search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sleeper coaches"

    • தற்போது இயங்கும் ரெயில்களில் அமரும் வசதி மட்டுமே உள்ளது
    • தமிழக நகரங்களுக்கு இடையே 2 ரெயில்கள் இயங்குகின்றன

    இந்தியாவில் உள்ள பல மாநிலங்களின் பல்வேறு நகரங்களை இணைக்கவும், மாநிலங்களிக்கு உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் வகையிலும் இந்தியன் ரெயில்வேயால் துவங்கப்பட்டது 'வந்தே பாரத்' ரெயில் சேவை.

    தற்போது பகல் நேர ரெயில் சேவையாக இருப்பதால், அமரும் வசதி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்கள் மணிக்கு சுமார் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    எந்த அயல்நாட்டு தொழில்நுட்பத்தையும் நாடாமல், இந்த ரெயில்களின் கட்டமைப்பு 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஐ.சி.எஃப். நிறுவனத்தாலேயே முழுவதும் வடிவமைக்கப்பட்டது இதன் மற்றொரு சிறப்பம்சம்.

    தற்போது வரை இந்தியா முழுவதும் 34 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கோவை-சென்னை வழித்தடத்திலும், திருநெல்வேலி-சென்னை வழித்தடத்திலும் என 2 ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்நிலையில், படுக்கை வசதியுடன் வரப்போகும் வந்தே பாரத் ரெயில்களின் 'மாதிரி' வடிவங்களின் படங்களை இந்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்.

    16 பெட்டிகளை கொண்ட இந்த ரெயிலில் பணியாளர்களுக்கு 34 படுக்கைகளும் பயணிகளுக்கு 823 படுக்கைகளும் என மொத்தம் 857 படுக்கைகள் இடம்பெறும். அதிர்வுகளை தாங்க கூடிய மேம்படுத்தப்பட்ட ஷாக் அப்சார்பர்கள், போதிய அளவு வெளிச்சத்திற்கான மின் விளக்குகள், இரண்டு படுக்கைகளுக்கு இடையே போதிய இடைவெளி, மேலே உள்ள படுக்கைகளுக்கு சுலபமாக ஏறும் வகையில் படிக்கட்டு வசதி என பயணிகளை ஈர்க்கும் வகையில் பல வசதிகள் இதில் உள்ளது.

    உயர் கட்டண பிரிவு ரெயில் சேவையான ராஜ்தானி விரைவுவண்டியில் உள்ள வசதிகளை விட இது சிறப்பாக இருக்கும் வகையில், இதன் வடிவமைப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

    அடுத்த வருடம் பிப்ரவரி மாதவாக்கில் சோதனை ஓட்டத்திற்கு இது விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • ெரயில்களில் படிக்கட்டுகளில் தொங்கியபடி லக்கேஜ் வைக்குமிடத்தில் அமர்ந்து ரெயில் பெட்டியின் தரையில் அமர்ந்து பலர் பயணிக்கின்றனர்.
    • ஸ்லீப்பர் பெட்டிகளை கண்டறிந்து அறிக்கை தயாரிக்க மண்டல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    ெரயில்களில் முன்பதிவு செய்த படுக்கை வசதி ஏ.சி. பெட்டிகளில் பயணிப்பவரை விட முன்பதிவு செய்யாத பொது பெட்டிகளில் பயணிப்பவரே எப்போதும் அதிகம். பொதுப்பெட்டி குறைவாக உள்ள ெரயில்களில் படிக்கட்டுகளில் தொங்கியபடி லக்கேஜ் வைக்குமிடத்தில் அமர்ந்து ரெயில் பெட்டியின் தரையில் அமர்ந்து பலர் பயணிக்கின்றனர்.

    பகல் நேரங்களில் தான் நிலை இப்படி என்றால் இரவில் ெரயிலில் பயணிப்போர் இருமடங்கு அதிகம் என்பதால் நிலை இன்னமும் மோசமாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் முயற்சிகளில் ஒன்றை ெரயில்வே நிர்வாகம் ஆலோசித்துள்ளது.

    அதன்படி பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள படுக்கை வசதி (ஸ்லீப்பர்) பெட்டிகள் முன்பதிவு செய்யாத பொது பெட்டிகளாக மாற்றப்பட உள்ளது. பகல் நேர ெரயில்களில் அதிக அளவில் படுக்கை வசதி பெட்டி காலியாக செல்வதால் முதல்கட்டமாக பகல் நேர ெரயில்களில் படுக்கை வசதி பெட்டி முன்பதிவு கலெக் ஷன் குறித்த ஆராயப்பட உள்ளது.

