search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Royal Challengers Bangalore"

    • ஐபிஎல் 2021-ல் ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகினார்.
    • அணியில் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விபரங்களை அறிவிக்க வரும் நாளை கடைசி நாளாகும்.

    மும்பை:

    10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் அணியில் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விபரங்களை அறிவிக்க வரும் நாளை கடைசி நாளாகும். இதனால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஆர்சிபி அணியில் விராட் கோலி தக்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் அவரே ஆர்சிபி அணியின் கேப்டனாக தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ஆர்சிபி மற்றும் விராட் கோலி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. 

    ஐபிஎல் 2021-ல் ஆர்சிபியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது,

    • டோனி பெங்களூரு அணி வீரர்களுக்கு கை குலுக்காமல் டிரெசிங் ரூம் சென்றுவிட்டார்.
    • இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை அணி தனது கடைசி லீக் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் சென்னை அணி களமிறங்கியது.

    பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி கடைசி ஓவர் வரை சென்று தோல்வி அடைந்தது. இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து சென்னை அணி வெளியேறியது. வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

    போட்டி முடிந்த பிறகு சென்னை அணி வீரர்கள், ஆர்.சி.பி. வீரர்களுக்கு கை குலுக்க வரிசையில் நின்றிருந்தனர். சி.எஸ்.கே. வீரர்களில் முதல் ஆளாக நின்ற டோனி பெங்களூரு அணி வீரர்களுக்கு கை குலுக்காமல் டிரெசிங் ரூம் சென்றுவிட்டார்.

    களத்தில் இருந்து வெளியே செல்லும் போது வழியில் இருந்த ஆர்.சி.பி. அணியின் பணியாளர்களுக்கு கை கொடுத்த டோனி சோகத்துடன் டிரெசிங் ரூம் சென்றார். டோனி ஆர்.சி.பி. வீரர்களிடம் கை குலுக்காமல் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்த வண்ணம் இருந்தது.

    இந்நிலையில் டோனி தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் போன வருடம் நடந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. அந்த மகிழ்ச்சியில் சிஎஸ்கே வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வந்தனர்.

    அந்த கொண்டாட்டத்தில் இருந்த டோனி அனைவரையும் குஜராத் வீரர்களுக்கும் கைகுலுக்கி விட்டு வரலாம் வாங்க என அழைத்து சென்றார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவு செய்து டோனிக்கும் ஆர்சிபி வீரர்களுக்கு இதுதான் வித்தியாசம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் மோதுகிறது.
    • நாளை பெங்களூருவில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ந்தேதி சென்னையில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இப்போட்டிகள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

    இதில் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக தகுதி பெற்றது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    4-வது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறப் போவது யார்? என்பது நாளை தெரியும். பெங்களூருவில் நாளை நடக்கும் 68-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    14 புள்ளிகளுடன் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டாலும் சென்னை அணி தகுதி பெற்று விடும்.

    பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற ரன் ரேட் அதிகமாக வைத்து வெற்றி பெற வேண்டும். பெங்களூரு முதலில் பேட்டிங் செய்து 200 ரன்கள் எடுத்தால், 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் அல்லது 2-வது பேட்டிங் செய்தால் 11 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெல்ல வேண்டும். ஒருவேளை மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டால் பெங்களூரு அணிக்கு கடினமாக அமையும்.

    இந்நிலையில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானம் குறித்து ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது. அந்த வீடியோவில் மைதானத்தில் அதிகபடியான நீரை பைப் மூலம் ஊற்றுகின்றனர். அந்த நீர் சிறிது நேரத்தில் காணாமல் பொய்விட்டது.

    இதனால் நாளை எவ்வளவு மழை பெய்தாலும் போட்டி சீக்கிரம் தொடங்கி விடும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த செய்தி ஆர்சிபி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஆகும்.

