என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆடிப்பெருந்திருவிழா"
- கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் அழகர்மலை அடிவாரத்தில் திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என்று புகழப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றான கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடிப்பெருந்திருவிழா சிறப்புடையதாகும்.
இந்த விழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத கள்ளழகர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் தற்போது வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இன்று இரவில் புஷ்ப பல்லக்கு சேவை நடைபெறும்.
நாளை தீர்த்தவாரி, 23-ந் தேதி உற்சவ சாந்தி நடக்கிறது. 4-ந் தேதி ஆடி அமாவாசை விழா நடைபெறும். இரவு கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருள்கிறார். அத்துடன் ஆடிப்பெருந்திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவும், கோவில் நிர்வாகமும் செய்து வருகின்றன.
- மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாகவும் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது.
- இரு ஆண்டாக ஆடிப்பெருந்திருவிழா நடக்கவில்லை.
உடுமலை:
திருப்பூர் மாவட்டத்தில் விவசாயம் பிரதானமாக உள்ளது. அமராவதி, பி.ஏ.பி., பாசன திட்டங்கள் மற்றும் இறவைப்பாசனம் என 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.'ஆடிப்பட்டம் தேடி விதை' என்ற முதுமொழிக்கு ஏற்ப நீர் நிலைகள் நிரம்பி இரு கரைகளையும் தொட்டுச்சென்று வேளாண்மை செழிக்க செய்யும் நீர் நிலைகளுக்கும், விதைகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில், கிராமங்களில் முளைப்பாரி இட்டு, ஆடிப்பெருக்கு அன்று, ஆறுகள், கால்வாய்களுக்கு எடுத்து வந்து, சுவாமியை வணங்கி, ஆறுகளில் முளைப்பாரி விட்டு மகிழ்வர்.
ஆடிப்பெருக்கு காரணமாக கணவர் ஆயுள் பெருக, பெண் தெய்வங்களை வணங்கி, பெண்கள் தாலி மாற்றுதல், கன்னிப்பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் உற்சாகமாக நீரிலும், நிலத்திலும் விளையாடி மகிழும் விழாவாகவும், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாகவும் ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது.
மாவட்டத்தின் விவசாயத்தை கொண்டாடும் வகையிலும் திருமூர்த்தி அணையில் பஞ்சலிங்கம் அருவி, மும்மூர்த்திகள் எழுந்தருளும் அமணலிங்கேஸ்வரர் கோவில், நீச்சல்குளம், அணை என சுற்றுலா மையமாக உள்ளதால் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டு தோறும் 'ஆடிப்பெருந்திருவிழா' கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் பெரிய அளவிலான அரங்கு அமைக்கப்பட்டு, 30க்கும் மேற்பட்ட அரசுத்துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்படும்.அதோடு கிராமிய கலை நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும், பாரம்பரிய கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதோடு அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும்.கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த இரு ஆண்டாக ஆடிப்பெருந்திருவிழா நடக்கவில்லை. நடப்பாண்டு ஆகஸ்டு 3-ந்தேதி, 'ஆடி 18' வருவதால் நடப்பாண்டு திருமூர்த்திமலையில் ஆடிப்பெருந்திருவிழா கொண்டாட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்