search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவறி கீழே விழுந்து"

    • சதாம் உசேன் தென்னை மரத்தில் ஏறி இளநீர் பறித்து கொண்டிருந்தார்.
    • அப்போது எதிர்பாராத விதமாக மரத்தில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார்.

    ஈரோடு:

    கேரளா மாநிலம் பாலக்காடு, கன்னிமாரி, தண்ணிகூண்டு பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன் (30). இவர் ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் தங்கி டிரைவராக வேலை பார்த்து வந்தார். செம்பூத்தாம்பாளையத்தில் உள்ள நாய் பண்ணையில் நண்பருடன் தங்கி வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று சதாம் உசேன் தென்னை மரத்தில் இளநீர் பறிக்க வேண்டி மரத்தில் ஏறி இளநீர் பறித்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக தென்னை மரத்தில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் தொடை, இடுப்பு, கை போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சதாம் உசேன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமையாள் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
    • பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஈரோடு:

    கோபிசெட்டிபாளையம் சீதாலட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ராமையாள் (80). இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மூதாட்டி ராமையாள் மட்டும் ஆடு மேய்த்துக்கொண்டு தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு ராமையாள் உறவினர் பிரதீப்குமாருடன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    பிரதீப்குமார் வண்டியை ஓட்ட பின்னால் ராமையாள் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். பச்சைமலை ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக ராமையாள் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராமையாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாதேஷ் லாரியில் இருந்து கீழே இறங்கும்போது கால் தவறி கீழே விழுந்தார்.
    • தலை மற்றும் வலது முழங்கையில் பலத்த அடிபட்டது.

    ஈரோடு:

    கர்நாடகா மாநிலம் மார்ட்டல்லி, கொல்லேகால் தாலுகா, ஒட்டரெதொட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (38). லாரி கிளீனர். இன்னும் திருமணம் ஆகவில்லை.

    கடந்த 20 நாட்களுக்கு முன்பு சேலம் மேட்டூர் சேத்தான் கோட்டாயை சேர்ந்த தனது தாய் மாமன் பாலசுப்பிர–மணியம் என்பவருக்கு சொந்தமான லாரியில் கிளீனராக வேலைக்கு சேர்ந்து உள்ளார்.

    இந்நிலையில் சம்பத்தன்று கர்நாடக மாநிலத்தில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டம் சிவகிரி கைகாட்டி அருகே உள்ள ஒரு தனியார் ரைஸ் மில்லுக்கு மாதேஷ் வந்துள்ளார்.

    நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் நெல் மூட்டைகளை இறக்காமல் நெல் மூட்டைகளுடன் தலைய நல்லூர் ஈஸ்வரன் கோவில் அருகே லாரியை நிறுத்திவிட்டு பாலசுப்பிரமணி மற்றும் மாதேஷ் இருவரும் படுத்து தூங்கினர்.

    பின்னர் காலை 8 மணி அளவில் மாதேஷ் லாரியில் இருந்து கீழே இறங்கும்போது கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலை மற்றும் வலது முழங்கையில் பலத்த அடிபட்டது.

    இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோத்து விட்டு மாதேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சரவணகுமார் கேப்பின் மீது ஏறி மரக்கிளையை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி சரவணகுமார் கீழே விழுந்தார்.
    • இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அடுத்த தாமரை பாளையம் பாரதிநகரை சேர்ந்தவர் சரவணகுமார் (45). லாரி டிரைவர்.

    சம்பவத்தன்று சரவண குமார் சோளம் லோடு ஏற்றிக்கொண்டு லாரியை புதிய கூட்செட்டில் இருந்து பில் வாங்குவதற்காக சென்னிமலை ரோட்டில் உள்ள பழைய கூட் செட்டுக்கு லாரியை ஓட்டி சென்றார்.

    அப்போது நுழை வாயிலில் இருந்த மரக்கிளை லாரியின் கேப்பின் மீது மோதி விட்டது. அதை சரி செய்ய சரவணகுமார் கேப்பின் மீது ஏறி மரக்கிளையை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி சரவணகுமார் கீழே விழுந்தார்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி சரவணகுமார் இறந்தார்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று ஜோதிநாதன் பாலப்பாளையம் ரைஸ் மில் வீதியில் உள்ள குப்புசாமி என்பவரது வீட்டில் உள்ள தென்னை மரத்தை வெட்டுவதற்காக ஏறிக் கொண்டிருந்தார்.
    • இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த பொம்மநாயக்க ன்பாளையம், காந்தி நகரைச் சேர்ந்தவர் ஜோதிநாதன் (73).

    சம்பவத்தன்று ஜோதிநாதன் பாலப்பாளையம் ரைஸ் மில் வீதியில் உள்ள குப்புசாமி என்பவரது வீட்டில் உள்ள தென்னை மரத்தை வெட்டுவதற்காக ஏறிக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஜோதிநாதன் தென்னை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஆம்புலன்சில் வந்த மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதித்த போது ஜோதிநாதன் இறந்தது தெரிய வந்தது.

    இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திய போது எதிர்பாராத விதமாக லதா ரோட்டில் தவறி விழுந்துள்ளார்.
    • இந்த சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு லட்சுமி நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (59). இவரது மனைவி லதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராஜா திருப்பூரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டெக்னிக் பிரிவில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் ராஜா சம்பவத்தன்று பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்காக தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு சென்றார். வண்டியை ராஜா ஓட்ட பின்னால் லதா அமர்ந்து வந்தார்.

    சித்தோடு சமத்துவபுரம் மேடு அருகே கோவை- சேலம் பைபாஸ் ரோடு அருகே வந்த போது லதாவுக்கு திடீரென மயக்கம் வந்துள்ளது. அதையடுத்து ராஜா மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திய போது எதிர்பாராத விதமாக லதா ரோட்டில் தவறி விழுந்துள்ளார்.

    இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மனைவியை சிகிச்சைக்காக நசியனூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ராஜா கொண்டு சேர்த்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலயின்றி லதா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×