    நாளை பெங்களூருவில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஐதராபாத் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
    • பெங்களூரு அணி 8 போட்டிகளில் விளையாடி 1-ல் வெற்றியும் 7-ல் தோல்வியும் அடைந்து கடைசி இடத்தில் உள்ளது.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    ஐதராபாத் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. பெங்களூரு அணி 8 போட்டிகளில் விளையாடி 1-ல் வெற்றியும் 7-ல் தோல்வியும் அடைந்து கடைசி இடத்தில் உள்ளது. இந்த போட்டி ஆர்சிபி அணிக்கு முக்கியமான போட்டியாகும்.

    • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
    • இதில் 14-ல் பெங்களூருவும், 18-ல் மும்பையும் வெற்றி கண்டுள்ளன.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றிரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மல்லுக்கட்டுகிறது.

    இந்த சீசனை மோசமாக தொடங்கிய மும்பை அணி முதல் 3 ஆட்டங்களில் (குஜராத், ஐதராபாத், ராஜஸ்தானுக்கு எதிராக) வரிசையாக தோற்றது. ஒரு வழியாக உள்ளூரில் நடந்த கடந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சை தோற்கடித்து வெற்றிக்கணக்கை தொடங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷன், ரோகித் சர்மா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, டிம் டேவிட், ஒரே ஓவரில் 32 ரன் விளாசிய ரொமாரியோ ஷெப்பர்டு ஆகியோரின் அதிரடியால் மும்பை அணி 234 ரன்கள் குவித்ததோடு, அதை வைத்து டெல்லியை 205 ரன்னில் கட்டுப்படுத்தியது. காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள 20 ஓவர் கிரிக்கெட்டின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் தனது முதல் ஆட்டத்தில் டக்-அவுட் ஆனார். என்றாலும் இன்றைய ஆட்டத்தில் அவரது வாணவேடிக்கையை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். சாதகமான உள்ளூர் சூழலை பயன்படுத்தி தொடர்ந்து 2-வது வெற்றியை வசப்படுத்தும் முனைப்புடன் மும்பை அணியினர் ஆயத்தமாகிறார்கள்.

    பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த சீசனிலும் தகிடுதத்தம் போடுகிறது. 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள அந்த அணி பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. சென்னை, கொல்கத்தா, லக்னோ, ராஜஸ்தான் ஆகிய அணிகளிடம் 'சரண்' அடைந்து விட்டது.

    ஆரஞ்சு நிற தொப்பியை தக்கவைத்துள்ள விராட் கோலி (ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 316 ரன்) தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் பெங்களூரு அணியில் தடுமாறுகிறார்கள். குறிப்பாக மேக்ஸ்வெல் (5 ஆட்டத்தில் 32 ரன்), கேமரூன் கிரீன் (68 ரன்), கேப்டன் பிளிஸ்சிஸ் (109 ரன்), ரஜத் படிதார் (50 ரன்) ஆகியோரின் தொப்பல் தான் அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 17 வீரர்களை பயன்படுத்தி பார்த்தும் இன்னும் களம் காணும் சரியான லெவன் அணி அமையவில்லை. கோலியுடன் இதர பேட்ஸ்மேன்களும் நிலைத்து நின்று மட்டையை சுழற்றினால் தான் மும்பையை அடக்க முடியும். இதை உணர்ந்து செயல்பட்டு அவர்கள் தங்கள் அணியை வெற்றிப்பாதைக்கு திருப்புவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 14-ல் பெங்களூருவும், 18-ல் மும்பையும் வெற்றி கண்டுள்ளன.

    • பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடக்க லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் வீழ்ந்தது.
    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை சாய்த்தது.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் கடந்த 22-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணியளவில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

    பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடக்க லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் வீழ்ந்தது. அடுத்து உள்ளூரில் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்சை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. அந்த ஆட்டத்தில் 177 ரன் இலக்கை பெங்களூரு அணி எட்டுவதற்கு விராட் கோலியின் அசத்தலான அரைசதம் அடித்தளமாக அமைந்தது என்றால், தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர் ஆகியோரின் அதிரடி வெற்றிக்கு வித்திட்டது.

