search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திட்டத்தை"

    • சத்தியமங்கலம் அடுத்த ராஜன் நகரில் மண்வளம் பாதுகாப்பு இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.
    • இதில் காவேரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்றார்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்த ராஜன் நகரில் மண்வளம் பாதுகாப்பு இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இதில் காவேரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்றார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    சத்தியமங்கலம் பகுதியில் மல்லிகை பூ நறுமண ஆலை அமைக்க வேண்டும். குளிர்சாதன வசதி கொண்ட கிடங்குகளை ஏற்றுமதி நிலையங்களில் அனைத்து அடிப்படை வசதிகள் கொண்ட ஏற்றுமதி முனையத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வர வேண்டும்

    வாழை மற்றும் பழங்கள் வகைகள் அனைத்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து லாபகரமான விலை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் காங்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.

    உரத்தட்டுப்பாடு மிக தீவிரமாக உள்ளது. உரம் விலை ஏற்றம் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. இணை ஈடுபொருட்கள் கிடைத்தால் மட்டுமே யூரியா உள்ளிட்ட உரங்கள் கிடைக்கும் என நிலை தொடர்கிறது. இதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

    ஒருங்கிணைந்த கூட்டுறவு நிறுவனம் மத்திய அரசு அறிவித்ததை வரவேற்கி றோம். அதை விரைவில் நடைமுறை ப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அம்மாபேட்டை ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
    • இந்த கூட்டத்தில் மேட்டூர் உபரி நீர் திட்டமான அந்தியூர் பவானி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள தோனி மடுவு திட்டத்தினை விரைவில் தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை ஜனநாயக மக்கள் உரிமை கழகத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எ.கேசவன் தலைமை தாங்கினார்.

    அம்மாபேட்டை பேரூராட்சி தலைவர் பாரதி என்கிற கே.என் வெங்கடாசலம், பேரூர் தி.மு.க. செயலாளர் எஸ்.பெரியநாயகம் மாவட்ட வழக்கறிஞர் தலைவர் ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் சரவணன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி.பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் சாமி என்கிற ரத்தினம், மாவட்டத் தலைவர் கந்தசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    இந்த கூட்டத்தில் மேட்டூர் உபரி நீர் திட்டமான அந்தியூர் பவானி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள தோனி மடுவு திட்டத்தினை விரைவில் தொடங்க வேண்டும் மற்றும் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் பணியாற்றிய ஒருசில காவலர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்கிட மாவட்ட காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேருந்து நிறுத்தத்தில் மேட்டூர், ஈரோடு, அந்தியூர், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக அளவில் பொதுமக்கள் பேருந்துகளில் பயணம் செய்யும் நிலையில் அப்பகுதியில் பெண் பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் மொபைல் கழிவறை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ஜனநாயக மக்கள் உரிமைக் கழகம் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.பி.முருகேசன்,ரவிச்சந்திரன்,சண்முகசுந்தரம் நாச்சிமுத்து மற்றும் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×