என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 211683
நீங்கள் தேடியது "நடுவழி"
கரூர் அருகே இன்று காலை என்ஜின் பழுதால் நடுவழியில் நின்ற மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்று என்ஜின் பொருத்தப்பட்டவுடன் 2 மணி நேரத்திற்கு பிறகு புறப்பட்டு சென்றது.
திருச்சி:
சென்னையில் இருந்து திருச்சி, கரூர் வழியாக மங்களூருக்கு செல்லும் மங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை திருச்சி ஜங்ஷனுக்கு 4 மணிக்கு வந்தது.
மீண்டும் 4.10 மணிக்கு ரெயில் புறப்பட்டு சென்றது. காலை 7 மணிக்கு கரூரை தாண்டி சென்றபோது திடீ ரென ரெயில் என்ஜின் பழுதானது. இதனால் மூர்த்தி பாளையம் என்ற இடம் அருகில் நடுவழியில் ரெயில் நிறுத்தப்பட்டது.
மங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றதால் எதிரே வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலும் சிறிது தூரத்தில் நிறுத்தப்பட்டது. காரைக்குடி நோக்கி வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலை மூர்த்தி பாளையம் அருகில் நிறுத்தி வைத்தனர்.
இதற்கிடையே என்ஜின் பழுதான மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மாற்று என்ஜின் மூலம் புறப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து மாற்று என்ஜின் கொண்டு செல்லப்பட்டது.
இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக பயணிகள் ரெயிலிலேயே தவித்தனர். அதன் பிறகு பழுதான என்ஜினுக்கு பதிலாக மாற்று என்ஜின் பொருத்தப்பட்டதும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 9 மணிக்கு மேல் புறப்பட்டு சென்றது.
தொடர்ந்து எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயிலும் காரைக்குடிக்கு புறப்பட்டு சென்றது.

×

X