என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளி"
- 1-ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டனர்.
- மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
திருப்பூர் :
திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் அமைந்துள்ள கொங்குவேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. 1-ம்வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் ஓவியம் வரைதல், கட்டுரை, இசைப் போட்டி என பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டனர்.
அறக்கட்டளையின் தலைவர் பெஸ்ட் ராமசாமி மற்றும் உபதலைவர்கள் முருகசாமி, குப்புசாமி , செயலாளர் கீதாஞ்சலி ,கோவிந்தப்பன் ,பொருளாளர் கந்தசாமி , இணைச்செயலாளர் துரைசாமி ,பள்ளியின் முதல்வர் சுமதி,துணை முதல்வர் விஜயா மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
- பள்ளி விளையாட்டு மற்றும் செயல்பாடுகள் மேம்பாட்டு அமைப்பு சார்பில் டெல்லி நொய்டாவில் நடைபெற்றது.
- முதல் பரிசான தங்கப் பதக்கத்தை மாணவிகள் வென்றனர்.
திருப்பூர் :
தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி பள்ளி விளையாட்டு மற்றும் செயல்பாடுகள் மேம்பாட்டு அமைப்பு சார்பில் டெல்லி நொய்டாவில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் கலந்து கொண்ட திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பிளஸ்-2 மாணவிகளான சத்யா, நிஷாந்தி ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்று, முதல் பரிசான தங்கப் பதக்கத்தை வென்றனர். தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகள் சத்யா, நிஷாந்தி ஆகியோரை பள்ளி தலைவரும், தாளாளருமான பெஸ்ட் எஸ்.ராமசாமி தலைமையில், துணை தலைவர்கள் டிக்சன் ஆர்.குப்புசாமி, பிவிஎஸ் பி.முருகசாமி, செயலாளர் கீதாஞ்சலி எஸ்.கோவிந்தப்பன், பொருளாளர் ஓகே எம்.கந்தசாமி, இணை செயலாளர் என்.டி.எம். என்.துரைசாமி மற்றும் பள்ளி முதல்வர் சுமதி, ஆசிரிய-ஆசிரியைகள், சக மாணவர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.
- 4 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
- அ.கோ.சுதர்ஷிகா 600க்கு 597 மதிப்பெண்கள் பெற்றார்.
அனுப்பர்பாளையம் :
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அ.கோ.சுதர்ஷிகா 600-க்கு 597 மதிப்பெண்கள் பெற்றார்.
மேலும் அந்த மாணவி கணக்குப்பதிவியல், வணிகவியல், பொருளியல், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் உள்ளிட்ட 4 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவி சுதர்ஷிகாவுக்கு பள்ளி தாளாளரும், கொங்கு வேளாளர் அறக்கட்டளை தலைவருமான பெஸ்ட் எஸ்.ராமசாமி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள், பள்ளி முதல்வர், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், அறக்கட்டளை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ-மாணவிகள் ஆகியோர் இனிப்பு வழங்கியும், பூங்கொத்து கொடுத்தும் பாராட்டினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்