என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொங்கல் பூச்சாட்டு விழா"
- முளைப்பாரி ஊர்வலம், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையத்தில், மதுரை வீரன், பட்டத்தரசி அம்மன், மாகாளியம்மன், முனியப்ப சுவாமி கோவில் உள்ளது. இந்த நிலையில், அந்தக் கோயிலில் பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இதில் முளைப்பாரி ஊர்வலம், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
- கணபதி ஹோமம், கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது.
- ஸ்ரீ மாரியம்மனுக்கு உச்சிகால பூஜை நடந்தது.
அவினாசி :
அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையத்தில் பிரசித்திபெற்ற மகாமாரி யம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் நேற்று பொங்கல் விழா விமர்சையாக நடந்தது.
முன்னதாக கடந்த மாதம் 29-ந் தேதி கணபதி ஹோமம், கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. 4ந் தேதி அம்மனுக்கு சிறப்பு பூஜை, மற்றும் பூச்சட்டி எடுத்து ஆடுதல் நடந்தது. 5ந் தேதி படைக்கலம் எடுத்தல், அம்மனை அழைத்தல், கரகம் எடுத்தல் நடந்தது. 6-ந் தேதி காலை 5 மணிக்கு மாவிளக்கு எடுத்தல், ஸ்ரீ மாரியம்மனுக்கு உச்சிகால பூஜை நடந்தது. மாலை 3 மணிக்கு முளை ப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில் வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த திரளா னோர் கலந்துகொண்டனர்.
- அவிநாசி லிங்கே ஸ்வரர் கோவிலில் இருந்து பெண்கள், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.
- அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
அவிநாசி :
அவிநாசி புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீ அரசமரத்து விநாயகர் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெற்றது.இதற்காக அவிநாசி லிங்கே ஸ்வரர் கோவிலில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அதன்பின், அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இரவு படைக்கலம் எடுத்தல், அம்மை அழைத்தல் நடைபெற்றது. பெண்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
மஞ்சள் நீராடுதல், அம்மன் திருவீதி உலா வருதல், மறுபூஜையூடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெற்றது. விழாவை முன்னி ட்டு பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
- விநாயகர் வழிபாடு, கணபதி, நவகிரக ஹோமம், மகாலட்சுமி, சரஸ்வதி பூஜைகளும் நடந்தது.
- காமாட்சியம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்து வருகிறார்.
பல்லடம் :
பல்லடம் சித்தம்பலத்தில் காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது.இங்கு ஆண்டு தோறும் பொங்கல் பூச்சாட்டு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தொடர்ந்து 6 வது ஆண்டு பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த 28ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதை தொடர்ந்து, விநாயகர் வழிபாடு, கணபதி, நவகிரக ஹோமம், மகாலட்சுமி, சரஸ்வதி பூஜைகளும் நடந்தன. விழாவில்கா மாட்சியம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில், வெவ்வேறு வடிவங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்து வருகிறார்.
நேற்று பொங்கல்,பூச்சாட்டு விழாவில் மாப்பிள்ளை அழைப்பு, திருக்கல்யாணம், தேர் பவனி உள்ளிட்டநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்