என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "SEMINAR PROGRAM"
- தவமாய் தவமிருந்து என்ற தலைப்பில், சிறப்பு கருத்தரங்கம் வருகிற 26ந் தேதி மாலை 3:30 மணி முதல் 5:30 வரை நடக்க உள்ளது.
- மனிதவள மற்றும் வாழ்வியல் பயிற்சியாளர் ஈரோடு கதிர் பங்கேற்கிறார்.
திருப்பூர் :
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு வழிகாட்டி ஊக்குவிக்கும் வகையில் யங் டீ அமைப்பு சார்பில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை காபி வித் எக்ஸ்பெர்ட் என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்கும் வல்லுனர்களை அழைத்து வந்து ஏற்றுமதியாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கான, ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
அதன்படி தவமாய் தவமிருந்து என்ற தலைப்பில், சிறப்பு கருத்தரங்கம் வருகிற 26ந் தேதி மாலை 3:30 மணி முதல் 5:30 வரை நடக்க உள்ளது. திருமுருகன்பூண்டி பாப்பீஸ் ஓட்டலில் நடக்கும் நிகழ்ச்சியில் மனிதவள மற்றும் வாழ்வியல் பயிற்சியாளர் ஈரோடு கதிர் பங்கேற்கிறார்.
தலைமுறை இடைவெளி, குடும்ப தொழில் தொடர்பான புரிதல், சிக்கல் மற்றும் அவற்றை தீர்ப்பதற்கான தீர்வுகள் குறித்து வாழ்வியல் பயிற்சியாளர் பேச இருக்கிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் ஏற்றுமதியாளர்கள் முன்பதிவு செய்ய வேண்டுமென திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
- திருச்சியில் பைந்தமிழ் இயக்கம் சார்பில் சிறப்பு ஆய்வரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது
- இயேசு காவியம் என்ற நூலைப் படைத்தவர். தன்னுடைய வாழ்வில் நேர்ந்த நிகழ்வுகளைப் பாவடிவில் இயற்றித் திரைப்படங்களிலே இசையோடு காற்றில் கைக்கோத்து உலவச் செய்த பெருமகன் என்று பாராட்டி கண்ணதாசனைப் புகழ்ந்து உரைத்தார்
திருச்சி:
திருச்சி பைந்தமிழ் இயக்கத்தின் 73-வது பாப்பொழிவு ஆய்வரங்க நிகழ்வு அரசு சையது முர்துசா மேனிலைப்பள்ளியில் பைந்தமிழியகத்தின் இயக்குநர் புலவர் பழ.தமிழாளன் தலைமையில் நடைபெற்றது.
மாணவர் அரங்கத்தில் முனைவர் நதியா அயோத்திதாசரின் அரும்பணிகள் பற்றியும், கிருட்டினவேணி மார்சல் நேசமணியாரின் தென்னெல்லைப் போராட்டம் பற்றியும் உரையாற்றினர்.
பின்னர் நிகழ்வுற்ற பாவரங்கத்தில் காலத்தை வென்ற கண்ணதாசன் என்ற பொருளில் துணை இயக்குநர் பாவலர் சொ.வேல்முருகன், பன்மொழிப்புலவர் அப்பாத்துரையார் பற்றி பாவலர் சந்திரசேகரன், பன்னாட்டுத் தமிழுறவு மன்றப் பெருங்கவிக்கோ அளித்த (புலவர் பழ.தமிழாளன்) பீடுதமிழ்ப் புலவர் கோ விருதினைப் பாராட்டும் வாழ்த்துக் கவிதையினை பாவலர் செல்வராசன் ஆகியமூவரும் வழங்கினர்.
இறுதியாக ஆய்வரங்கத்தில் முனைவர் கலைமணி திரையிசை தென்றல் கண்ணதாசன் என்னும் பொருளில் உரையாற்றும் பொழுது, கல்லூரியிலே கால் பதிக்காத கண்ணதாசன் காலத்தை வெல்லும் கவிதைகளைப் படைத்துள்ளார்.
4000 பாடல்களுக்குமேல் பல்வேறு பொருளிலும் 5000 பாடல்களுக்கு மேல் திரையிசையிலும் முடி சூடா மன்னனாகப் பவனி வந்தவர்.
இயேசு காவியம் என்ற நூலைப் படைத்தவர். தன்னுடைய வாழ்வில் நேர்ந்த நிகழ்வுகளைப் பாவடிவில் இயற்றித் திரைப்படங்களிலே இசையோடு காற்றில் கைக்கோத்து உலவச் செய்த பெருமகன் என்று பாராட்டி கண்ணதாசனைப் புகழ்ந்து உரைத்தார்.
அவரின் பாடல்களை இசைக்கருவி இல்லா நிலையிலும் இசையோடு பாடிக் கலந்து கொண்டவர்களை மகிழச் செய்தார்.
நிறைவில் செவல்பட்டி ப.சி.சு.மணி நன்றி கூறினார்.பாவலர் சொ.வேல்முருகன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
இதில் தமிழ்ப்பற்றாளர் கேசவன், பாவலர் மாரிமுத்து, தலைமை ஆசிரியை ஐடா ராசகுமாரி, பாண்டுரங்கன், சோசப், தமிழினியன், மகேந்திரன், மணி உட்படத் தமிழ்ப்பற்றாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்