என் மலர்
நீங்கள் தேடியது "மாணவர் தலைவர்"
- முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
- ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கு முக்கிய காரணமாக இருந்த இயக்க தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டு கொல்லப் பட்டார்.
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா ஆட்சி மாணவர்கள் போராட்டத்தால் கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இதற்கிடையே வங்காளதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கு முக்கிய காரணமாக இருந்த இயக்க தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டு கொல்லப் பட்டார். இதனால் அங்கு வன்முறை வெடித்தது.
இந்தநிலையில் வங்காளதேச இடைக்கால அரசாங்கம் மீதும், அரசியல் தலைவர்கள் மீதும் ஷெரீப் உஸ்மான் ஹாடியின் சகோதரர் உமர் ஹாடி குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
எனது சகோதரர் கொலைக்கு அதிகாரத்தில் இருப்பவர்களே காரணம். அவரை கொன்றுவிட்டு அதை காரணம் காட்டி தேர்தலை ரத்து செய்ய விரும்புகிறீர்கள். பொதுத் தேர்தலை சீர்குலைப்பதற்காகவே அதிகாரத்தில் இருப்பவர்களால் இந்தக் கொலை நடத்தப்பட்டது.
தேர்தல் சூழல் பாதிக்கப்படாமல் இருக்க, கொலையாளிகள் மீது விரைவாக விசாரணை நடத்தப்படு வதை உறுதி செய்யுங்கள். ஆனால் அரசாங்கம் எந்த வெளிப்படையான முன்னேற்றத்தையும் செய்யவில்லை. ஷெரீப் உஸ்மான் ஹாடிக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், ஒரு நாள் நீங்களும் வங்காளதேசத்தில் இருந்து தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பீகார் மாநிலம், பெகுசாராய் பாராளுமன்ற தொகுதியில் மத்திய மந்திரி கிரிராஜ் சிங் பாரதீய ஜனதா கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் (வயது 32) போட்டியிடுகிறார்.
இவர் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக தேசத்துரோக வழக்கில் சிக்கியவர். இவர் பெகுசாராய் தொகுதியின் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த அறிவிப்பை டெல்லியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் கே. நாராயணா வெளியிட்டு நிருபர்களிடம் பேசினார்.
அப்போது அவர், “பாரதீய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்துபரிஷத் ஆகிய அமைப்புகள் சாதி, இனம் அடிப்படையில் சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்புகின்றன என்பதை வெளிப்படுத்த கடுமையாக உழைத்தவர் கன்னையா குமார். நாட்டில் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிரான அரசியல் முகமாக அவர் ஆகி உள்ளார்” என கூறினார்.






