என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Shawarma sale"
- துரித உணவகங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
- பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் சிக்கன் ஷவர்மா, குழி மந்தி பிரியாணி சாப்பிட்ட பலருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவும், உயிர்ப்பலியும் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கேரளாவில் துரித உணவகங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஓட்டல் ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
இவை முறையாக பின் பற்றப்படுகின்றனவா என கேரள மாநில சுகாதார குழுக்கள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறது. நேற்று 88 குழுவினர் மாநிலம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் விதிமுறைகளை சரியாக பின்பற்றாத 148 ஷவர்மா கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
- உணவு சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 42 பேருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் வருத்தம் அடைய செய்கிறது என்றார்.
நாமக்கல்லில் சவர்மா சாட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், துறை ரீதியாக விளக்கம் கேட்டு நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலருக்கும், மாவட்ட நியமன அலுவலருக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.
உணவு சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 42 பேருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை, உணவகத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கூறுகையில், " கடந்த 17ம் தேதி உணவு பாதுகாப்பு குழு ஆய்வு செய்ததில், அந்த உணவகத்தில் 16ம் தேதி இரவு 200 பேர் உணவு சாப்பிட்டு உள்ளனர்.
உணவு சாப்பிட்டு பாதிக்கப்பட்ட 42 பேருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனது உத்தரவுபடி ஆகஸ்டு 28ம் தேதி தமிழகம் முழுவதும் உணவுத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 280 கிலோ கெட்டுப்போன உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
இப்படி பல்வேறு முன்னெச்சரிகை நடவடிக்கை எடுக்கப்படும் நாமக்கல் மாவட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் வருத்தம் அடைய செய்கிறது" என்றார்.
- நாமக்கல் மாவட்டத்தில் நேற்று சவர்மா, கிரில் சிக்கன் சாப்பிட்ட 9ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.
- உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படாத, தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று சவர்மா, கிரில் சிக்கன் சாப்பிட்ட 9ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். மேலும் 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
உணவகங்களில் உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? ப்ரீசர் பெட்டிகள் உள்ளதா? என கண்காணிக்க மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படாத, தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்