search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "selector George Bailey"

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது
    • கருப்பு மண் இரவில் கான்க்ரீட் போலாகி விடும் என பெய்லி தெரிவித்தார்

    நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டி தொடர் கடந்த அக்டோபர் 5 அன்று தொடங்கி, நவம்பர் 19 அன்று நிறைவடைந்தது.

    இந்த போட்டி தொடரில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வந்த இந்தியா, இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. வெற்றி உறுதி என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

    நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்ட திறமையான வீரர்கள் இருந்தும் இந்திய அணி தோல்வியுற்றது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    போட்டியின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா டாஸ் வென்றது. அதன் கேப்டன், பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் ஆடிய இந்தியாவை ஆஸ்திரேலிய அணி 240 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. பிறகு ஆடிய அந்த அணி முதலில் 3 விக்கெட்டுகளை இழந்தாலும், டிராவிஸ் ஹெட் அடித்த சதத்தினால் எளிதாக உலக கோப்பையை வென்றது.


    இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து பல முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

    இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான ரவிச்சந்திரன் அஸ்வின் இது குறித்து கருத்து தெரிவித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:

    நான் ஆஸ்திரேலிய தேர்வாளர் ஜார்ஜ் பெய்லியை சந்தித்து உரையாடும் போது, எப்போதும் முதலில் ஆடுவதை விரும்பும் ஆஸ்திரேலிய அணியினர், டாஸ் வென்றும் ஏன் பவுலிங்கை தேர்வு செய்தார்கள் என கேட்டேன்.

    அதற்கு பெய்லி, "ஐபிஎல் (IPL) மற்றும் பல இருதரப்பு போட்டிகள் இங்கு நாங்கள் விளையாடி உள்ளோம். சிவந்த மண் நேரம் செல்ல செல்ல தளர்ந்து போகும். ஆனால், கருப்பு மண் அப்படி அல்ல; மாலை விளக்கு ஓளியில் நன்றாக தெரியும். சிவந்த மண்ணில் பனிப்பொழிவு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. கருப்பு மண் மதிய வேளையில் பந்தை நன்றாக 'டர்ன்' செய்யும். பிறகு இரவு நேரத்தில் கான்க்ரீட் போன்று ஆகி விடும்" என கூறினார்.

    நான் அவர் பதிலால் ஆச்சரியம் அடைந்தேன்.

    இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்.

    பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியினர், டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை துல்லியமாக திட்டமிட்டு கோப்பையை வென்றதை சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

    ×