search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "should be taken to provide"

    • முருகம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் கொடுமுடி யூனியன் அலுவலகத்திற்கு திரண்டு வந்து வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மனாபனிடம் மனு கொடுத்தனர்.
    • சுமை தாங்கி பகுதியில் தற்போது போர் போட்டு டேங்க் கட்டப்பட்டு உள்ளது. அதில் இருந்து எங்களுக்கு குடிநீர் வழங்கிட ஆவண செய்ய வேண்டும்.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது முருகம்பாளையம். இக்கிராமத்தை சேர்ந்த பெண்கள் கொடுமுடி யூனியன் அலுவலகத்திற்கு திரண்டு வந்து வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மனாபனிடம் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது:

    எங்கள் பகுதி நொய்யல் ஆற்றங்கரையில் உள்ளது. இதனால் நிலத்தடி நீர் அனைத்தும் மாசுபட்டு உள்ளதால் அனைத்து ஆழ்குழாய் கிணறுகளும் மூடப்பட்டு விட்டன. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டமும் சரியாக செயல்படுவதில்லை. வீட்டுக்கு 2 குடம் குடிநீர் கிடைப்பதே அரிதாக உள்ளது.

    மேலும் அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கும் குடிதண்ணீர் பற்றாக்குறை உள்ளது.எனவே சுமை தாங்கி பகுதியில் தற்போது போர் போட்டு டேங்க் கட்டப்பட்டு உள்ளது. அதில் இருந்து எங்களுக்கு குடிநீர் வழங்கிட ஆவண செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக ஊராட்சி செயலாளரை தொடர்பு கொண்டு குடி தண்ணீர் காலை, மாலை 2நேரமும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    ×