search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "selling Panmasala and Gutka"

    • பவானி உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளார்.
    • 2 கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபதாரம் விதிக்கப்பட்டது.

    பவானி:

    ஈரோடு வட்டாரத்திற்க்கு உட்பட்ட சித்தோடு பகுதியில் கலெக்டர் மற்றும் மாவட்ட நியமன அலுவலர் உணவு பாதுகாப்பு துறை ஆகியோர் பரிந்துரைபடி தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருட்கள் விற்பனை செய்யப் படுகிறதா என மளிகை கடைகள் மற்றும் சிறிய அளவிலான பெட்டிக்கடை ஆகியவற்றில் பவானி உணவு பாதுகாப்பு அலுவலர் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளார்.

    அப்போது 10-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் 2 கடைகளில் ஹான்ஸ் 10 பாக்கெட், பான் மசாலா 15 பாக்கெட் விற்பனை செய்ய வைத்து இருந்ததா கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து 2 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அபதாரம் விதிக்கப்பட்டது.

    மேலும் உணவு பாதுகாப்பு தரம் குறைவு பற்றிய புகாருக்கு 9444042322 என்ற எண்ணில் புகார் அளிக்க உணவு பாதுகாப்பு துறை அலுவலர் வேண்டு கோள் விடுத்துள்ளார். 

    ×