    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான கேமரூன் கிரீன், ரஜத் படிதார், மேக்ஸ்வெல் ஆகியோர் ஜொலித்தால் அந்த அணியின் பேட்டிங் மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் முகமது சிராஜ், யாஷ் தயாள், அல்ஜாரி ஜோசப், ஆல்-ரவுண்டர்கள் கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை சாய்த்தது. கடைசி ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 13 ரன் தேவையாக இருந்த நிலையில் அந்த ஓவரை வீசிய ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டை வீழ்த்தியதுடன் 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

    பேட்டிங்கில் பில் சால்ட், வெங்கடேஷ் அய்யர், ஸ்ரேயாஸ் அய்யர், நிதிஷ் ராணா, ஆந்த்ரே ரஸ்செல் , ரிங்கு சிங், பந்து வீச்சில் சுனில் நரின், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா ஆகியோர் மிரட்டக்கூடியவர்கள். மொத்தத்தில் 2-வது வெற்றியை வசப்படுத்த இரு அணிகளும் வரிந்துகட்டும் என்பதால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது. 2-வது வெற்றியை பெறப்போகும் அணி எது? என்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • ஐ.பி.எல். 2024 போட்டி மூலம் கிரிக்கெட் களத்திற்கு திரும்புகிறார்.
    • பிரபல ஹேர்-ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹக்கீம் கோலியின் புதிய தோற்றத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததன் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2024 -ல் விராட் கோலியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கின்றனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்காக விராட் கோலி களமிறங்கும்போது, அவரது புதிய சிகை அலங்கார தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர உள்ளது.

    பிரபல சிகையலங்கார நிபுணர் ஆலிம் ஹக்கீம் , விராட் கோலியின் புதிய 'ஹேர் கட்' புகைப்படத்தை தற்போது 'இன்ஸ்டாகிராமில்' பகிர்ந்துள்ளார். இது வெளியான சிறிது நேரத்தில் வைரலாகியுள்ளது. விராட் கோலியின் புத்தம் புதிய 'ஹேர் ஸ்டைலிங்' மிகவும் வித்தியாசமாக உள்ளது.




     

    கடந்த மாதம் விராட் கோலி 2-வது முறையாக தந்தையானார். இதனால் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. மேலும் அவர் ஐ.பி.எல். 2024 போட்டி மூலம் கிரிக்கெட் களத்திற்கு திரும்புகிறார்.

    பிரபல ஹேர்-ஸ்டைலிஸ்ட் ஆலிம் ஹக்கீம் கோலியின் புதிய தோற்றத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததன் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

    • ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு அணியில் உள்ள வீரர்களும் தங்களது பயிற்சி முகாமில் இணைந்த வண்ணம் உள்ளனர்.
    • அந்த வகையில் ரோகித் மற்றும் கோலி அவரவர் அணியுடன் இணைந்துள்ளனர்.

    பெங்களூரு:

    2024-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்.சி.பி.) அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட அனைத்து அணிகளும் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு அணியில் உள்ள வீரர்களும் தங்களது பயிற்சி முகாமில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

    அந்த வகையில் விராட் கோலி ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதற்காக ஆர்.சி.பி. அணியுடன் இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவை ஆர்சிபி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    இதே போல இந்திய அணியின் கேப்டன் ரோகித், மும்பை அணியுடன் இணைந்துள்ளார். இவருக்கு இசையுடன் ஒரு வீடியோவை மும்பை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    • முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (திங்கட்கிழமை) காலை 9:30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • குறைந்தபட்ச டிக்கெட் விலை 1,700 ரூபாயாகவும் அதிகபட்ச டிக்கெட் விலை 7,500 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

    ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

    இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.அந்த வகையில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் 22-ம் தேதி சென்னையில் நடைபெறும் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (திங்கட்கிழமை) காலை 9:30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச டிக்கெட் விலை 1,700 ரூபாயாகவும் அதிகபட்ச டிக்கெட் விலை 7,500 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பெங்களூரு அணியின் மூன்று போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை துவங்கியது.
    • ரசிகர்கள் டிக்கெட் எடுக்க முடியாமல் அவதியுற்றனர்.

