என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பயிற்சி ஆட்டம்"
- வங்காள தேசத்துடனான பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- சாஹிப் அல் ஹசன் - மஹமதுல்லா ஜோடி சிறப்பாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினர்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் நேற்று (ஜூன் 1) தொடங்கியது. நேற்றைய தினம் அமெரிக்கா - கனடா மற்றும் இந்தியா- வங்காள தேச அணிகள் பயிற்சி ஆட்டத்தில் மோதின. வங்காள தேசத்துடனான பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சஞ்சு சாம்சன் 6 பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் எம்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். அடுத்து ரோகித் சர்மா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 32 பந்தில் 53 ரன்கள் (தலா நான்கு பவுண்டரி, சிக்ஸ்) எடுத்து ரிட்டையர்டு அவுட் மூலம் வெளியேறினார்.
அடுத்து சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார். ரோகித் சர்மா 19 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் தனது பங்கிற்கு 18 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். ஷிவம் டுபே 16 பந்தில் 14 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 40 ரன்கள் (2 பவுண்டரி, 4 சிக்ஸ்) அடிக்க இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.
இதைதொடர்ந்து பேட்டிங் இறங்கிய வங்காள தேச அணிக்கு வலுவான பந்துவீச்சின் மூலம் டஃப் கொடுக்கும் வகையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. இதனால் வங்காள தேச அணி பேட்டிங்கில் திணறியது. களமிறங்கிய முதல் ஓவரிலேயே சவுமியா சர்கார் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து லிட்டன் தாஸும் ஆட்டமிழந்தார்.
தவ்ஹித் ஹரிதோய் சற்று அதிக நேரம் களத்தில் நீடித்தாலும் அது அணிக்கு பெரிதாக பலனளிக்கவில்லை. சாஹிப் அல் ஹசன் - மஹமதுல்லா ஜோடி சிறப்பாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புதான் 122 ரன்களை மட்டுமே வங்காளதேசத்தால் எட்ட முடிந்த நிலையில் 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
- பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இதனால் பயிற்சி ஆட்டத்தை ஆர்சிபி ரத்து செய்தது.
அகமதாபாத்:
ஐ.பி.எல். தொடரில் எலிமினேட்டர் சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதற்கான பயிற்சி ஆட்டம் அகமதாபாத் குஜராத் கல்லூரி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை பெங்களூரு அணி நேற்று ரத்து செய்தது. மேலும், செய்தியாளர் சந்திப்பையும் ரத்து செய்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை இரவு அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 4 பேரை குஜராத் போலீசார் கைதுசெய்தனர். அவர்களது இடங்களை சோதனை செய்தபின் ஆயுதங்கள், சந்தேகத்திற்கு இடமான வீடியோக்கள், குறுஞ்செய்திகளை போலீசார் மீட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, ஆர்சிபி அணியின் பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
விராட் கோலி அகமதாபாத்திற்கு வந்த பிறகு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதைப் பற்றி அறிந்தார். அவர் ஒரு தேசிய பொக்கிஷம், அவருடைய பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை என போலீசார் தெரிவித்தனர். அகமதாபாத்தில் உள்ள இரு அணி விடுதிகளுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
- முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 6 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது.
- இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 23-ந் தேதி பாகிஸ்தானை எதிர் கொள்கிறது.
பிரிஸ்பேன்:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வரும் 23-ந் தேதி பாகிஸ்தானை எதிர் கொள்கிறது.
அதற்கு முன்னதாக இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. நேற்றைய முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 6 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது.
2-வது பயிற்சி ஆட்டம் பிரிஸ்பேன் மைதானத்தில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் நியூலாந்து அணியுடன் இந்திய அணி மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி நம்பிக்கையுடன் விளையாட முடியும் என கருதப்படுகிறது.
முன்னதாக குரூப்-1 பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து அணி முதல் பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறும் மற்ற பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
- அதிரடியாக விளையாடிய ஹூடா 59 ரன்கள் எடுத்தார்.
- உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டெர்பிஷயர்:
டெர்பிஷயர்-இந்தியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் நேற்று நடந்தது. இந்திய அணியின் கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டார். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. புவனேஸ்வர் குமார், ஹர்த்திக் பாண்ட்யா, ஹர்சல் படேல், இஷான் கிஷன், சாஹல், திரிபாதி ஆகியோர் இந்த அணியில் இடம் பெறவில்லை.
முதலில் பேட்டிங் செய்த டெர்பிஷயர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்ட்வா-சாம்சன் ஜோடி களமிறங்கியது. ருதுராஜ் 3 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து ஹூடா-சாம்சன் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 38 ரன்கள் எடுத்து சாம்சன் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ஹூடா 59 ரன்னில் வெளியேறினார். அயர்லாந்தை தொடர்ந்து இந்த போட்டியிலும் ஹூடாவின் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். அடுத்ததாக சூர்யகுமார் யாதவ் 36 தினேஷ் கார்த்திக் 7 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
16.4 ஓவரில் 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்