search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sai sudharsan"

    • பயிற்சி ஆட்டத்தின் போது சுப்மன் கில்லுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது.
    • இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெர்த்:

    இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்த தொடரில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா விளையாட உள்ளது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர்.

    இந்த நிலையில், பயிற்சி ஆட்டத்தின் போது சுப்மன் கில்லுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி வீரர்கள் காயத்தை சந்தித்து வருவதை அடுத்து இளம் வீரர்களான சாய் சுதர்சன் அல்லது தேவ்தத் படிக்கல் ஆகிய இருவரில் ஒருவரை இந்திய அணியில் சேர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

    • முதல் இன்னிங்சில் 21 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • 2-வது இன்னிங்சில் 103 ரன்கள் விளாசினார்.

    இந்தியா 'ஏ' அணி ஆஸ்திரேலியா சென்று இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த டெஸ்ட் ஐந்து நாட்கள் கொண்டதாகும்.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா 'ஏ' அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா 'ஏ' அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலியா 'ஏ' அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா 'ஏ' அணி 107 ரன்னில் சுருண்டது. தேவ்தத் படிக்கல் அதிகபட்சமாக 36 ரன்கள் சேர்த்தார். சாய் சுதர்சன் 21 ரன்களும், நவ்தீப் சைனி 24 ரன்களும் அடித்தனர். மற்றவர்கள் ஒற்றையிலக்க ரன்னில் வெளியேறினர்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 'ஏ' 195 ரன்களில் ஆல்அவுட் ஆனது. முகேஷ் குமார் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட் வீழ்த்தினார். பிரசித் 3 விக்கெட்டும், நிதிஷ் ரெட்டி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    88 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 'ஏ' அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் அபிமன்யு ஈஸ்வரன் 12 ரன்னிலும், ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

     அடுத்து 3-வது விக்கெட்டுக்கு சாய் சுதர்சனுடன் தேவ்தத் படிக்கல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் நிலைத்து நின்று விளையாட 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா மேலும் விக்கெட்டை இழக்கவில்லை. சாய் சுதர்சன் 96 ரன்களும், தேவ்தத் படிக்கல் 80 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய சாய் சுதர்சன் சதம் விளாசினார். சதம் அடித்த அவர் 103 ரன்னில் ஆட்டமிழந்தார். 200 பந்தில் 9 பவுண்டரியுடன் 103 ரன்கள் அடித்தார். மறுமுனையில் தேவ்தத் படிக்கல் 88 ரன்னில் வெளியேறினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 196 ரன்கள் சேர்த்தது.

    இந்தியா 91 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் அடித்துள்ளது. 199 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. 

    • கவுன்ட்டி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி சதம் அடித்துள்ளார்.
    • காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு பறிபோனது.

    இந்திய டெஸ்ட் அணி வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வரிசையாக விளையாட இருக்கிறது. உள்ளூர் போட்டியில் விளையாடினால்தான் இந்திய சீனியர் அணியில் இடம் என்பதால் விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ராவை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் துலீக் டிராபியில் விளையாடுகிறார்கள்.

    இந்திய அணிக்கு எப்போதுமே இடது கை பேட்ஸ்மேன்கள் பற்றாக்குறைதான். அதை போக்கும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    ஐபிஎல் அணியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். ஆனால் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்காமல் உள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான தரம்சாலா டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சன் அறிமுகம் ஆக வாய்ப்பிருந்தது. ஆனால் காயம் காரணமாக அதில் விளையாட முடியவில்லை. இடது கை பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் அணியில் இடம் பிடித்தார்.

    இருந்தபோதிலும் தனது முயற்சியை சாய் சுதர்சன் கைவிடவில்லை. ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சாய் சுதர்சனின் ஆட்டம் விக்ரம் சோலங்கிற்கு (குஜராத் டைட்டன்ஸ் கிரிக்கெட் டைரக்டர்) பிடித்துப் போக, இங்கிலாந்தின் கவுன்ட்டி அணியான சர்ரே அணியில் இணைய உதவி புரிந்தார். இவர் ஏற்கனவே அந்த அணியின் பயற்சியாளராக இருந்தனர்.

