search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "silver armour"

    • தேவர் சிலைக்கு வழங்கப்பட்ட வெள்ளி கவசம் விஷேச நாட்களில் அணிவிக்கப்படும்.
    • முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராம லிங்கத்தேவர் நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை நேற்று நடைபெற்றது.

    இதில் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு தேவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.பின்னர் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் வெள்ளி ருத்ராட்ச மாலை அணிவித்து தீபாராதனை காட்டினார்.

    வெள்ளி கவசம்

    இதைத்தொடர்ந்து தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார். அவர்களிடம் தேவர் சிலைக்கு அணிவிப்பதற்காக புதிதாக செய்யப்பட்ட வெள்ளி கவசத்தை ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார். வெள்ளி கவசம் 10 ½ கிலோ எடை கொண்டதாகும்.

    வெள்ளி கவசம் வழங்கும் நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், வெற்றிவேல், எம்.பி.க்கள் ரவீந்திரநாத், தர்மர், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், அய்யப்பன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    புதிதாக வெள்ளி கவசம் வழங்கியது குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

    இன்றைக்கு அ.தி.மு.க. சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு வெள்ளி கவசம் வழங்கியுள்ளோம். இங்குள்ள அறக்கட்டளை நிர்வாகத்தினர் அந்த வெள்ளி கவசத்தை அவர்கள் பொறுப்பில் வைத்துக் கொண்டு எப்போதெல்லாம் விஷேச நாட்களில் அதனை சாற்ற வேண்டுமோ அப்போ தெல்லாம் அவர்கள் முறைப்படி சாற்றுவதற்கு உரிமை கொடுத்துள்ளோம்.

    அ.தி.மு.க. ஒருங்கி ணைப்பாளர் நான் தான். அந்த அடிப்படையில் அ.தி.மு.க. சார்பில் நான் வெள்ளி கவசம் வழங்கியிருக்கிறேன். அ.தி.மு.க.வில் 1 ½ கோடி தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×