search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அக்கா"

    சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் நேற்றிரவு தனியாக சுற்றி திரிந்த அக்கா, தம்பியை ரெயில்வே போலீசார் மீட்டனர்.
    சேலம்:

    சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் நேற்றிரவு வழக்கம் போல பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அப்போது 1-வது பிளாட்பார்மில் ஒரு சிறுமியும், ஒரு சிறுவனும் தனியாக நீண்ட நேரமாக சுற்றி சுற்றி வந்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த ரெயில்வே போலீசார் அவர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சேலம் மூலப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த காளியப்பன் மகள் பிரியா (8) மற்றும் அவரது தம்பி அருள் (5) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

    அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். ஆனால் எதற்காக வீட்டில் இருந்து அப்போது ரெயில் நிலையத்திற்கு வந்தனர் என்ற விவரம் தெரியவில்லை.

    இதையடுத்து ரெயில்வே போலீசார் 2 பேரையும் சேலம் மாநகர சைல்ட் லைன் அமைப்பிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த சிறுமி மற்றும் சிறுவனை இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கிறார்கள்.

    மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றபோது லாரி மோதியதில் மதுராந்தகத்தை சேர்ந்த அக்கா-தம்பி பலியாகினர்.
    வத்தலக்குண்டு:

    சென்னையை அடுத்த மதுராந்தகத்தை சேர்ந்த லோகநாதன் என்பவருடைய மகன் பிரதாப் (வயது 21). இவர், அங்குள்ள ஒரு ஜூஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். அவருடைய சித்தப்பா மகன் மெர்வின் (26), அவருடைய தங்கை கவுசல்யா (23). மெர்வினின் தோழி கயல்விழி (23). இவர்கள் 4 பேரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர்.

    அதன்படி 4 பேரும், 2 மோட்டார் சைக்கிளில் நேற்று காலை கொடைக்கானலுக்கு புறப்பட்டனர். ஒரு மோட்டார் சைக்கிளை பிரதாப் ஓட்ட, பின்னால் கவுசல்யா அமர்ந்திருந்தார். இதேபோல் மற்றொரு மோட்டார் சைக்கிளை மெர்வின் ஓட்ட தோழி கயல்விழி உடன் சென்றார்.

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில், கன்னிமார் கோவில் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற லாரி, எதிர்பாராதவிதமாக பிரதாப் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட பிரதாப்பும், கவுசல்யாவும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். மெர்வின், கயல்விழி ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் மாரிமுத்துவை (40) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×