என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sheena Rani"
- பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின்(டி.ஆர்.டி.ஓ) குழுவில் பல பெண்கள் அறிவியல் நிபுணர்கள் உள்ளனர்.
- திருவனந்தபுரத்தில் பிறந்த ஷீனா ராணி, பத்தாம் வகுப்பு படிக்கும்போதே அவரது தந்தை இறந்து விட்டார்.
புதுடெல்லி:
மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) 10 ஆண்டு முயற்சிக்கு பிறகு மேம்படுத்தப்பட்ட அக்னி-5 ஏவுகணையை தயாரித்துள்ளது. ஒரே நேரத்தில் பல்வேறு இலக்குகளை தனித்தனியாக தாக்கும் திறன் வாய்ந்த அதிநவீன அக்னி 5 ஏவுகணையின் முதல் சோதனை வெற்றி பெற்றுள்ளது.
திவ்யாஸ்திரம் என்ற திட்டத்தின் கீழ் மல்டிபில் இண்டிபென்டன்ட்லி டார்கெட்டபிள்ரீ-என்ட்ரி வெஹிகிள் (எம்.ஐ.ஆர்.வி) தொழில்நுட்பத்தில் உள்நாட்டிலேயே இது தயாரிக்கப்பட்டது.
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் இந்த ஏவுகணை விண்வெளியில் (வளிமண்டலத்துக்குமேல்) செலுத்தப்படும். இது பின்னர் அங்கிருந்து மீண்டும் வளிமண்டலத்துக்குள் நுழைந்து வந்து தரையில் உள்ள பல்வேறு இலக்குகள் மீது தனித்தனியாகவும், துல்லியமாகவும் தாக்குதல் நடத்தும்.
இது 5 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் வாய்ந்தது. இந்த சோதனையின் மூலம், எம்.ஐ.ஆர்.வி. தொழில்நுட்ப ஏவுகணைகள் கொண்ட அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின்(டி.ஆர்.டி.ஓ) குழுவில் பல பெண்கள் அறிவியல் நிபுணர்கள் உள்ளனர். அந்த குழுவை வழிநடத்தியது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷீனா ராணி ஆவார். அவர் டி.ஆர்.டி.ஓ.வின் ஏஸ் லேப் ஏ.எஸ்.எல்-ன் இணை இயக்குநராகவும் உள்ளார்.
திருவனந்தபுரம் சி.இ.டி.யில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்ஸ் என்ஜினீயரிங் படித்த இவர், இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் 8 ஆண்டுகள் பணிபுரிந்தார். 1998-ம் ஆண்டு பொக்ரான்-2 அணு ஆயுத சோதனைகளுக்கு பிறகு 1999-ம் ஆண்டு டி.ஆர்.டி.ஓ.வில் புதிதாக சேர்ந்தார்.
அன்றிலிருந்து நாட்டின் அக்னி ஏவுகணை திட்டத்திற்காக பணியாற்றி வருகிறார். அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றிருப்பது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
தேசத்தின் எல்லைகளை ஏவுகணைகள் பாதுகாப்பதால் அக்னி ஏவுகணை திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் ஏவுகணை ஏவுதலுக்கு தயாரானபோது எனது வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தது போல் இருந்தது.
ஆனால் பொதுமக்களிடையே கிடைத்த வரவேற்பை நான் உண்மையில் எதிர்பார்க்கவில்லை. எனது மற்றும் எனது சகோதரியின் வாழ்வில் என் அம்மா தான் உண்மையான தூண்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் பிறந்த ஷீனா ராணி, பத்தாம் வகுப்பு படிக்கும்போதே அவரது தந்தை இறந்து விட்டார். அதன்பிறகு அவரது தாயாரால் வளர்க்கப்பட்டவர். அவரது கணவரும் டி.ஆர்.டி.ஓ.வில் பணிபுரிந்தவர். ஷீனா ராணி கடந்த 2016-ம் ஆண்டு சிறந்த விஞ்ஞானி விருதையும் பெற்றுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்