என் மலர்
நீங்கள் தேடியது "School Student Exam"
- 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,21,057 மாணவ, மாணவியர்கள் எழுதுகின்றனர்.
- 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,23,261 மாணவ, மாணவியர்களும் தேர்வெழுதவுள்ளனர்.
தமிழ்நாட்டின் 12-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் முறையே 03.03.2025 மற்றும் 05.03.2025 அன்றும் தொடங்க இருக்கின்றன.
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,21,057 மாணவ, மாணவியர்களும், 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,23,261 மாணவ, மாணவியர்களும் தேர்வெழுதவுள்ளனர்.
இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவச் செல்வங்கள் பொதுத்தேர்வு எழுதவுள்ளார்கள்.
மாணவச் செல்வங்கள் நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் தேர்வு எழுதுங்கள்.
இத்தனை ஆண்டுகாலமாக எழுதிய தேர்வுகளைப் போலவே இதுவும் ஒரு தேர்வுதான் எனும் மனநிலையோடு தேர்வறைக்குள் நுழையுங்கள்.
வளமான எதிர்காலம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அன்பு மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மாவட்ட அளவிலான கலைநிகழ்ச்சி போட்டிகளில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டனர்.
- முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், அலுலவர்கள் பாராட்டினர்.
கீழக்கரை
தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவி லான கலா உற்சவம் கலை நிகழ்ச்சி போட்டிகள் மஞ்சூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் 20-க்கும் மேற்பட்ட பள்ளி கள் பங்கேற்றன. இதில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் அல் ஆஷிப் ரைஹான் (11-ம் வகுப்பு) வாய்பாட்டிசை பாரம்பரிய நாட்டுப்புற பாட்டு போட்டியில் முதல் பரிசு பெற்று மாநில அளவில் பங்கு பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவரை பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இப்ராஹிம், முதல்வர் மேபல் ஜஸ்டஸ் மற்றும் ஆசிரியர்கள், அலுலவர்கள் பாராட்டினர்.