என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குண்டம்"
- கடந்த மாதம் 26-ந் தேதி புண்ணியார்ச்சனை, கொடி மரம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது.
- தர்மராஜா- திரவுபதி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர் :
பொங்கலூர் அருகே உள்ள கள்ளிப்பாளையத்தில் புகழ் பெற்ற திரவுபதி அம்மன் உடனமர் தர்மராஜா கோவில் உள்ளது. இந்த கோவிலில் 34 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் விழா நடைபெறுகிறது. இதனையொட்டி கடந்த மாதம் 26-ந் தேதி புண்ணியார்ச்சனை, கொடி மரம் நடுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. பின்னர் கிராம சாந்தி நிகழ்ச்சியும், இரவு பரந்தாமனும் பாஞ்சாலியும் என்ற தலைப்பில் சொற்பொழிவும் நடைபெற்றது. கடந்த 6-ந் தேதி கள்ளிப்பாளையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தக் கலசம் மற்றும் முளைப்பாலிகை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டது. மதியம் தர்மராஜா- திரவுபதி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு பவளக்கொடி கும்மியாட்டமும் நடைபெற்றது.
7-ந் தேதி உருவாரம் கொண்டு வருதலும், இரவு அம்மை அழைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று காலை குண்டம் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தர்மராஜா பொங்கல் விழாவும், மாவிளக்கு ஊர்வலம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இரவு ஆன்மிக சொற்பொழிவாளர் ஆனந்த் கிருஷ்ணனின் சொற்பொழிவு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று காலை 5 மணிக்கு தொடங்கி 7 மணி வரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து உச்சி கால பூஜையும், மாலையில் கலாசாரத்தை மீட்டெடுக்கும் கம்பத்து ஆட்டமும் நடைபெற்றது. நாளை (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
- சக்கரப்பட்டி சித்தா் ஜீவசமாதி ஆலயத்தில் அக்னி குண்டம் வைக்கப்பட்டு சிறப்பு யாகவேள்வி நடைபெற்றது.
- இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம்த்தில் இருந்து பாண்டமங்கலம் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் சக்கரப்பட்டி சித்தா் ஜீவசமாதி ஆலயத்தில் அக்னி குண்டம் வைக்கப்பட்டு சிறப்பு யாகவேள்வி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சக்கரப்பட்டி சித்தருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு சக்கரப்பட்டி சித்தரை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்க ப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை சக்கரப்பட்டி சித்தர் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்