என் மலர்
நீங்கள் தேடியது "should be protected"
- கோவை மாநகரத்தில் வருகிற 31-ந் தேதி கடைகள் அடைப்பு என அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
- நாங்கள் பந்த் அறிவித்தவர்களிடம் இந்த அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்துகிறோம்.
கோவை,
கோவை மாநகரில் வருகிற 31-ந் தேதி பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அன்றைய தினம் வியாபாரிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை மண்டல தலைவர் சூலூர் சந்திரசேகரன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாநகரத்தில் வருகிற 31-ந் தேதி கடைகள் அடைப்பு என அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். இது வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்.
கார்-சிலிண்டர் வெடிப்பு குறித்து காவல்துறை விசாரணை நடத்தி சமூக விரோதிகள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்துகிறது.
அதே சமயம் பந்த் என்றால் அது பொது பந்த் தேவைப்படும் போது வணிகர் சங்க பேரமைப்பு முழு ஒத்துழைப்பு நல்க உள்ளது. வணிகர் அமைப்புகளையும் கலந்து பேசி முடிவு செய்து தேதி அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உறுதியாக இருக்கிறது.
எனவே நாங்கள் பந்த் அறிவித்தவர்களிடம் இந்த அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்துகிறோம். எங்களுடைய இந்த அறிவிப்புக்கு எதிராக வணிகர்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் ஏற்படாத வண்ணம் காவல்துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பிலும், இணைந்த வணிக சங்கங்களின் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.






