என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Scientific Advisor"
- தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர்.
- டிஜிட்டல் இந்தியாவில் கையில் எழுதியுள்ள பில்லை காண்பிக்கின்றனர்.
திருப்பூர் :
திருப்பூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற டாக்டர் அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது : பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை திமுகவினர்களின் ஒரு லட்சம் கோடி சொத்து பட்டியலை வெளியிட்டு இருப்பது தொடர்பான கேள்விக்கு இது ஒன்றும் புதியதாக சொன்னது இல்லை. எல்லாமே தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர்.
அவர்கள் அண்ணாமலை கட்டி இருக்கும் ரபேல் வாட்ச்க்கு பில் கேட்டு வருகின்றனர். அந்த பில்லை கூட சரியாக காண்பிக்கவில்லை. இந்த டிஜிட்டல் இந்தியாவில் கையில் எழுதியுள்ள பில்லை காண்பிக்கின்றனர். அதில் சீரியல் நம்பர் மாறி உள்ளது.இரண்டு சீரியல் நம்பர் உள்ளது. ஐபிஎஸ்., படித்தவர் யோசனை செய்து செய்வதை சரியாக செய்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் இந்த பிரச்சனையிலிருந்து தப்பித்து இருக்கலாம். வாட்ச் பில்லில் மாட்டிகிட்டாரு. அவர் சொன்னதற்கு நம்பகத்தன்மை இல்லாமல் உள்ளது. ஊழல் என்பது ஒரு சமூக நோய். இதில் எந்த கட்சியும் விதிவிலக்கு அல்ல. மேலும் இதில் தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் விதிவிலக்கு அல்ல.
மேலும் ஊழல் சமூக நோயாக மாறி இருப்பதால் ஒட்டுமொத்த மக்களின் மனநிலையே மாறி உள்ளது. எதிர்காலத்தில் எந்த அளவிற்கு மாறும் என்பதை மன வருத்தத்துடன் எதிர்நோக்கி இருக்க வேண்டிய சூழல் நிலவி உள்ளது. லஞ்ச ஊழலை ஒரு வியாதியாக எடுத்துக் கொள்ள வேண்டும் .அண்ணாமலை சொல்வதில் புதியது ஒன்றுமில்லை அதானி தொடர்பாக கேள்வியை ராகுல் காந்தி எழுப்பியதால் மோடியிடம் பதில் இல்லை. வாட்சுக்கும் சரியாக பில் காண்பிக்கவில்லை.
ஓசியாகத்தான் வாங்கினேன் என தெரிவிக்க வேண்டும். நேர்மை இல்லாத அண்ணாமலையால் அவர் சொல்லக்கூடிய பில்லை மக்கள் நம்ப மாட்டார்கள். ஊழல் என்பது ஒழிக்கப்பட வேண்டும். எதிர்கால சமுதாயம் இதுதான் நாடு இதுதான் வழிமுறைகள் என கெட்டுப் போய் விடக்கூடாது. கெட்டுப் போனால் ஒட்டுமொத்த சமுதாயமும் சீரழிந்து விடும். சமூக சீர்கேடு நடக்கும். அதனால் ஊழல் என்கிற நோய் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
ராமநாதபுரத்தில் சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியில் 2-ம் ஆண்டு நிறைவு விழா அகாடமி நிறுவனர் சுகேஷ் சாமுவேல் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நூலகர் (பொறுப்பு) நித்தியானந்தம், தூத்துக்குடி கருவூல உதவி அலுவலர் கனி முருகன், தங்கம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன், அகாடமி இயக்குநர் வித்யா சுகேஷ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
ராமநாதபுரம் கிளை ஒருங்கிணைப்பாளர் சங்கர் பிரபு வரவேற்றார்.
சுரேஷ் அகாடமியில் பயிற்சி பெற்று போட்டி தேர்வுகளில் வென்று பல்வேறு துறைகளில் அரசு பணியில் உள்ள சாதனையாளர்களுக்கு ராமநாதபுரம் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஹெட்லி லீமா அமாலினி பரிசு வழங்கினார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முன்னாள் ஆலோசகர் பொன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
போட்டி தேர்வு பயிற்சியாளர்களிடம் பொன்ராஜ் பேசியதாவது:-
அகாடமி நிறுவனர் சுகேஷ், கடந்த 2006-ம் ஆண்டிலிருந்து போட்டி தேர்வுகள் மூலம் தற்போது வரை அரசு துறைகளில் 14 ஆயிரம் ஊழியர்களை உருவாக்கி மிகப் பெரிய சரித்திரம் படைத்துள்ளார்.
கலாம் பிறந்த மண்ணில் பயின்ற நீங்கள் வேலைக்காக தேர்ந்தெடுக்கும் எந்த துறையாக இருந்தாலும் சிறந்து விளங்க வேண்டும். சாதனையாளராக வருவேன் என படிக்கும் காலத்தில் மாணவர்கள் இலட்சியம், நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் 14 லட்சம் அரசு ஊழியர்கள் ஏழரை கோடி மக்களை நிர்வகிக்கின்றனர்.
நாட்டில் அனைத்து மட்டத்திலும் நிலவும் லஞ்சம், ஊழலை அடியோடு வேரறுக்க மாணவர்கள் சிறந்த அரசியல் தலைவர்களாக உருவாக வேண்டும். மாணவர்களின் உழைப்பு எதிர்கால சந்ததியினருக்காக இருக்க வேண்டும்.
2050-ல் உலக மக்கள் தொகை 9 பில்லியனாக இருக்கும் போது உலகத்திற்கே உணவு தேவையை பூர்த்தி செய்வதில் சீனா, இந்தியா பெரும் பங்கு வகிக்கப்போகிறது. 2000 கிலோ மீட்டர் தூர நதிகளை இணைத்து விவசாயத்திற்கு சீனா சவால் விடுகிறது.
இந்தியாவில் தண்ணீரை கடலுக்குள் விட்டு வேடிக்கை பார்க்கிறோம். நீரை சேமிக்க வழி தெரியாமல் தமிழகமும் தண்ணீரை கடலுக்கு அனுப்புகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தூத்துக்குடி தொழிலதிபர் ஸ்டீபன்ராஜ், காவல் துணை கண்காணிப்பாளர் லில்லி கிரேஸி, தூத்துக்குடி கூட்டுறவு சார் பதிவாளர் அந்தோணி பட்டுராஜ், சுரேஷ் அகாடமி நெல்லை கிளை ஒருங்கிணைப்பாளர் அருண் சங்கர், கோவில்பட்டி பரோடா வங்கி ஊழியர் ராஜா, ஆர்.எஸ்.மங்கலம் வருவாய் ஆய்வாளர் கோபிநாத், ராமநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர் தட்சிணாமூர்த்தி, பட்டுக்கோட்டை துணை வட்டாட்சியர் பாலகோபாலன் உள்பட பலர் பங்கேற்றனர். ராமநாதபுரம் கிளை ஒருங்ணைப்பாளர் சுரேஷ் குமார் நன்றி கூறினார். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்