என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Salem central jail"
- மத்திய சிறையில் உள்ள குறிப்பிட்ட பிளாக்குகளில் ஜெயிலர் கிருஷ்ணகுமார் மற்றும் சிறை போலீசாருடன் திடீர் சோதனை மேற்கொண்டார்.
- ஜெயிலர் கிருஷ்ணகுமார் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார்.
சேலம்:
சேலம் மத்திய சிறையில் உள்ள குறிப்பிட்ட பிளாக்குகளில் ஜெயிலர் கிருஷ்ணகுமார் மற்றும் சிறை போலீசாருடன் திடீர் சோதனை மேற்கொண்டார்.
அப்போது சோதனை மேற்கொண்ட அறைகளில் இருந்த கைதிகள் விமல், பிரவீன், அஸ்வின் குமார் ஆகியோர் மறைத்து வைத்திருந்த செல்போன், சார்ஜர், சிம் கார்டு போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது குறித்து ஜெயிலர் கிருஷ்ணகுமார் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கைதி பிரபு திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
- கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபு மீண்டும் நேற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சேலம்:
கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாங்கா பிரபு (41). கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே சேலம் மாவட்டம் வீராணம் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கிலும் தொடர்புடைய இவர் உள்பட மூன்று பேரை நேற்று விசாரணைக்கு சேலம் நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர்.
அப்போது கைதி பிரபு திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில் , சேலம் மத்திய சிறையில் பழங்களை வைத்து சாராய ஊறல் தயாரித்ததாக அதிகாரிகள் தன்னை 4 நாட்களுக்கு முன்பு தனி சிறையில் அடைத்தனர்.
மேலும் பொய்யான தகவலை கூறி சிறைத்துறையினர் அடித்து துன்புறுத்துகிறார்கள். சேலம் மத்திய சிறையில் அதிகாரிகள் உதவியுடன் தான் கஞ்சா, கைபேசி உள்ளிட்டவை சிறைக்குள் கொண்டு செல்லப்பட்டு சிறைவாசிகளால் பயன்படுத்தப்படுகிறது என்று கூறினார். இதைத்தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபு மீண்டும் நேற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால் நேற்று மாலை முதல் பிரபு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று காலையும் வழக்கம்போல அவருக்கு உணவு வழங்கியும் அவர் சாப்பிட மறுத்து விட்டார் . தொடர்ந்து அவரிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதுவரை அவர் சாப்பிடவில்லை.
மேலும் தன்னை தனி சிறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாகவும், உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதால் வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் சிறையில் பரபரப்பு நிலவி வருகிறது. இதற்கு இடையே நேற்று சிறைத்துறை டிஐஜி மற்றும் குழுவினர் சேலம் மத்திய சிறையில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
- பழங்களை வைத்து கைதிகள் சிலர் சாராய ஊறல் போட்டிருப்பதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம்:
சேலம் மத்திய சிறையில் 200-க்கும் மேற்பட்ட குண்டர் சட்டம் பாய்ந்த கைதிகள் உள்பட 900-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு சிறையில் வழங்கும் உணவுகள் தவிர கேன்டீன் மூலமாகவும் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் ஆரஞ்சு, ஆப்பிள், சாத்துக்குடி போன்ற பழவகைகளும் கொடுக்கின்றனர். இதனை கைதிகள் வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள்.
இப்படி வழங்கப்படும் பழங்களை வைத்து கைதிகள் சிலர் சாராய ஊறல் போட்டிருப்பதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜெயிலர் மதிவாணன் தலைமையிலான குழுவினர் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மத்திய சிறையில் உள்ள 7-வது பிளாக் அருகில் மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த 2 லிட்டர் தண்ணீர் பாட்டிலை தோண்டி எடுத்தனர். அதில் ஆப்பிள், மாதுளை, வெல்லம் உள்பட பல்வேறு பழங்களை போட்டு ஊற வைத்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அதனை கைப்பற்றிய சிறை அதிகாரிகள் தரையில் கொட்டி அழித்தனர். மேலும் அந்த ஊறலை அங்கு போட்டு வைத்த கைதிகள் யார் ? என்பது குறித்து அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகளை வைத்து அடையாளம் காணும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
- சேலம் மத்திய ஜெயிலில் இன்று அதிகாலை கஞ்சா கடத்திய சமையல்காரர் பிடிபட்டார்
- கஞ்சா பறிமுதல் செய்து, சிறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சித்தூர் பகுதியை சேர்ந்தவர் செங்கோடன். இவரது மகன் தனபால் (வயது 39). இவர், சேலம் மத்திய ஜெயிலில் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார். இன்று அதிகாலை 3.30 மணி அளவில் ஜெயில் வளாகத்தில் சமைத்துக் கொண்டிருந்தபோது தனபால், சமையல் வேலைக்கு ஒரு கட்டையும் நூலும் தேவைப்படுவதாக கூறி ஜெயிலை விட்டு வெளியே வந்தார்.