    இது குறித்து ெரயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    தொடக்கத்தில் மூன்றடுக்கு ஏ.சி. பெட்டிகளுக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருந்தது. இதனால் பல ெரயில்களில் பொது பெட்டிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. தற்போது பொது பெட்டிகளில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

    சூழலை கருத்தில் கொண்டு ஏ.சி. மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளை பொது பெட்டிகளாக மாற்ற ஆலோசிக்கப்பட்டு உள்ளது. இதற்காக பகல் நேர ெரயில்களில் பயணிகள் குறைவாக உள்ள ஸ்லீப்பர் பெட்டிகளை கண்டறிந்து அறிக்கை தயாரிக்க மண்டல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மண்டல வாரியாக ெரயில்கள் எண்ணிக்கை தெரிந்த பின் பொது பெட்டியாக மாற்றப்படுவது குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். 

    பாண்டியன், சோழன், மலைக் கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை கொண்ட பெட்டிகளின் (சிலிப்பர்) எண்ணிக்கையை தென்னக ரெயில்வே குறைக்கிறது. #Pandian Express
    சென்னை:

    தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    நெல்லை எக்ஸ்பிரஸ், பாண்டியன், சோழன் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்கின்றன. எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் எண்ணிக்கை 12 ஆக உள்ளது. இதில் 864 படுக்கை வசதி கொண்ட இருக்கைகள் உள்ளன.

    தற்போது 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஆனாலும் முன்பதிவு தொடங்கிய சில நாட்களிலேயே டிக்கெட் தீர்ந்து விடுகிறது. பஸ்களை விட கட்டணம் குறைவாக இருப்பதால் பயணிகள் ரெயிலை விரும்புகிறார்கள்.

    இதற்கிடையே பாண்டியன், சோழன், மலைக் கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 2-ம் வகுப்பு படுக்கை கொண்ட பெட்டிகளின் (சிலிப்பர்) எண்ணிக்கையை தென்னக ரெயில்வே குறைக்கிறது. 2-ம் வகுப்பு பெட்டிகளை குறைத்து 3-ம் ஏ.சி. பெட்டிகளை அதிகரிக்க முடிவு செய்து இருக்கிறது.

    இப்போது இயக்கப்படும் ஒரு ரெயில் பெட்டியில் 72 படுக்கை இருக்கைகள் உள்ளன. எக்ஸ்பிரஸ் ரெயிலில் இணைக்கப்படும் 12 பெட்டிகளில் சேர்த்து 864 படுக்கை வசதி இருக்கைகள் பயணிகளுக்கு கிடைக்கும்.

    தற்போது புதிதாக தயாரிக்கப்படும் ஒரு ரெயில் பெட்டியில் 78 இருக்கைகள் உள்ளன. ஆனால் ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி பாண்டியன், சோழன், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இணைக்கப்படும் 12 ரெயில் பெட்டிகள் எண்ணிக்கையை 9 ஆக குறைக்கப்படுகிறது. இதனால் படுக்கை வசதி இருக்கை கணிசமாக குறையும்.

    சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2-ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட 12 பெட்டிகள் இயக்கப்படுகின்றன. வருகிற 20-ந்தேதி முதல் 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளின் எண்ணிக்கை 9 ஆக குறைக்கப்படுகிறது. இதனால் சுமார் 162 படுக்கை வசதி இருக்கைகள் குறைகின்றன.

    இந்த மாற்றம் மதுரையில் இருந்து எழும்பூருக்கு புறப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 20-ந்தேதியும், எழும்பூரில் இருந்து செல்லும் ரெயிலில் 23-ந்தேதியும் அமல்படுத்தப்படுகிறது.

    இதே போல் எழும்பூரில் இருந்து மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலிலும், சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் படுக்கை வசதி கொண்ட இருக்கைகள் குறைக்கப்படுகின்றன.


    அதற்கு பதிலாக 3 அடுக்கு குளிர்சாதன பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்படுகிறது. இதன் மூலம் 10 முதல் 15 சதவீதம் 2-ம் வகுப்பு படுக்கை வசதி இருக்கைகள் மூன்று அடுக்கு ஏ.சி. இருக்கைகளாக மாற்றப்பட்டுள்ளது என்று பயணிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

    சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல மூன்று அடுக்கு ஏ.சி.யில் ஒரு டிக்கெட் விலை ரூ.815 ஆகும். 2-ம் வகுப்பு படுக்கை வசதி இருக்கை கட்டணம் ரூ.315 ஆகும். இந்த டிக்கெட் தக்கலில் 2-ம் வகுப்பு படுக்கை வசதியில் ரூ.415-ஆகவும், ஏ.சி.யில் ரூ.1130 ஆகவும் உள்ளது.

    தற்போது 2-ம் வகுப்பு இருக்கைகளை குறைத்து விட்டு 3-ம் வகுப்பு ஏ.சி. இருக்கைகளை அதிகப்படுத்தி இருப்பது சாதாரண பயணிகளை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

    இதே போல் நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் புதிதாக தயாரிக்கப்படும் 2-ம் வகுப்பு படுக்கை பெட்டிகள் விரைவில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது.
    ×