search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிபழக்கம்"

    நெற்குன்றத்தில் மது குடித்து வந்த தகராறில் கணவர் மீது வெந்நீர் ஊற்றி கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.

    போரூர்:

    நெற்குன்றம் மந்தை வெளி தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். லாரி டிரைவர். இவரது மனைவி விமலா. ரமேஷ் தினமும் மது குடித்து விட்டு விமலாவை அடித்து உதைத்து வந்தார். கடந்த 18ந் தேதி குடிபோதையில் வந்த ரமேஷ்-விமலா இடையே தகராறு ஏற்பட்டது.

    அப்போது விமலாவை கடுமையாக தாக்கினார். அப்போது விமலா அடுப்பில் கொதித்து கொண்டு இருந்த வெந்நீரை ரமேஷ் மீது ஊற்றினார்.

    இதில் உடல் வெந்து அலறி துடித்த ரமேசை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து வழக்குபதிவு செய்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் இன்று விமலாவை கைது செய்தனர்.

    இந்திய அளவில் 10 முதல் 75 வயது வரை உள்ள 16 கோடி பேர் மது குடிப்பதாக மத்திய அரசின் ஆய்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், எய்ம்ஸ் மருத்துவ கல்வி நிலையத்துடன் இணைந்து ‘இந்தியாவில் பயன்படுத்தப்படும் போதை பொருள்கள் மற்றும் நோய் பாதிப்புகள்’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வை நடத்தியது. இதில் 36 மாநிலங்களிலும் 186 மாவட்டங்களில் 4.73 லட்சம் நபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் கிடைத்த அதிர்ச்சி தகவல்கள் வருமாறு:-

    இந்திய அளவில் 10 முதல் 75 வயது வரை உள்ள 16 கோடி பேர் (14.6 சதவீதம்) மது குடிக்கிறார்கள். இதன்காரணமாக சத்தீ‌ஷ்கார், திரிபுரா, பஞ்சாப், அருணாசலபிரதேசம், கோவா ஆகிய மாநிலங்களில் நோய் பாதிப்பு அதிகளவில் உள்ளது. மதுகுடிப்பவர்கள் 38 பேரில் ஒருவர் ஏதாவது ஒரு சிகிச்சை எடுத்துக்கொள்கிறார். 180 பேரில் ஒருவர் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்படுகிறார்.

    மதுவுக்கு அடுத்த இடங்களில் கஞ்சாவும், ஹெராயின் போன்ற போதைப்பொருட்களும் உள்ளன. 2.8 சதவீதம் பேர் (3.1 கோடி) கஞ்சாவும், 1.14 சதவீதம் பேர் ஹெராயினும், 0.96 சதவீதம் பேர் மருந்து பொருட்களையும், 0.52 சதவீதம் பேர் ஓபியமும் போதைக்காக பயன்படுத்துகிறார்கள். 10 முதல் 75 வயது வரை உள்ள 1.18 கோடி பேர் (1.08 சதவீதம்) தூக்க மாத்திரை, மயக்க மருந்து போன்றவைகளை போதைக்காக பயன்படுத்துகிறார்கள்.

    இவ்வாறு அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
    ஆலங்குடியில் மதுகுடிப்பதை மனைவி கண்டித்ததால் விஷம் கலந்த மதுவை குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகேயுள்ள பனங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் (55) விவசாயி. இவர் தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று துரைராஜ் மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் மது குடிக்க கூடாது என்று கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த துரைராஜ் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துரைராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஆலங்குடி அருகேயுள்ள பாண்டிக்குடியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி அன்புச்செல்வி (27). இவர்களுக்கு குழந்தை இல்லாததால், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்நிலையில், குழந்தை இல்லாததால், மனமுடைந்த அன்புச்செல்வி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கீரமங்கலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். திருமணம் முடிந்து 9 மாதங்களே ஆனதால் ஆர்.டி.ஓ டெய்சிகுமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். #tamilnews
    ×