    சர்ரே அணிக்காக விளையாடி வரும் சாய் சுதர்சன் நேற்று நாட்டிங்காம்ஷைர் அணிக்கெதிராக 178 பந்தில் 105 ரன்கள் விளாசினார். இதில் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடங்கும். இது அந்த அணிக்காக விளையாடும் 3-வது போட்டியாகும். ஏற்கனவே இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர் ஒரு இன்னிங்சில் 73 ரன்கள் அடித்துள்ளார்.

    தற்போது துலீப் டிராபியில் இந்தியா "சி" அணியில் இடம் பிடித்துள்ளார். துலீப் டிராபியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அது நிச்சயம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோருக்கு அணியை தேர்வு செய்வதில் பெரிய தலைவலியை ஏற்படுத்தும்.

    ஷ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், சர்பராஸ் கான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்கும் ஆவலில் உள்ளனர்.

    • இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
    • இதில் இந்திய வீரர்களான சாய் சுதர்சன், பிரிதிவி ஷா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி கிரிக்கெட் போட்டிகளில் இந்திய இளம் வீரர்களான சாய் சுதர்சன், பிரிதிவி ஷா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

    இதில் சாய் சுதர்சன் சர்ரே அணிக்காக விளையாடி வருகிறார். முதல் இன்னிங்சில் 14 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    இதேபோல், நார்த்தம்டன்ஷைர் அணிக்காக விளையாடிய பிரித்வி ஷா முதல் இன்னிங்சில் 31 ரன்னும், 2வது இன்னிங்சில் 37 ரன்னும் எடுத்தார்.

    கவுன்டி போட்டிகளில் விளையாடி வரும் இளம் இந்திய வீரர்கள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் குறைந்த ரன்களில் அவுட்டானது ரசிகர்களை ஏமாற்றத்துக்கு ஆளாக்கியுள்ளது.

    • ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துபே ஆகியோருக்கு பதிலாக 3 இளம் வீரர்களை இந்திய அணி அறிவித்துள்ளது.
    • ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல் டி20 போட்டி வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது.

    5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியின் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இவரது தலைமையின் கீழ் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் இந்த சுற்றுபயணத்தில் விளையாடுகின்றனர். இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துபே ஆகியோர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். 

    இந்நிலையில் ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துபே ஆகியோர் வெஸ்ட் இண்டீஸில் இருந்து நாடு திரும்ப தாமதமாவதால் அவருக்கு பதிலாக 3 இளம் வீரர்களை இந்திய அணி அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழக வீரர் சாய் சுதர்சன் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். அதை தொடர்ந்து ஜித்தேஷ் சர்மா, ஹர்சித் ரானா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதல் டி20 போட்டி வருகிற 6-ந்தேதி ஹராரே மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த சீசனில் இரண்டு போட்டிகளில் 116 ரன்கள் அடித்துள்ளார்.
    • ஒரு அரைசதம் அவரது ஸ்கோரில் அடங்கும்.

    இந்தியாவின் இடது கை பேட்ஸ்மேனும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சாய் சுதர்சன் கடந்த சீசனில் கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் சர்ரே அணிக்காக விளையாடினார். இரண்டு போட்டிகளில் விளையாடி 116 ரன்கள் அடித்தார். அதில் ஒரு அரைசதம் ஆகும். இது அந்த அணி 22-வது முறை சாம்பியன் பட்டம் வெல்ல உதவியாக இருந்தது.

    இந்த நிலையில் மீண்டும் சர்ரே அணிக்காக இந்த சீசனில் சில போட்டிகளில் விளையாடுவார் என சர்ரே அணி தெரிவித்துள்ளது.

