search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அமைச்சர்கள்"

    • மக்களிடம் எதிர்மறையான மற்றும் தவறான கதைகள் பரப்பப்படுகிறது.
    • முக்கியப் பிரச்சனைகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு 3-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் தனது அமைச்சரவையில் முதல் முறையாக சேர்க்கப்பட்ட மந்திரிகளை சந்தித்து பேசினார்.

    டெல்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் நடந்த இந்த சந்திப்பு 5 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. அப்போது மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

    மோடி பேசுகையில், `அனைத்து நிலைகளிலும் முடிவெடுப்பதை விரைவுப்படுத்த வேண்டும். அரசுக்கு எதிராக கூறப்படும் தவறான தகவல்களை முறியடிக்கும் வகையில், அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் குறித்து அனைத்து மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளும் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    சாமானியர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையை மாற்றுவதற்கு அரசாங்கம் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

    ஆனால் மக்களிடம் எதிர்மறையான மற்றும் தவறான கதைகள் பரப்பப்படுகிறது. இதை முறியடிக்க பொது மக்களுக்கு சரியான தகவல்களை அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

    மக்களுக்காக ஓய்வின்றி உழைக்க மந்திரிகள் தங்களை விரைவில் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். செயல், சீர்திருத்தம், மாற்றம், தகவல் என்ற 4 புதிய மந்திரங்களை மக்கள் சேவையின் போது அமைச்சரவை சகாக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறினார்.

    அரசின் செயல்பாடுகள், சாதனைகள், பிரசாரம் மற்றும் முக்கியப் பிரச்சனைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    மத்திய அரசு பொறுப்புடன் செயல்படுகிறது என்ற செய்தியை சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

    சமூக ஊடகங்களின் மக்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.

    மேலும் 3-வது முறையாக பதவியேற்று 100 நாட்களை நிறைவு செய்யும் போது அந்தந்த அமைச்சகங்களின் 10 முக்கிய முடிவுகள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். அவற்றை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பிரசாரங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று மந்திரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

    அரசின் திட்டங்களை தடையின்றி செயல்படுத்த அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

    நாட்டில் சுகாதாரம், கல்வி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பான விளக்க காட்சிகள் இந்த கூட்டத்தில் இடம்பெற்றன.

    ஒவ்வொரு துறையிலும், அமைச்சகத்திலும் மனித வளத்தை மறுசீரமைப்பதற்கான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கும், அனைத்து ஊழியர்களின் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துமாறும் உயர் அதிகாரிகளை பிரதமர் மோடி கேட்டு கொண்டார்.

    • 17-வது மக்களவையின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் நிறைவடைகிறது.
    • மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லி சாணக்ய புரியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் இன்று நடைபெற்றது.

    பாரதீய ஜனதா கட்சியின் 2-வது ஆட்சிக் காலத்தில் இறுதியாக நடைபெறும் மத்திய அமைச்சர்கள் கூட்டம் இதுவாகும்.

    தற்போதைய 17-வது மக்களவையின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் நிறைவடைகிறது. தேர்தல் தேதிகள் அடுத்த சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது போன்ற பரபரப்பான சூழலில் மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

    இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி மற்றும் மக்கள் நலப்பணிகளின் அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெல்ல இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    இந்த விவகாரங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.

    நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாரதீய ஜனதா முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருக்கிறது. 

    அடுத்த வாரம் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூடி வேட்பாளர்களை தேர்வு செய்ய உள்ளது. ஆனால், காங்கிரஸ் வேட்பாளர்கள அறிவிக்கப்படும் முன்பே தேர்தல் பிரசாரத்தை தொடங்க பாரதீய ஜனதா மூத்த தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    இதுபற்றி இன்று நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள் எந்தெந்த மாநிலங்களுக்கு சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என்று நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டது. அப்போது 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் விளக்கி கூறி பிரசாரத்தை தீவிரப் படுத்தும்படி பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

    மேலும் பாரதீய ஜனதாவின் 2-வது வேட்பாளர்கள் பட்டியல் பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    • மத்திய அமைச்சர்கள் பியூஷ்கோயல், முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கலந்துரையாடினர்.
    • பஞ்சு விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அமைச்சரிடம் அழுத்தமாக தெரிவிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீரம்பாளையம் நேதாஜி அப்பேரல் பார்க்கில் உள்ள தொழிற்பூங்காவில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, ஜவுளித் துறை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிற்சாலை இயங்கும் முறை, நவீன எந்திரங்களின் பயன்பாடு, தொழிலாளர்கள் நலன் குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தனர். அப்போது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மற்றும் தொழில் துறையினர் பலர் உடனிருந்தனர்.

    பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த பெரிய திரையில் பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சியை பார்வையிட்டனர். இதில் தொழில் துறையினர் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து திருமுருகன்பூண்டி பாப்பீஸ் ஓட்டலில் திருப்பூர் பின்னலாடை துறையினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மத்திய அமைச்சர்கள் பியூஷ்கோயல், முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கலந்துரையாடினர்.

    இதில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவர் சக்திவேல் நினைவு பரிசை வழங்கினார். தொடர்ந்து, பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், ஏற்றும தியாளர் சங்கத்தினர், டையிங் அசோசியேஷன் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் வழங்கினர்.

    பஞ்சு விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை அமைச்சரிடம் அழுத்தமாக தெரிவிக்கப்பட்டது. வரும் சீசன்களில் இந்திய பருத்தி கழகம், அதிக அளவு பஞ்சு கொள்முதல் செய்து இருப்பு வைக்கவேண்டும். சந்தையில் விலை ஏறும்போது, கையிருப்பு பஞ்சை விடுவித்து விலையை சீர்படுத்த வேண்டும்.பின்னலாடை துறை சார்ந்த ஆராய்ச்சி மையத்தை திருப்பூரில் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    ×