என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 218390
நீங்கள் தேடியது "சாட்சியம்"
ஊழல் வழக்கு விசாரணை குறித்து நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். #NawazSharif #PakistanCourt
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்து இருந்ததை ‘பனாமா லீக்ஸ்’ வெளியிட்டு இருந்தது. இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு, நவாஸ் ஷெரீப்பை பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது.
இந்த ஊழல் வழக்கில் நவாஸ் குடும்பத்தினர் மீது விசாரணை நடத்தி வரும் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு, இந்த வழக்கில் சாட்சியம் அளிக்குமாறு நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் முகமது சப்தார் ஆகியோருக்கு உத்தரவிட்டு இருந்தது. இதற்காக 128 கேள்விகள் அடங்கிய பட்டியலை நவாஸ் ஷெரீப்பின் வக்கீலிடம் நீதிபதி ஒப்படைத்து இருந்தார்.
அதன்படி இந்த வழக்கில் நேற்று நவாஸ் ஷெரீப் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது லண்டன் அவென்பீல்டு குடியிருப்பில் வாங்கப்பட்டுள்ள வீடுகள் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘லண்டன் சொத்துகளை வாங்கவோ, அதற்கு உதவி புரியவோ இல்லை’ என கூறினார். மேலும் அந்த சொத்துக்கு தான் உரிமையாளர் இல்லை என மறுத்த நவாஸ் ஷெரீப், அதற்கான பணப்பரிமாற்றம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்தார். #NawazSharif #PakistanCourt

×

X