    சென்னையை சேர்ந்த சாய் சுதர்சன் ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். 2024 சீசனில் 527 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிராக கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். 3 போட்டிகளில் 127 ரன்கள் சேர்த்தார். இதில் 2 அரைசதங்கள் அடங்கும். முதல் தர போட்டிகளில் 29 இன்னிங்சில் 1118 ரன்கள் அடித்துள்ளார்.

    • சென்னை அணிக்கு எதிராக சாய் சுதர்சன் சதம் விளாசினார்.
    • சுதர்சன் 51 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை - குஜராத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில், சாய் சுதர்சன் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி சதம் விளாசினர்.

    தமிழக வீரர் சாய் சுதர்சன் சதம் விளாசியதன் மூலம் ஐபிஎல் தொடரில் குறைந்த போட்டிகளில் அதிவேக 1000 ரன்கள் எடுத்த இந்திய வீரர் சச்சின் சாதனையை சாய் சுதர்சன் முறியடித்துள்ளார். சுதர்சன் வெறும் 25 போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளார். சச்சின் 31 இன்னிங்ஸ் 1000 ரன்களை கடந்தார். இதற்கு முன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சச்சின் 31 இன்னிங்ஸ்களில் இந்திய வீரர்களின் சிறந்த சாதனையாக இருந்தது.

    மிகக் குறைந்த போட்டிகளில் 1000 ஐபிஎல் ரன்கள் விளாசிய வீரர்கள்:-

    21 - ஷான் மார்ஷ்

    23 - லெண்டல் சிம்மன்ஸ்

    25 - மேத்யூ ஹைடன்

    25 - சாய் சுதர்சன்*

    26 - ஜானி பேர்ஸ்டோவ்

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    பார்ல்:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது.

    இதில் 2 ஆட்டங்கள் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றன. இதையடுத்து தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் சிறப்பாக பீல்டிங் செய்த இந்திய வீரருக்கு 'இம்பேக்ட் பீல்டர்' என்ற விருதை பிசிசிஐ வழங்கியுள்ளது. அதன்படி இந்த 'இம்பேக்ட் பீல்டர்' விருதை இளம் வீரரான சாய் சுதர்சன் வென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
    • குஜராத் அணிக்காக கடந்த சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 116 ரன்னில் சுருண்டது. பின்னர் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் தமிழகத்தின் இளம் வீரரான சாய் சுதர்சன் அறிமுகம் ஆனார். மூன்று விடிவிலான கிரிக்கெட்டின் ஒட்டுமொத்தமாக இந்த போட்டியில்தால் இந்திய அணிக்காக அறிமுகம் ஆகியுள்ளார். அறிமுகம் ஆன முதல் போட்டியிலேயே 43 பந்தில் 9 பவுண்டரியுடன் 55 ரன்கள் விளாசி அசத்தினார்.

    அறிமுக போட்டியிலேயே இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். ஷ்ரேயாஸ் அய்யருடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்தார். இந்த நிலையில் இந்திய அணியில் விளையாடியதன் மூலம் கனவு நனவாகியதாக சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எல்லோரையும் போல் சிறுவயதில் இருந்து வளரும்போதே இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு எனக்கும் இருந்தது. கடின முயற்சியின் மூலம் கனவுகள் நனவாகும்.

    இந்திய அணிக்காக விளையாடி, எனது பங்களிப்பை செய்தது பாக்கியம். இந்த நினைவுகளை மேலும் நீட்டித்துக் கொண்டு செல்ல பார்க்கிறேன். கே.எல். ராகுலிடம் இருந்து அறிமுகத்திற்கான இந்திய அணியின் தொப்பியை வாங்கியது சிறப்பு தருணம். ஷ்ரேயாஸ் அய்யருடன் இணைந்து விளையாடியது அமேசிங்.

    இவ்வாறு சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் சிறப்பாக விளையாடியதன் மூலம் ஐபிஎல் ஏலத்தில் குஜராத் அணி இவரை ஏலம் எடுத்தது. குஜராத் அணிக்காக கடந்த சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

    • இங்கிலாந்தின் புகழ்பெற்ற கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது.
    • பொதுவாக சர்வதேச அளவில் விளையாடிய நட்சத்திர வீரர்கள் தான் கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்படுவார்கள்.

