆளுமையை போற்றும் படமாக இது இருக்கும் என்றார். விகாஸ் எஞ்சினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நம்பி நாராயணனுக்கு இந்தப் படம் சமர்ப்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அறிவியல் வளர்ச்சி மற்றும் மனிதவள மேம்பாடு ஆகியவற்றில் இந்தியாவின் திறமை குறித்து உலகிற்கு எடுத்துக்காட்டுவதாக இந்தப் படம் அமையும் என்றும் அவர் கூறினார். ராக்கெட்ரி: நம்பி விளைவு திரைப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'.
- இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ராக்கெட்ரி படம் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது, அதில் மாதவான் பேசியதாவது, "ஆயிரம் ஆண்டுக்கு முன் நம் முன்னோர்கள் எழுதிய பஞ்சாங்கத்திற்கும், தற்போது உள்ள விஞ்ஞானத்திற்கும் தொடர்பு இருக்கிறது. நமது பஞ்சாங்கத்தில் கிரகங்கள் அதனுடைய ஈர்ப்பு விசை போன்றவற்றை ஆயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதி வைத்துள்ளனர். அந்த பஞ்சாங்கத்தில் இருக்கும் தரவுகள் தான் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் நமது செயற்கைகோள் வெற்றிகரமாக செல்ல உதவியாக இருந்தது" என்றார்.
மாதவனின் இந்த கருத்து இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு செவ்வாய் கிரகத்துக்கு செல்வது முடியாத காரியம் என்று சொல்லி அவரை பலரும் கேலி செய்தும், விமர்சித்தும் பதிவுகள் வெளியிட்டனர். இந்த கருத்து பரபரப்பான நிலையில் சர்ச்சைக்கு மாதவன் பதில் அளித்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "'பழைய பஞ்சாங்கம் என்று கேலி செய்வதற்கு நான் தகுதியானவன்தான். நான் அறியாமையில் இருந்துள்ளேன். ஆனால், நாம் இரண்டு என்ஜின்களுடன் செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டை அனுப்பிய சாதனையை மறுக்க முடியாது. நம்பி நாராயணனின் விகாஸ் என்ஜின் ஒரு ராக்ஸ்டார்" என்று தெரிவித்துள்ளார்.
🙏🙏I deserve this for calling the Almanac the "Panchang" in tamil. Very ignorant of me.🙈🙈🙈🤗🚀❤️Though this cannot take away for the fact that what was achieved with just 2 engines by us in the Mars Mission.A record by itself. @NambiNOfficial Vikas engine is a rockstar. 🚀❤️ https://t.co/CsLloHPOwN
— Ranganathan Madhavan (@ActorMadhavan) June 26, 2022
- முன்னணி நடிகரான மாதவன் தற்போது இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
- இவர் இயக்கியுள்ள படத்தின் டிரைலர் உலகின் மிகப்பெரிய விளம்பரப்பலகையில் வெளியானது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'அலைபாயுதே' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் மாதவன். இதைத்தொடர்ந்து 'மின்னலே', 'டும் டும் டும்', போன்ற பல படங்கள் நடித்ததன் மூலம் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இவர் சமீபத்தில் நடித்த 'மாறா' திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது.
நடிகர் மாதவன் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கையை மையக்கருத்தாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் மாதவன் காதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சிம்ரன் இணைந்துள்ளார்.
இப்படம் ஜூலை 1-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாதவன் மற்றும் படக்குழுவினர் புரோமோஷனுக்காக அமெரிக்கா முழுவதும் 12 நாட்கள் விளம்பர சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து உலகின் மிகப்பெரிய விளம்பர பலகையான டைம்ஸ் ஸ்கொயரில் உள்ள நாஸ்டாக் பில்போர்டில் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' டிரைலர் ஒளிபரப்பப்பட்டது. அப்போது படக்குழுவினருடன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.
Never have I expected to score for a film like #Rocketry 🚀... 👇🏽 pic.twitter.com/jnWjAcIrh4
— 𝚂𝚊𝚖 𝚌 𝚜 (@SamCSmusic) April 21, 2019
@NambiNa69586681 So very tough to get to where you are sir, even merely look look-wise .. But doing my very very best ..@rocketryfilm@Tricolourfilm@vijaymoolanpic.twitter.com/kABXwPWLEL
— Ranganathan Madhavan (@ActorMadhavan) December 13, 2018
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்