என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Siddha Medical Camp"
- வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பில் ஆய்வு நல வாழ்வு சித்த மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.
- சித்த மருத்துவ அலுவலர் செந்தில்குமார், தொற்றா நோய்கள் சிகிச்சையில் சித்த மருத்துவத்தின் பங்கு, டெங்கு காய்ச்சல் தடுப்பில் நிலவேம்பு கஷாயத்தின் முக்கியத்துவம் மற்றும் நாள்பட்ட வியாதிகளுக்கான சித்த மருத்துவ முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சேசன்சாவடியில் வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பில் ஆய்வு நல வாழ்வு சித்த மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது. பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில் வாழப்பாடி அரசு மருத்துவமனை ஆயுஷ் நல வாழ்வு மைய சித்த மருத்துவ அலுவலர் செந்தில்குமார், தொற்றா நோய்கள் சிகிச்சையில் சித்த மருத்துவத்தின் பங்கு, டெங்கு காய்ச்சல் தடுப்பில் நிலவேம்பு கஷாயத்தின் முக்கியத்துவம் மற்றும் நாள்பட்ட வியாதிகளுக்கான சித்த மருத்துவ முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
இம்முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், வலி நிவாரணிகள் வழங்கப்பட்டன. வாழப்பாடி அரிமா சங்கத்தின் சார்பாக உடல் மற்றும் மன நல விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டன.
- வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பில் ஆயுஷ் நல வாழ்வு சித்த மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.
- ஆயுஷ் நல வாழ்வு மைய சித்த மருத்துவ அலுவலர் செந்தில்குமார் தொற்றா நோய்கள் சிகிச்சையில் சித்த மருத்துவத்தின் பங்கு, டெங்கு காய்ச்சல் தடுப்பில் நிலவேம்பு கஷாயத்தின் முக்கியத்துவம் மற்றும் நாள்பட்ட வியாதிகளுக்கான சித்த மருத்துவ முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சிங்கிபுரத்தில் வாழப்பாடி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவு சார்பில் ஆயுஷ் நல வாழ்வு சித்த மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது.
பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமில் வாழப்பாடி அரசு மருத்துவமனை ஆயுஷ் நல வாழ்வு மைய சித்த மருத்துவ அலுவலர் செந்தில்குமார் தொற்றா நோய்கள் சிகிச்சையில் சித்த மருத்துவத்தின் பங்கு, டெங்கு காய்ச்சல் தடுப்பில் நிலவேம்பு கஷாயத்தின் முக்கியத்துவம் மற்றும் நாள்பட்ட வியாதிகளுக்கான சித்த மருத்துவ முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். பேளூர் ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் இலக்குமணன், கர்ப்பிணிகளுக்கான யோகா பயிற்சி அளித்தார்.
இம்முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், வலி நிவாரணிகள் வழங்கப்பட்டன. வாழப்பாடி அரிமா சங்கத்தின் சார்பில் உடல் மற்றும் மன நல விழிப்புணர்வு கையேடுகள் வழங்கப்பட்டன. சிங்கிபுரம் நல வாழ்வு மைய செவிலியர்கள் கிரீஷ்மா, கனகராணி, அனுராதா, அபிநயா ஆகியோர் பரிசோதனை செய்தனர். நிறைவாக சுகாதார ஆய்வாளர் ஆனந்தராஜன் நன்றி கூறினார்.
வாழப்பாடி:
மத்திய அரசின் ஆயுஷ்மான் பவ- சேவா பக்வாடா திட்டத்தின் கீழ், ஆயுஷ் நல வாழ்வு சித்த மருத்துவ முகாம், வாழப்பாடி அருகே மாரியம்மன்புதூரில் நடைபெற்றது.
இம்முகாமில், வாழப்பாடி அரசு சித்த மருத்துவர் செந்தில்குமார், தொற்றா நோய்கள் சிகிச்சையில் சித்த மருத்துவத்தின் பங்கு, நிலவேம்பு கசாயத்தின் முக்கியத்துவம் மற்றும் நாள்பட்ட வியாதிகளுக்கான ஆயுஷ் மருத்துவ முறைகள் குறித்து விளக்கினார். யோகா பயிற்சியாளர் அருள் மணிகண்டன், பொதுமக்க ளுக்கு எளிய முறை யோகா பயிற்சி அளித்தார்.
இந்த முகாமில், ஒன்றிய குழு உறுப்பினர் உழவன் முருகன் மற்றும் பொதுமக்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். பொது மக்களுக்கு கபசுர குடிநீர், உடல் மற்றும் மன நல விழிப்புணர்வு கையேடுகள், வலி நிவாரணிகள் வழங்கப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்