என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sahitya Akademi"

    • புதிய விதிகளின் கீழ் விருதுகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் அதனபடிதான் விருது வென்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் விரும்புகிறது.
    • தன்னாட்சி அமைப்பின் செயல்பாடுகளை மத்திய அரசு முடக்குவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

    தமிழ் உட்பட இந்திய மொழிகளில் படைக்கப்ட்ட இலக்கியத்திற்காக ஒவ்வோர் ஆண்டும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    சாகித்ய அகாடமி என்பது மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.

    இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட இருந்த நிலையில் மத்திய கலாச்சார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி விருது வென்றவர்களின் பெயர்கள் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தேர்வு செயல்முறையில் அமைச்சகம் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தன்னாட்சி அமைப்பின் செயல்பாடுகளை மத்திய அரசு முடக்குவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

    விருது பெற்றவர்களின் பட்டியலை நிர்வாகக் குழு  அங்கீகரித்த நிலையில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறவிருந்த சில நிமிடங்களுக்கு முன்பு, அரசு பிரதிநிதிகள் சாகித்ய அகாடமி அதிகாரிகளுக்கு விருது வென்றவர்களின் பட்டியலை அறிவிக்க வேண்டாம் என்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து பேசிய சாகித்ய அகாடமி உறுப்பினர் ஒருவர் "நிர்வாகக் குழு பரிசு பெற்றவர்களின் பட்டியலை அங்கீகரித்த பிறகு, அரசாங்கப் பிரதிநிதிகள் அறிவிப்பை நிறுத்தி வைக்குமாறு பரிந்துரைத்தனர். பரிசு பெற்றவர்களைச் சரிபார்க்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்" என்று தெரிவித்தார்

    புதிய விதிகளின் கீழ் விருதுகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் அதனபடிதான் விருது வென்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் விரும்புவதாகக் கூறப்படுகிறது. கடைசி நிமிடத்தில் சாகித்ய அகாடமி விருது செயல்பாடுகளை முடக்கியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.   

    • எழுத்தாளர் மு.ராஜேந்திரன் எழுதிய காலா பாணி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது.
    • காளையார் கோவில் போரை முன் வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் காளையார் கோவில் போரை முன்வைத்து எழுதப்பட்ட காலா பாணி நாவலுக்கு நடப்பாண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன் இந்த நாவலை எழுதி உள்ளார்.

    இந்நிலையில் எழுத்தாளர் மு.ராஜேந்திரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், காலா பாணி: நாடு கடத்தப்பட்ட முதல் அரசனின் கதை எனும் வரலாற்றுப் புதினத்துக்காக சாகித்ய அகாடமி விருதுக்குத் தேர்வாகியிருக்கும் மு.ராஜேந்திரனுக்கு என் பாராட்டுகள். இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் வீரம் தோய்ந்த வரலாறு மேலும் வெளிச்சம் பெறட்டும் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள கே. நல்லதம்பிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • பேராசிரியை ப.விமலாவுக்கு தமிழில் சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • கல்விப்புலத்தில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபடும் தங்களின் பாராட்டத்தக்க பணி தொடர வேண்டும்.

    பாலியல் தொழிலாளியின் வாழ்க்கைச் சரிதை நூலான 'எனது ஆண்கள்' நூலை தமிழில் மொழி பெயர்த்த பேராசிரியை ப.விமலாவுக்கு தமிழில் சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    'எனது ஆண்கள்' நூலுக்காக 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி மொழிபெயர்ப்பு விருதுக்குத் தேர்வாகி இருக்கும் ப. விமலாவிற்கு எனது பாராட்டுகள்.

    கல்விப்புலத்தில் இருந்து இலக்கிய மொழிபெயர்ப்புகளில் ஈடுபடும் தங்களின் பாராட்டத்தக்க பணி தொடர வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். #SahityaAkademi #WriterRamakrishnan #EdappadiPalaniswami
    சென்னை:

    30 ஆண்டுகளாக தமிழ் எழுத்துலகில் பணியாற்றி வரும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் விருதுநகரின் மல்லாங்கிணறை பூர்வீகமாக  கொண்டவர்.  சென்னையில் தற்பொழுது வசித்து வருகிறார்.  கடந்த 1984ம் ஆண்டில் இருந்து சிறுகதை, நாவல் ஆகியவற்றை எழுதி வருகிறார்.

    இதற்கிடையே, 'சஞ்சாரம்'  என்ற நாவலுக்காக எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு இலக்கியத்திற்கான உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.



    இந்நிலையில், சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

    எளிய நடையில் பாமரர்களும் புரிந்துகொள்ளும் வகையில் பல சிறுகதைகள், நாவல்களை படைத்தவர் எஸ்.ராமகிருஷ்ணன். தன்னை முழுமையாக அர்ப்பணித்து தமிழ் எழுத்துக்களில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர். அவருக்கு விருது அறிவித்திருப்பது அவரது புகழுக்கு மணி மகுடம் சூட்டும் விதமாக அமைந்துள்ளது.

    தமிழகத்துக்கு பெருமை சேர்த்த எஸ் ராமகிருஷ்ணனுக்கு மக்கள் சார்பில் எனது பாரட்டுகள். மேன்மேலும் இதுபோல் பல்வேறு விருதுகள் பெற வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். #SahityaAkademi #WriterRamakrishnan #EdappadiPalaniswami
    ×