    லண்டன்:

    தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் கடந்த சில வருடங்களாக டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வந்ததால் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாட தேர்வானார். கடந்த வருட ஐபிஎல் தொடரில் வெறும் 8 போட்டிகளில் 362 ரன்கள் குவித்தார். அதிலும் குறிப்பாக சென்னை அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 96 ரன்கள் விளாசினார்.

    இவ்வாறு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதால் இலங்கையில் நடைபெற்ற 2023 வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வானார். அந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

    அதைத்தொடர்ந்து தியோதார் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற தெற்கு மண்டல அணியின் வெற்றியிலும் சிறப்பாக விளையாடி முக்கிய பங்காற்றிய அவர் தற்சமயத்தில் நல்ல பார்மில் இருக்கிறார்.

    இந்நிலையில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது. சர்ரே அணிக்காக விளையாட சாய் சுதர்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சர்ரே அணியில் விளையாடி வரும் முன்னணி வீரர்கள் சிலர் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஆட உள்ளனர்.

    இதன் காரணமாக சர்ரே அணிக்காக நடைபெற்று வரும் கவுண்ட்டி தொடரின் எஞ்சிய 3 போட்டிகளில் விளையாடுவதற்கு சாய் சுதர்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுவாக சர்வதேச அளவில் விளையாடிய நட்சத்திர வீரர்கள் தான் கவுண்டி தொடரில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்படுவார்கள். ஆனால் இளம் வீரரான சாய் சுதர்சன் சர்ரே அணிக்காக தேர்வாகியுள்ள நிலையில் பல முன்னாள் வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார்.
    • அதற்கான பாராட்டுக்கள் அவருக்கும் பயிற்சியாளர்களுக்கும் சேரும்.

    ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 7-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் சேர்த்தது.

    குஜராத் சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

    அதைத்தொடர்ந்து 163 ரன்களை துரத்திய குஜராத்துக்கு சகா 14 (7), சுப்மன் கில் 14 (13), கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 (4) என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 3 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்கள் மட்டுமே எடுத்து ஆரம்பத்திலேயே தடுமாறியது.

    அந்த நிலையில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய விஜய் சங்கருடன் ஜோடி சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சன் பொறுப்புடனும் நிதானமாகவும் ரன்களை குவித்து சரிவை சரி செய்தார். 

    மேலும் அரைசதம் அடித்து அசத்திய சாய் சுதர்சன் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 62* (48) ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில் சாய் சுதர்சன் இன்னும் ஓரிரு வருடங்களில் இந்திய அணிக்காக விளையாடுவதை பார்க்க முடியும் என்று கேப்டன் ஹர்திக் பாண்டியா பாராட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

    அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார். அதற்கான பாராட்டுக்கள் அவருக்கும் பயிற்சியாளர்களுக்கும் சேரும். கடந்த 15 நாட்களில் அவர் செய்து வரும் நல்ல பேட்டிங் அனைத்தும் அவருடைய கடின உழைப்பை உங்களுக்கு காட்டுகிறது.

    இதே போல செயல்படும் பட்சத்தில் இன்னும் 2 வருடங்களில் அவர் தன்னுடைய ஐபிஎல் அணிக்கு இன்னும் சிறப்பாக செயல்பட்டு சர்வதேச கிரிக்கெட்டிலும் இந்திய கிரிக்கெட்டுகாக முக்கிய பங்காற்றுவார் என்று கணிக்கிறேன்.

    என பாண்ட்யா கூறினார்.

