search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எளிய மக்கள்"

    • திருவெண்ணைநல்லூரில் ஜமாபந்தி நிறைவு: 170 பயனாளிகளுக்கு ரூ. 16 லட்சம் நலத்திட்ட உதவிகள்அமைச்சர் பொன்முடி அவர்களால் வழங்கப்பட்டது.
    • விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார்.எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, மணிக்கண்ணன், மாவட்ட கவுன்சிலர்கள் விசுவநாதன், சந்திரசேகரன், யூனியன் தலைவர் ஓம்சிவசக்திவேல், பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூக பாதுகாப்பு தனித்துணை கலெக்டர் விசுவநாதன் வரவேற்றார்.

    விழாவில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு 170 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சம் மதிப்பில் பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில்தமிழக முதல்-அமைச்சர் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். தொகுதி மக்கள் தங்கள் கிராமத்தின் குறைகளை சேர்மன் ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர் ஆகியோரிடம் மனுகொடுங்கள் என்னிடமும் ஒரு மனு கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இதில் தி.மு.க. நகர செயலாளர் பூக்கடை கணேசன், எரளூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாஜலபதி, ஏமப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் தேவிசெந்தில், செம்மார் ஊராட்சி மன்ற தலைவர் ஷீபாராணி ஏழுமலை, தலைமைக் கழக பேச்சாளர் சிறுவானூர் பரசுரான் மற்றும்அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

    ×