இதையடுத்து அந்த பொருட்களை வாங்கிக்கொண்டு தனபால் மீண்டும் சிறைக்குள் வரும்போது நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை சோதனை செய்தனர். அப்போது அவரது பாக்கெட்டில் 160 கிராம் கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து கஞ்சா பறிமுதல் செய்து, சிறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து சேலம் மத்திய சிறை அலுவலர் மதிவாணன், கொடுத்த புகார் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சமையல்காரர் தனபாலிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு தருமபுரி டவுன் போலீசாரால் வழிப்பறி வழக்கில் தங்கராஜி கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- கடந்த 3-ந் தேதி மாலை தங்கராஜிக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது.
சேலம்:
தருமபுரி டவுன் பகுதியை சேர்ந்தவர் சின்னகண்ணு. இவரது மகன் தங்கராஜி (வயது 41) .
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தருமபுரி டவுன் போலீசாரால் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 3-ந் தேதி மாலை தங்கராஜிக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது.
இதனை கவனித்த சிறை ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற சிறை அதிகாரிகள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தங்கராஜி இன்று காலை 6.10 மணிக்கு பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் சிறை கைதி இறந்ததால் ஆஸ்பத்திரிக்கு சென்று மாஜிஸ்திரேட் விசாரணை நடத்துகிறார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
சேலம் மத்திய சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 200-க்கு மேற்பட்டோர் குண்டர் தடுப்பு கைதிகள் ஆவர்.
இந்த கைதிகளில் பலர் கஞ்சா மற்றும் செல்போன் பயன்படுத்துவதாக எழுந்த புகாரின் பேரில் சிறைத்துறை டி.ஐ.ஜி. அறிவுடை நம்பி மற்றும் சிறை அதிகாரிகள் சோதனை நடத்தி செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை போலீஸ் உதவி கமிஷனர் சேகர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் சேலம் மத்திய சிறைக்குள் அதிரடியாக புகுந்தனர். பின்னர் அங்குள்ள ஒவ்வொரு அறைகள் மற்றும் ஜெயில் வளாகத்திலும் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர்.
3 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் ஏதாவது பொருட்கள் சிக்கியதா? என்பது குறித்து போலீசார் கூற மறுத்து விட்டனர்.
அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பிறந்த நாள் மாவட்டந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நிறைவு விழா சென்னையில் நடக்கிறது.
இந்த நிலையில், எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சேலம் மத்திய ஜெயிலில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் 30 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்களது பெயர் விபரம் வருமாறு:-
1.அய்யனார்
2.செல்வம்
3.ஈஸ்வரன்
4.சேகர்
5.மாது
6.மணிகண்டன்
7.சின்னதுரை
8.சுந்தரம்
9.அய்யனார்
10.வரதராஜன்
11.ஜோசு ஆசீர் சிங்
12.ரவி என்கிற ரவிக்குமார்
13.சுபாஷ்
14.பிரகாஷ்
15.சண்முகம்
16.சின்னதம்பி
17.விஜயசங்கர்
18.நடேசன்
19.குப்புசாமி
20.பத்மநாபன்
21.பெரியண்ணன்
22.புதராசு
23.மண்ணாதன்
24.மணியசாகம்
25.அண்ணாமலை
26.ராஜூ
27.பெரியண்ணன்
28.மாது
29.அபிமன்யூ
30.திம்மராயன்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்