search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sikhs for Justice"

    • இந்த அமைப்பு தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
    • நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு மீதான தடையை உள்துறை அமைச்சகம் நீடித்தது.

    புதுடெல்லி:

    காலிஸ்தான் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அமைப்பு அமெரிக்காவை தலையிடமாக கொண்டு செயல்படும் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பு. இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்கள் மற்றும் அத்துமீறல்களின்போது குரல் எழுப்பி வருகின்றனர்.

    பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் செயல்படும் நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பை சட்டத்துக்குப் புறம்பான அமைப்பாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது. அத்துடன், தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதால் இந்த அமைப்புக்கு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

    இதற்கிடையே, நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பின் மீதான தடை வரும் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது.

    இந்நிலையில், நீதிக்கான சீக்கியர்கள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது.

    • 1980களில் இந்தியாவில் காலிஸ்தான் தீவிரவாதம் உச்சத்தில் இருந்தது
    • வெறுப்புணர்வுக்கும், வன்முறைக்கும் நாங்கள் எதிரானவர்கள்

    சுதந்திர இந்தியாவில், 1940களில், வட இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் சீக்கியர்களுக்கென தனி நாடு கேட்டு பிரிவினைவாதிகள் போராட தொடங்கினர். தங்களுக்கென "காலிஸ்தான்" என பெயரிட்டு ஒரு தனி நாடு கேட்டு போராடி வந்த இவர்களின் போராட்டம், 1980களில் தீவிரமடைந்தது. பிறகு, இந்தியாவில் நடந்த தொடர் காவல்துறை நடவடிக்கைகளின் பலனாக இந்தியாவில் இந்த அமைப்பு நசுக்கப்பட்டது.

    ஆனால், அவ்வப்போது சில அயல்நாடுகளில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தொடர்ந்து தங்கள் பிரச்சாரத்தை தொடர்கின்றனர். குறிப்பாக, கனடா நாட்டில் அவர்களின் இந்தியா எதிர்ப்பு சமீப காலமாக தீவிரம் அடைந்திருக்கிறது.

    இந்நிலையில், ஜி20 அமைப்பின் 18-வது உச்சி மாநாட்டின் 2-நாள் மாநாடு இந்திய தலைநகர் புது டெல்லியில் 9, 10 தேதிகளில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்திருந்தார்.

    கனடாவில் அதிகரித்துள்ள இந்தியர்களுக்கு எதிரான காலிஸ்தான் செயல்கள் குறித்தும், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடுவது குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த அவர் தெரிவித்ததாவது:

    "நானும் உங்கள் பிரதமர் நரேந்திர மோடியும் இந்த 2 விஷயங்களை குறித்தும் சில வருடங்களாக பேசி வருகிறோம். கருத்து சுதந்திரம் மற்றும் அமைதிவழி போராட்டத்திற்கான சுதந்திரம், எங்களுக்கு முக்கியமானது. அதே சமயம், வெறுப்புணர்விற்கும், வன்முறைக்கும் நாங்கள் எதிரானவர்கள். அவற்றை எதிர்க்க நாங்கள் எப்போதும் முன் நிற்போம்."

    "ஒரு சமூகத்தை (சீக்கிய) சேர்ந்த சிலரின் நடவடிக்கை ஒரு ஒட்டு மொத்த சமூகத்தையோ அல்லது ஒரு நாட்டையோ (கனடா) குறிப்பதாக பொருளில்லை. ஒரு நாட்டின் சட்டதிட்டங்களை மதிப்பதன் அவசியம் குறித்தும் நாங்கள் இருவரும் கருத்துக்கள் பரிமாறிக்கொண்டோம்," என்று ட்ரூடோ கூறினார்.

    கனடாவின் வேன்கூவர் நகரில் உள்ள இந்திய தூதரகத்தை பூட்ட போவதாக "நீதிக்காக சீக்கியர்கள்" எனும் அமைப்பினர் அறிவித்து இருந்தனர். இதற்கு அடுத்த நாள், கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் உள்ள சர்ரே நகரத்தில் உள்ள ஸ்ரீமாதா பாமேஷ்வரி துர்கா கோவிலை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்த முயன்றனர்.

    இப்பின்னணியில், ட்ரூடோவின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகிறது.

    ×