    இந்தியன் பிரீமியர் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த நிலையில், போட்டிகளுக்கான டிக்கெட்டுகளுக்கு இப்போதே தட்டுப்பாடு சூழல் உருவாக துவங்கியது.

    சமீபத்தில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மூன்று போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் துவங்கியது.

    எனினும், முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களில் வலைதளம் அதிக பயனர்கள் டிக்கெட் எடுக்க முயற்சித்த காரணத்தால் முடங்கியது. இதன் காரணமாக ரசிகர்கள் டிக்கெட் எடுக்க முடியாமல் அவதியுற்றனர்.

    ஆர்.சி.பி. அணி பெங்களூருவில் விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளின் விலை ரூ. 2 ஆயிரத்து 300-இல் இருந்து துவங்குகிறது. டிக்கெட்டுகளின் அதிகபட்ச விலை ரூ. 42 ஆயிரத்து 350 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    டிக்கெட் விற்பனை துவங்கியதுமே, அதனை வாங்க சுமார் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஆன்லைன் வரிசையில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் 17 நாட்களுக்கான போட்டிகளின் அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கிறது.

    • ஆர்சிபி பயிற்சியாளர் மைக் ஹெசன் நீக்கப்படுவதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்தது.
    • இவரின் ஒப்பந்தம் இந்த மாத இறுதியுடன் முடிவடைவதால், அதன்பின் புதிய பயிற்சியாளரை நியமிக்க ஆர்சிபி நிர்வாகம் பரிசீலித்து வந்தது.

    பெங்களூரு:

    ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்லாத அணிகளுள் பெங்களூரு அணியும் ஒன்று. இந்த அணியின் பயிற்சியாளராக கடந்த 2019-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தவர் மைக் ஹெசன். இவரது தலைமையின் கீழ் ஆர்சிபி அணி தொடர்ச்சியாக 3 முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியால் பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை. கடந்த முறை அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாததால் அந்த அணி ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். 16 ஆண்டுகளாக ஒரு கோப்பையை கூட வெல்ல முடியாதது, அந்த அணி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


    இதனை தொடர்ந்து ஆர்சிபி பயிற்சியாளர் மைக் ஹெசன் நீக்கப்படுவதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்தது. இவரின் ஒப்பந்தம் இந்த மாத இறுதியுடன் முடிவடைவதால், அதன்பின் புதிய பயிற்சியாளரை நியமிக்க ஆர்சிபி நிர்வாகம் பரிசீலித்து வந்தது.

    இந்த நிலையில் ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்டி ப்ளவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆர்சிபி அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளது. இவருடன் மூன்று ஆண்டுகள் வரை ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    • மும்பை இந்தியன்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் பெங்களூரு அணி தோல்வியடைய வேண்டும் என்ற நிலை இருந்தது.
    • குஜராத் அணி 19.1 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவு பெற்றன. நேற்றைய கடைசி லீக் போட்டியில் 2 போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டியில் மும்பை- ஐதராபாத் அணிகள் மோதின.

    இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் புள்ளி பட்டியலில் 16 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பிடித்தது. ஆனால் ரன்ரேட் குறைவாக இருந்தது. இதனால் இந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் பெங்களூரு அணி தோல்வியடைய வேண்டும் என்ற நிலையில் மும்பை இந்தியன்ஸ் காத்திருந்தது.

    இதனையடுத்து இரவு நடைபெற்ற 2-வது போட்டியில் குஜராத் - பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி விராட் கோலியின் அசத்தல் சதத்தால் 197 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் அணி 19.1 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


    இந்த போட்டியை டிவியில் பார்த்து கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து கொண்டாடினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

    முன்னதாக, மும்பை அணிக்காக கிரீன் மற்றும் சுப்மன் கில் சிறப்பாக ஆடினர் என மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகரான சச்சின் டெண்டுல்கர் நக்கலாக டுவிட் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×