search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "singaperumal kovil"

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு கடன் கொடுத்த நண்பருடன் நெருக்கமாக உள்ள ஒருவரை சரவணன் தாக்கியதாக தெரிகிறது.
    • கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    வண்டலூர்:

    உத்திரமேரூர் அடுத்த களியப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் சரவணன் (வயது 20). நேற்று இரவு சரவணன் நண்பர்களுடன் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் பகுதியில் மதுகுடித்தார். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் சரவணனை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த சரணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே உடன் இருந்த நண்பர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    தகவல் அறிந்ததும் மறைமலை நகர் போலீசார் விரைந்து வந்து சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரித்த போது பரபரப்பு தகவல் கிடைத்தது. சரவணன் மற்றொரு நண்பருக்கு ரூ.10 ஆயிரம் கடன் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கடன் கொடுத்த நண்பருடன் நெருக்கமாக உள்ள ஒருவரை சரவணன் தாக்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக மதுகுடித்த போது சரவணனை உடன் இருந்த நண்பர்கள் கேட்டு உள்ளனர்.

    அப்போது ஏற்பட்ட மோதலில் சரவணன் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான காட்டழகிய சிங்கபெருமாள் கோவிலில் சகஸ்ர தீப வழிபாடு நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கார்த்திகை மாதத்தில் விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கம். குறிப்பாக வைணவ கோவில்களில் இந்த மாதத்தில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றி வழிபடும் சகஸ்ர தீப வழிபாடு நடைபெறும். இதனால் மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான காட்டழகிய சிங்கபெருமாள் கோவிலில் சகஸ்ர தீப வழிபாடு நேற்று நடந்தது.

    சகஸ்ர தீபத்தையொட்டி கோவில் மண்டபங்கள், பிரகாரங்கள், நந்தவனம் உள்பட கோவில் வாசல் முதல் மூலஸ்தானம் வரை ஆயிரக்கணக்கான விளக்கு களை பக்தர்கள் ஏற்றி வைத்து வழிபட்டனர். கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடந்தது. முன்னதாக மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் மாருதி நண்பர்கள் குழுவினர் செய்து இருந்தனர்.
    ×