என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மும்பை கட்டிட விபத்து"
- கட்டிட இடிபாடுகளில் இருந்து ஒரு பெண்ணை உயிருடன் மீட்டபோது அங்கிருந்தோர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
- குர்லாவில் கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் இடிபாடுகளில் இருந்து 2 புறாக்கள் உயிருடன் மீட்கப்பட்டன.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மாநிலத்தின் குர்லாவின் கிழக்கு பகுதியில் உள்ள நாயக் நகரில் 4 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடம் நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்தது.
தகவலறிந்து தீயணைப்புப் படையினரும், போலீசாரும் சம்பவ இடம் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 20க்கும் மேற்பட்டோரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர்.
இதற்கிடையே, குர்லா கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
குர்லாவில் கட்டிட இடிபாடுகளில் இருந்து ஒரு பெண்ணை உயிருடன் மீட்டபோது அங்கிருந்தோர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மேலும், 2 புறாக்களும் உயிருடன் மீட்கப்பட்டன.
இந்நிலையில், மும்பை கட்டிட விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
- கட்டிட இடிபாடுகளில் மீட்கப்பட்ட பலர் படுகாய்ம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- மகாராஷ்டிரா மாநில மந்திரி ஆதித்ய தாக்கரே சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தின் குர்லாவின் கிழக்கு பகுதியில் உள்ள நாயக் நகரில் 4 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடம் நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்தது.
தகவலறிந்து தீயணைப்புப் படையினரும், போலீசாரும் சம்பவ இடம் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 20க்கும் மேற்பட்டோரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர்.
மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் 3 பேர் பலியானார்கள்என்றும், மேலும் பலர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், குர்லா கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 13 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு காட்கோபர் மற்றும் சியோன் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
- காட்கோபர் பகுதியில் உள்ள ராஜாவாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 3 பேர் பலியானார்கள்.
மும்பை:
மும்பை குர்லா கிழக்கு பகுதியில் உள்ள நாயக் நகரில் 4 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது.
இந்த கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது. நேற்று இரவு 11.50 மணி அளவில் இந்த சம்பவம் நடந்தது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
இதுதொடர்பாக தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினரும், போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு காட்கோபர் மற்றும் சியோன் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
காட்கோபர் பகுதியில் உள்ள ராஜாவாடி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 3 பேர் பலியானார்கள்.
மேலும் 12 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சம்பவ இடத்துக்கு போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் வந்தபோது அங்கு சுமார் 20 முதல் 25 பேர் வரை சிக்கி இருக்கலாம் என்று தெரிவித்தனர். எனவே மற்றவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் 2 மீட்பு வேன்களும், 12 தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் மீட்பு பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அங்கு மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
இடிபாடுகளில் இருந்து ஒரு பெண்ணை உயிருடன் மீட்ட போது அங்கு நின்றவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
மகாராஷ்டிரா மாநில மந்திரி ஆதித்ய தாக்கரே சம்பவ இடத்தை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. அந்த கட்டிடம் மிகவும் பலவீனமாக இருந்தது. எனவே கட்டிடங்களை பொதுமக்கள் காலி செய்யுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து பொதுமக்கள் அங்கு வசித்து வந்தனர்.
மாநகராட்சி அறிவிப்புகளை வெளியிடும்போது பொது மக்கள் கட்டிடங்களை காலி செய்ய வேண்டும். இல்லை என்றால் இதுபோன்ற மோசமான சம்பவங்கள் நடக்கும். கட்டிடம் இடிந்து விழுந்தது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
இப்போதைக்கு கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அனைவரையும் மீட்ட பிறகு கட்டிடங்களில் வசிப்பவர்களை காலிசெய்வது தொடர்பாகவும், கட்டிடத்தை இடிப்பது பற்றியும் பரிசீலிப்போம். கட்டிடத்தை இடிப்பதால் அருகில் வசிக்கும் மக்கள் சிரமப்படக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.