    அவர் கூறுவது போல தற்போது இளம் வீரராக அனுபவமின்றி இருக்கும் சாய் சுதர்சன் இன்னும் நாட்கள் செல்ல செல்ல நல்ல அனுபவத்தை கற்று தன்னைத் தானே மெருகேற்றி இந்தியாவுக்கு விளையாடுவார் என்று உறுதியாக நம்பலாம். முன்னதாக சமீப காலங்களாகவே பெயரில் மட்டும் தமிழை வைத்துக்கொண்டு தமிழக வீரர்களுக்கு வாய்ப்பளிக்காத சென்னை அணி நிர்வாகம் இந்த போட்டியில் குஜராத்துக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்த சாய் சுதர்சன் – விஜய் சங்கர் போன்ற தமிழக வீரர்களின் திறமையை உணர வேண்டும் என தமிழக ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை அணியில் இம்பேக்ட் பிரேயராக துஷார் தேஷ்பாண்டே களமிறங்கினார்.
    • குஜராத் அணியில் இம்பேக்ட் பிளேயராக தமிழக வீரர் சாய் சுதர்சன் களமிறங்கினார்.

    ஐபிஎல் 16-வது சீசனின் முதல் போட்டியில் சென்னை-குஜராத் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஒவ்வொரு முறையும் ஐபிஎல் தொடரில் ஏதாவது புதிய விதிமுறை அறிமுகத்திற்கு வரும். அந்த வகையில் இந்த முறை 'இம்பேக்ட் பிளேயர்' என்கிற முறையை அறிமுகப்படுத்தப்பட்டது.

    இந்த புதிய விதியின் படி, டாஸ் போடும் போது வழங்கப்படும் 11 வீரர்கள் அடங்கிய பட்டியலுடன், மாற்று வீரர்கள் 5 பேரின் பெயர்களையும் வழங்க வேண்டும். அந்த 5 பேரில் இருந்து ஒருவரை, ஆட்டத்தின் நடுவில் களமிறக்கலாம்.

    அது பந்து வீச்சாக இருந்தாலும் சரி, பேட்டிங் வரிசையாக இருந்தாலும் சரி, அது அந்த அணியின் விருப்பம். அதே நேரத்தில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் களத்தில் இருந்தால் மட்டுமே, கூடுதலாக ஒரு வெளிநாட்டு வீரரை களத்தில் இறக்க முடியும். ஒருவேளை 4 வெளிநாட்டு வீரர்கள் களத்தில் இருந்தால், ஐந்தாவதாக மற்றொரு வெளிநாட்டு வீரரை 'இம்பேக்ட் ப்ளேயராக' களத்தில் இறக்க முடியாது.

    இந்த புதிய விதியை தன்னுடைய முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயன்படுத்தியது. குஜராத்திற்கு எதிராக களமிறங்கிய சென்னை அணியின் அம்பாதி ராயுடு பேட்டிங் செய்த நிலையில், சென்னை அணி பீல்டிங் செய்யும் போது, அவருக்கு பதிலாக 'இம்பேக்ட் பிரேயர்' முறையில் துஷார் தேஷ்பாண்டே மாற்றப்பட்டார்.

    3.2 ஓவர்களை வீசிய அவர், 51 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். 15.30 எக்கானமியை பெற்றார். இவ்வாறு களம் கண்டதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் முதல் 'இம்பேக்ட் ப்ளையர்' என்கிற பெருமையை பெற்றார் தேஷ்பாண்டே.

    இதேபோல குஜராத் அணியிலும் இம்பேக்ட் பிளேயராக தமிழக வீரர் சாய் சுதர்சன் களமிறங்கினார். குஜராத் அணி பீல்டிங் செய்யும் போது சிக்சரை தடுக்க சென்ற வில்லியம்சனுக்கு காலில் அடிப்பட்டதால் அவர் பாதிலேயே வெளியேறினார். இதனால் அவருக்கு பதிலாக சாய் சுதர்சன் பேட்டிங் செய்தார்.

    அவர் 17 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார். இருவரும் சொல்லி கொள்ளும் அளவுக்கு எந்த இம்பேக்ட்டும் கொடுக்கவில்லை என கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றனர்.

    ×